Thursday, April 28, 2011

அன்புள்ள அம்மாவுக்கு ...

Photo Courtesy : http://www.mnn.com


குறிப்பு - இக்கவிதை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் வார விழாவையொட்டி நடைபெற்ற கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.

ன்புள்ள அம்மாவுக்கு
அன்பு (?) மகன் எழுதும்
அழகிய மடல் .
ச்சரியப்படாதே !
அம்மா
கடிதங்கள் ஆச்சரியம் தான்
கணினி உலகில்.
பாசங்கள் ஆச்சரியம் தான்
மனிதம் மடிந்த - இந்த மண்ணில்.

ன்றுமே! நீ எனக்கொரு
அதிசயம் அம்மா
அதிசயங்களே கண்டு வியக்கும்
அதிசயம் நீ அம்மா!

நான் கேள்விப்பட்டதுண்டு...
அம்மம்மா சொன்னார்கள்;
என்னை சுமப்பதற்கு முன்பு
"மலடி" என்ற பட்டத்தை 
மூன்றாண்டு சுமந்தயாமே !
அம்மம்மா சொன்னார்கள்.

ப்பத்தா சொன்னார்கள்;
மணம் முடிந்த முதல்
அரை வருடம் உனக்கு
அடுப்பங்கறை அத்துப்படி இல்லையாமே !
அப்பத்தா சொன்னார்கள்.

ப்பா சொன்னார்கள்;
அடுத்த வீட்டுடன் 
அடிக்கடி
அடிதடியில் நிற்பாயாமே !
அப்பா சொன்னார்கள்.

த்தனை முறை அழுதிருப்பாய் ..
இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு.
அத்தனைக்கும் மகுடமாய்
உன்னை நான் அழவைத்தேனே!
அன்றைய நாள்
என்னென்ன நினைத்திருப்பாய்?

த்தனையும் நான் அறிவேன்!
அம்மா! நான் அறிவேன்.
னைத்து குற்றங்களும்
மன்னிக்கப்படும் ஒரே நீதிமன்றம்
உன் உள்ளம் தான் அம்மா
குற்றவாளி நானாக இருக்கையில் மட்டும்.

ண்மையில் தான் படித்தேன்
தாய்ப்பால் ...
அறிவை வளர்க்குமென்று
அதிகமாய் வளர்ந்ததால் என்னவோ! - உன்னை 
அனுப்பி வைத்துவிட்டேன்.

ன்று ஒரு நாள் 
அநாதைச்  சிறுவன்...
அர்த்தநாரீஸ்வரர் சாலையில்
" அம்மா தேடி அலைகிறேன் " - என்றான்
அவனை அழைத்து
அவனைக் கேட்டேன் - அம்மா 
அவன் சொன்னான்.

" தாய் -  தெய்வம்     
அதனால் தான் என்னவோ ! - அவள்
காட்சி கிடைக்கிறது
தவமிருப்பவர்களுக்கு மட்டும்"
மேலும் சொன்னான்...
" பிறந்தவுடன் எறிந்து விட்டார்கள் ;
தப்பில்லை ... தாய்ப்பால் தந்தபின்பு எறிந்திருக்கலாம்
நானாவது நடந்திருப்பேன் - என்
தமிழ் போல் நொண்டாமல்.
 
தேடல் தான் வாழ்க்கை என்றான்  
தேடித் திரிகிறானாம் தினத்தோறும்
அவன் அன்னையை...
தேகத்தில் வலிமையில்லாமல்.
றுதியாக அவன் கேட்டுக் கொண்டான்
"தந்து விடுங்கள்
தைரியத்தை தூக்கி எரியும் முன்பே - இல்லை
கொன்று விடுங்கள்
எங்களை மண்ணில் மலரும் முன்பே "

வன் வார்த்தையில்
வந்து சென்றதம்மா - உன் முகம்.
மைகளுக்குள் சிறைபிடிக்க
முடியவில்லை...
சிதறிவிடுகிறது என் கண்ணீர் - அன்று 
நீ சிந்தியது போல.
தற்குள்  அவள் கேட்டு விடுவாள்; 
உன்னை மறக்காமல்...
" இன்னமும் உங்க அம்மா ஞாபகம் போகலையா?"        

ன்னமா! யோசிக்கிறாய்
கடிதம் எதற்காக என்று தானே ?
இதோ சொல்லி விடுகிறேன்
ன்னைவிட்டுச் சென்றவரிடம் கேட்டுச்சொல் ...
இரண்டு இடம் காலியாய் இருக்குமா? என்று.
ன் மகன் 
இரண்டு மாதமாய் தேடி அலைகிறான் - எங்களுக்கான
முதியோர் இல்லத்தை.



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100




Monday, April 25, 2011

பனித்துளி சங்கர்



குறிப்பு : இக்கவிதை என் இணைய நண்பர் பனித்துளி  சங்கர் மற்றும் அவர் தமிழுக்காக  ...
அவரின் வலைப்பூ முகவரி -  http://www.panithulishankar.com/

னித்துளி
புனிதமானது ....
பனித்துளி
அழகானது...
பனித்துளி
உண்மையானது...
பனித்துளி
மென்மையானது...

ண்பா!!!
பனித்துளி மை  கொண்டு
ஆழ்கடல் அறிவு சேர்க்கும்
அற்புதம் யாரிடம் கற்றாய் ?

ரை நொடி உன் வலை படித்தால்
ஆழ் மனதில் பூ பூக்கும் !!
அடுத்த நொடி உன்னை வாழ்த்த
ஆயிரம் வார்த்தைகள் கை கோர்க்கும் !

ன் தமிழுக்கு மட்டும் தான்
தரம் உண்டு ..
தரணியில் உள்ள தவறுகளை தட்டிக் கேட்க !!

தொலைவில் நீ இருந்தாலும் - உன்
தமிழ் மட்டும் நான்
தொடும் தூரத்தில் ...

கட்டாய் பேசித்திரிபவர்களுக்கு மத்தியில்
பண்பாய்  பேசும்
பனித்துளி ...

ன் மைத்துளி
பிரபஞ்சத்தின் அறிவுத்துளி
காதலர்களின் கண்ணீர்த்துளி
தமிழின் தேன்த்துளி 
முகிலின் மழைத்துளி
காமத்தின் உயிர்த்துளி
கடவுளின் கவித்துளி

மொத்தத்தில் உன்னை
முத்தமிட மறந்தவர்களுக்கு  மத்தியில்
முத்தமிடுகின்றன என் தமிழ்  - உன்
தமிழை !!! 


-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Sunday, April 24, 2011

மலர் vs மங்கை

Copyright : Flickr


ன் அன்பே !
பூவிதழ்கள் சிந்தும் தேனும்
பூவை நின் இதழ்கள் சிந்தும் தமிழும்
ஒன்றோ! நன்றோ!

னதில் சத்தமிடும் உன் நினைவும்
மலரை சுற்றி வரும் மணமும்
ஒன்றோ! நன்றோ!
மலர்கள் பிரசவித்த கனியும் - உன்
நினைவுகள் பிரசவித்த கவிதையும்
ஒன்றோ! நன்றோ!

காசுக்காக கடத்தப்பட்ட கனியும் - உன்
கல்யாணத்திற்காக கடத்தப்பட்ட நம் காதலும்
ஒன்றோ! நன்றோ!

ன்பே ..
கனிகளின் கல்லறை தான்
மரங்களின் கருவறை - பலர்
காதலின் கல்லறை தான்
கவிதைகளின் கருவறை.

ன் மணவறையிலும்
என் பிணவறையிலும்
நாம் வேண்டுமானால் மறித்துப்  போகலாம் - ஆனால்
நம் நினைவுகள் !!! 
       


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100




Monday, April 18, 2011

ஏசுபிரான் அல்ல ....

Copyright : kmadisonmoore.blogspot.com

துன்பங்கள் உன்னைத் தொடும் போது ...
கண்ணை மூடு
கடவுளை நாடு
கவலைகள் விடு
கடமைகள் தொடு    
மனதின் வடு
என்னிடம் விடு 
மற்றவர்  துன்பங்களைத் தாங்கிக் கொள்ள 
நான் ஒன்றும் ஏசுபிரான் அல்ல ....
 
இருப்பினும் தாங்குகிறேன் ,
ஏனெனில் 
நீ எனக்கு மற்றவனல்ல !!!!




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


அட ! இன்னுமா தெரியவில்லை

Copyright : http://www.profimedia.com


ந்தோசமாய் மலர்ந்தது காலை - அந்த
சூரியனின் உதயத்தில் ...

ழக்கமாய் செல்லும் வகுப்பறைகள்
தினசரி வாசிக்கும் அதே முகங்கள்
எல்லாம் சரிவர இருந்தன முகத்தில் 
சந்தோசத்தைத் தவிர ...   

ந்நியர் போல் நண்பர்கள்
ஆளுக்கொரு திசையில்
அவரவர் புத்தகத்தோடு.  

முத்தமிட இதழ்களா தேவை?
அட! முத்தமிடுகின்றனவே  
விரல்களும் விழிகளும் 
புத்தகத்தின் பதிப்புகளோடு.

ச்சம், அடக்கம், அகங்காரம், அனுபவம்
அனைத்தும் காணலாம்
அவர்கள் விழிகளில் 
அன்று மட்டும்.

புத்தகத்தை சிறுபதிப்பு எடுத்து
சின்ன சின்ன இடைவெளிகளில்
சிதறாமல் ஒழித்து வைக்கும்
சில மாணவர்கள்    

மூளையை மட்டுமே நம்பி
முன்னுக்கு வரத் துடிக்கும்
முதல் மாணவர்கள்    

து நடந்தால் 
எனக்கென்ன என இருக்கும்
ஏராளமான மாணவர்கள் ! 

விதங்கள் ஆயிரமிருந்தாலும்
விழிகளில் ஒரே பயம் தான் .. 

திகாலை விழிப்பு
அரைகுறை சாப்பாடு
ஆண்டவநிடும் கோரிக்கை 
அவசரமாய் புரட்டிய பக்கங்கள்
அனைவரின் ஆசீர்வாதம்
அன்று மட்டும் பேசாத அவர்கள்
எல்லாம் இந்நாளின் சிறப்பு நிகழ்சிகள் !

 
த்தனை சிரமங்களுக்கு நடுவிலும்
அவர்களின் அவ(ள்/ன்)கள் சொல்லும்
ALL THE BEST ற்காக காத்திருந்த அவர்கள் !   

ட ! இன்னுமா தெரியவில்லை 
இன்று தான் அவர்களுக்கு பரீட்சை !!!




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Wednesday, April 13, 2011

வகுப்பறை

Copyright : Wikipedia



ரியைத் தோற்கடிக்கும்
கருமை கொண்ட
கரும்பலகை

 பாலை மிஞ்சிவிடும்
வெண்மையைக் கொண்ட 
சுண்ணாம்புக்கட்டி

ருப்பரும் வெள்ளையரும்
இணைந்தால் தான் அழகு பெறும்
உலகம் அழகு பெறும்
என்பதை உணர்த்தும் இவையிரண்டும்

டுக்குகள் மாறாமல் 
அழகாய் அடுக்கப்பட்டிருக்கும்
மரப்பலகைகள்

வ்வப்போது தென்றலோடு கலந்துவரும்
ஆசிரியரின் தாலாட்டு

விழிக்க மனம் நினைத்தாலும்
ஒற்றுக் கொள்ளாமல்
போராட்டம் நடத்தும் இமைகள்

சிரியரின் வார்த்தைகளை
அவரை விடவும்
அழகாய் உச்சரிக்கும் என் நண்பர்கள்

நேற்று பார்த்த 
திரைப்படங்கள், விளையாட்டு நிகழ்சிகள், பாடல்கள்
மறுஒளிபரப்பு செய்யப்படும்
எங்கள் வகுப்பு அலைவரிசையில்...

லகப்போர் எங்கள் வகுப்பிலும்
சுண்ணாம்புக் குண்டுகளோடு.

ர்ச்சுனனின் அம்புகளுக்கு இணையான 
அம்புகளாய் - என் நண்பர்கள்
விடுப்புமணி அடித்தவுடன்

ல்லோரும் சென்ற பின்பு
ஏக்கத்துடன் ஏங்கியிருக்கும் ஒரு ஜீவன்
அது வேறு யாருமல்ல - எனது 
வகுப்பறை தான் !  



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

                     

Tuesday, April 12, 2011

மூக்கு

Copyright : Wikipedia


குறிப்பு : இக்கவிதை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற   "அரங்கேறும் அங்கங்கள் "     கவியரங்கில் பதிவு செய்யப்பட்டு பாராட்டைப் பெற்றது. 

 ங்கீகரிக்கபடாத அங்கம்
அழகைச் சொல்ல அங்கம்
அறிவுக்குதவா அங்கம்
அவசியமில்ல அங்கம் - இவ்
அவையோரின் எண்ணம் - பலர்
அகத்தின் எண்ணமும் கூட !

ண்கள் கண்டதைக் காணச் சொல்லும்
செவிகள் வதந்திகள் கேட்கச் சொல்லும்
இதழ்கள் பொய்கள் பேசச் சொல்லும்
நாசி நல்லதை மட்டும் செய்யச் சொல்லும்.

னைத்து அங்கங்களும்
அழிவிற்கு வழிவிடும் - இவன் மட்டும் தான் 
ஆக்சிசனுக்கு வழிவிடுவான்.

ங்கங்கள் பழுதானவர்கள்
அகிலத்தில் உண்டு;
இவன் பழுதானவன்
எவ்வுலகினில் உண்டு.

பாண்டியனின் நாசி
நக்கீரர் புகழ் பாடச் செய்தது
சூர்ப்பநகையின் நாசி
இராமகாவியம் கூறச் செய்தது.

வமானத்தில் வீழ்பவனும் இவனே !
அகங்காரத்தில் எழுபவனும் இவனே !

" மூக்கிற்கு மேல் கோபம் " - அடைமொழி
காரணம்
அங்கத்தில் உயர்ந்தவன் மூக்கு.
அவனின் உயர்ந்தது உன் கோபமா?

வார்த்தைகள் மறித்துப்போகும் நேரத்தில் கூட
மூச்சுகள் பேசிக் கொள்ளும்.

யிரம் நட்சத்திரங்கள் ஆகாயத்தை அலங்கரித்தாலும்
மதியில்லையென்றால் மயக்கமில்லை.
ஆயிரம் அங்கங்கள் நம்மிடம் இருந்தாலும்
அலகு இல்லை என்றால் அழகு இல்லை.
 
விழிகள் ஓய்வு கொள்ளும் இமைமூடும் நேரத்தில்
இதழ்கள் ஓய்வு கொள்ளும் மௌனம் கொள்ளும் நேரத்தில்
செவிகள் ஓய்வு கொள்ளும் அமைதி உலவும் நேரத்தில்
கை, கால்கள் ஓய்வு கொள்ளும் துயில்பயிலும் நேரத்தில்
இவனும் ஓய்வு கொள்வான் இதயம் உறங்கும் நேரத்தில்.

வனிடம் பேசாதவர்கள் உண்டா?
மலர்கள் பேசும்; மணங்கள் பேசும்/
ஏன்!
கைக்குட்டை கூட பேசும்
ஜலதோஷம் வரும் பொழுது...

வானத்தின் நட்சத்திரம் 
தமிழச்சியின் மூக்குத்தி
அங்கத்தின் நட்சத்திரம் 
அவளுடைய மூக்கு.

ங்கங்கள் செத்துவிட்டால்
நாம் சாவதில்லை
இவன் செத்து விட்டால்
நாம் வாழ்வதில்லை

நேசிக்க மறந்தவர்கள் கூட சுவாசிக்க மறப்பதில்லை
சுவாசிக்க மறந்தவர்களை நாம் நேசிக்க நினைப்பதில்லை !!

மூச்சை துறந்தவனும் மனிதனல்ல!
மூக்கை மறந்தவனும் மனிதனல்ல !!



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100





பின் குறிப்பு

Copyright : souvenirsfromgreece.com


ம்பது பவுன் நகை வேண்டாம்
அடுக்குமாடி வீடு வேண்டாம்
அழகான கார் வேண்டாம்
அளவற்ற பொருட்கள் வேண்டாம்
வரதட்சணையாய் - வேண்டுமொன்று-
அவள்

பின் குறிப்பு : கற்போடும் ... காதலோடும் ...




-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100




Tuesday, April 5, 2011

சமர்ப்பணம்


டல் ஈந்த என்னருமை பெற்றோருக்கும்
உயிர்  ஈந்த நம்மில் உயர்ந்த இறைவனுக்கும்
அறிவிலியை அறிவொளியாய்  மாற்றிய ஆசானுக்கும்
தடையின்றி என் எழுத்தில் வரும் தங்கத் தமிழுக்கும்
கரம் பற்றி வழி நடத்தும் உறவுக்கும்
கண்ணீர் கண்டு கண் துடைக்கும் நட்புக்கும் – என்
கிறுக்கல்களை முத்தமிடும் உங்கள் கண்களுக்கும்
சமர்ப்பிக்கிறேன்!!
கவிதைகளையல்ல…..
சிதறல்களை.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



ஒரு தலைக் காதல்

Copyright : www.lovegurusrm.in


ம் காதல் என்றுமே
கானல் நீர் !
நான் மகிழ்வதோ நீரென்று
நீ நினைப்பதோ நிஜமன்றென்று.

ண்மையில் நான் தான் வெகுளி
உலக இயல்பு தெரியாத கோமாளி
அன்பை நாடும் அறிவிலி – மொத்தத்தில்
நீ ஒரு அறிவாளி.

ன்னுடன் உலகம் சுற்ற வேண்டும் – என்று
ஓராயிரம் முறை நினைத்திருக்கிறேன்;
உண்மையில் உன் உலகில்
ஓர் மூலையில்கூட நானில்லை – என்று
அண்மையில் தான் உணர்ந்திருக்கிறேன்.

ன்னுடைய நட்பு வட்டம்
உன்னுடைய நலம்விரும்பிகள்
உன்னுடைய ஆதரவாளர்கள்
உன்னுடைய அன்புக்குரியவர்கள்
அனைவருக்கும் உன்னைப் பிடிக்கும்
அதை நீ அறிவாய்
இவனுக்கும் உன்னைப் பிடிக்கும்
அதை நீ மறைப்பாய்.

ன்னை சந்திக்கும் பல சமயங்களில்
மௌனம் மட்டும் என் மொழியாக …
புன்னகை மட்டும் உன் பதிலாக.

காதல் பிச்சை ” கேட்கிறேன் – அது ஏனோ
தெரியவில்லை – என்னிடம் வரும் பொழுது மட்டும்
உனது பைகளில் பணமிருப்பதில்லை.

செய்வதைக் காட்டிலும் சொல்வது மேலானது
அன்பில்லா இடத்தில்…
சொல்வதைக் காட்டிலும் செய்வது மேலானது
அன்புள்ள இடத்தில்;

நீயே முடிவு செய்து கொள்
சொல்வதா! செய்வதா! என்று.

நான் தவறானவன் தான் – உன்
தகுதிக்கு குறைவானவன் தான்.
அறிவுக்குத் தெரிகிறது – பாவம் என்
அகம் மட்டும் அழுகிறது.
படிப்பிலும், பண்பிலும்,
பக்குவத்திலும், பழகுவதிலும் – நீ
புதியவள் – எனக்கு மட்டும்
புதிரானவள்.

ன் காதலும், கவிதையும் என்றுமே
உனக்கு நடிப்பு… – என்னை
நடிகனாய் அங்கீகரித்த முதல்
பல்கலைக்கழகமே
நன்றி !

ன்னுடையது
ஒரு தலைக் காதலா?
” இல்லை “
ன்று நீ சொல்லும் வரைக் காத்திருப்பேன்
ஒரு தலைக் காதலுடன் .



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



அவள் என்(ன) அவள் ?

Photo Courtesy : http://www.picstopin.com

த்தான் என்
அன்னை வீடு செல்கிறேன் – என்னை
அவமதித்ததற்காக.

ப்படி என்னடி சொல்லிவிட்டேன்
“அரைவேக்காடு” என்று தானே!
அதுவும் உன்னைக் கூட இல்லை சாப்பாட்டைத்தான்
அதனால் உண்ணக் கூட  இல்லை சாப்பாட்டைத்தான்.

ந்த நாள் முதல் இந்த நாள் வரை
உப்பில்லை உரைப்பில்லை
கசப்பில்லை காரமில்லை
வேண்டுமென்றா செய்வார்கள் சமையல்
இவையெல்லாம் வேண்டாமென்று.

ன்பே! நான் உன்னைக் காதலித்த போது…
கவிதையே! என்று அழைத்தேனே
அதன் அர்த்தத்தை அறியாயோ?

விளக்கில் விழுந்த விட்டில்பூச்சியல்லவா நான்
விடை தெரியவில்லை
கூறுங்கள் விடையை….
தாருங்கள் விடுதலையை .

புகுந்த எழுத்துக்கள்
பிறந்த இடம் நோக்கிச் செல்லா:
கவிதையே! நீ மட்டும் உன்
பிறந்த இடம் செல்லலாமா?

த்தான் அவை
உயிரற்ற வார்த்தைகள் – நானோ
உயிருள்ள கவிதை.

பூவே! என்று உன்னை புகழ்ந்ததற்காக
வாடுகிறாயே வேண்டாதற்க்கெல்லாம்.
வார்த்தையால் உங்களை வெல்பவர் யாருமில்லை:
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
விடைபெறுகிறேன்.

றுதியாக இரு நிமிடம்.
முதல் நிமிடம் நம்
காதல் கல்லறையில் காகிதப்பூ நட்டுச்செல் – மறு நிமிடம்
அம்மலர்க் கொண்டு – என்
மரணத்திற்கு மலர்வளையம் வைத்துச்செல்.

ன்னடி யோசிக்கிறாய்…
காகிதப்பூக்கள் எதற்காக என்றா?
வாசமுள்ள மலர்கள் – உன்
வாசத்தை சுமந்து – என்
சுவாசத்தை உயிர்பிக்கும்
பிணமான நான்
பிரசவிக்க விரும்பவில்லை.

வையெல்லாம் என்னால் செய்ய இயலா…
ஏன் ?

ங்கள் உயிர்பிரிந்த நொடியில்
பிரியும் என் உயிர்
பிறகெப்படி இவையெல்லாம்.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


புகைப்பிடிக்கலாமா?

©www.mos360.ru
ந்த கேள்விக்கான பதில் …..“இல்லை” என்பார்கள்  பெற்றோர்கள்;“ஆம்” என்பார்கள் கல்லூரிக் காளைகள்.திரைத்துரையைக்   கனவுத்தொழிற்ச்சாலை என்பார்கள். கல்லூரி கனவு உலகம். இங்கு அனைத்துமே அழகாகத்  தெரியும், தவறுகள் உட்பட.  Peer pressure , Style என  பல காரணங்களுக்காக  இளைஞர்களின் கைகளில் வளம் வருகிறான் இந்த சிகரட் எமன். 7G திரைப்படத்தில் ஒரு வசனம் இடம் பெறும்  “ நீ இழுத்து உப் உப் ன்னு விடுறியே! அது உங்க அப்பனோட ரத்தம் டா!” என்று. உண்மையில் அவன் இழுத்து விட்டுக்கொண்டிருப்பது அவனுடைய வாழ்நாளைத்தான்.
“ ஏன்டா! மச்சான் இப்படி தம் அடிச்சு உடம்ப கெடுத்துக்குற?” என்ற என்னுடைய கேள்விக்கு “Tension டா, Family problem, style மச்சி, love failure டா மாமு” என பல பதில்கள்.ண்பனுக்கான  வரையறை மீறி என்னால் பல சமயங்களில் அவர்களைத் திருத்த முடிவதே இல்லை. என் கண் முன்னே என் தோழர்கள் தங்களுடைய ஆயுளைக் குறைத்துக்கொள்வதை நான் வெட்கமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.

ரசாங்கம் தன்னுடைய அத்தனை அஸ்திரங்களைப் பயன்படுத்தினாலும் இந்த சிகரட் எமனை மட்டும் ஒழிக்க முடியவில்லை. அனைத்து கல்லூரிகளிலும்  புகைபிடித்தல் syllabus இல் இல்லாமலே கட்டயப்பாடமாகக்   கற்பிக்கப்படுகிறது.தின் உச்சகட்டம் , மருத்துவக்கல்லூரி  என்பது மனதிற்கு வேதனையாக  இருக்கிறது. “ ஊருக்கு தான் உபதேசம்” என்பது மருத்துவக்கல்லூரி  மாணவர்களுக்குத்  தான் நன்கு பொருந்தும்.
அண்மையில் நடந்த கருத்துக்கணிப்பு  கூறுவது  என்னவென்றால்  உலகில்  புகைபிடிப்பதில்  50% பேர்  இளைஞர்கள். அதில்  20% பேர்  இளைஞிகள்.  இது  வளமான  வாழ்க்கைக்கு  வழி  வகுக்காது  என்பது  நிதர்சனமான  உண்மை.


புகைக்கிறாய் …. சாகிறாய் …..
உனது  உரிமை. உரிமை  என்பதை  விட  உனது  திமிரு  என்று  கூறலாம். அனால்  மற்றவர்கள். Passive Smoking, Public smoking மறைமுகமாக  பலரின்  வாழ்கையை  பதம்  பார்த்துக்  கொண்டிருக்கிறது.பொது  இடங்களில்  யாரேனும்  புகைப்பதைப்  பார்த்தால்  “பளார்” என்று  அரைய  வேண்டும்  போல்  தோன்றும். இருப்பினும்  நாகரீகம்  கருதி  நான்  செய்வதில்லை. நீங்களும்  என்னைப்  போல்  இருக்காதீர்கள் . பொது  இடங்களில்  புகைப்பவர்களைக்  கண்டால்  புரியச்  செய்யுங்கள்  இல்லை  புகார்  செய்யுங்கள் .புகைப்பவர்களே! உங்களால்  ஒரேயொரு  நன்மை  நாட்டின்  மக்கள்  தொகை  குறையும் . 


புகைக்காதீர்கள்! முடியவில்லை  என்றால்  பொது  இடங்களில்  புகைக்காதீர்கள்!




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



அன்புள்ள ஆசானுக்கு !


Photo Courtesy - surajsanap.wordpress.com


ன்புள்ள ஆசானுக்கு,
அன்பு ததும்பும் வார்த்தைகளோடு – உங்கள்
மாணவன்.
பிழையிருந்தால் மன்னிக்கவும்;
பிடித்திருந்தால் விமர்சிக்கவும்.

ப்பனுக்கும் ஆத்தாளுக்கும் அப்புறமாய்…
அதிகமாய் வசைபாடியது நீங்கள்தான்.
அப்பொழுது நாங்கள் கண்டுக்கொள்ளவில்லை
அப்புறம் தான் தெரிந்தது;
அறிவிற்கு புரிந்தது.
அத்தனையும் அன்பின் வெளிப்பாடு – நான்
அறிந்தேன் உலகை ஆசானோடு.

வேர்கள் கண்ணில் தெரிவதில்லை
விழுதுகளை நம்பி அவை வாழ்வதில்லை.
வேர்கள் தாங்கள்;
விழுதுகள் நாங்கள்.

நாங்கள்
முன்னேறும் பொழுதெல்லாம்
முழுஉலகமும் பொறாமைப்படும்
முதல்வகுப்பு ஆசான் தான்
முன்னின்று பெருமைப்படுவார்.

ங்களை வைத்து உலகம் அறிந்தோம்
உங்களை வைத்து உலகம் படித்தோம்
உங்களை வைத்து உலகம் நினைத்தோம்
உங்களுக்காக புதுஉலகம் படைப்போம்.

யிரம் பள்ளிகள் கட்ட வேண்டாம்
அரைகோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டாம்
அத்தனை புண்ணியங்களும் – உங்கள்
அன்பு அதட்டலில்.

நீங்கள் பிரிகிறீர்கள்
உங்கள் பணியிடமிருந்து- ஆனால்
நாங்கள் பிரிகிறோம்
எங்கள் உயிரிடமிருந்து.

னக்கு ஒரு ஆசை
விபரீத ஆசை தான்.
விட்டில்பூச்சி நினைத்ததாம்
விண்மீன் ஆகவேண்டுமென்று
இதுவும் அது போன்று தான்.
ஒரு முறை பிறந்திட வேண்டும்
ங்களுக்கு முன்னால்…

ரு முறை அணைத்திட வேண்டும்
உங்களுக்கு அன்னையாய்…
ஒரு முறை மலர்ந்திட வேண்டும்
மனிதநேயம் கொண்ட மனிதனாய் ….
ஒரு முறை சிரித்திட வேண்டும்
சின்னஞ்சிறு மழலையாய்….
மொத்தத்தில்
ஒரு நாள் வாழ்ந்திட வேண்டும்
உங்களுக்கு ஆசானாய்.

ரேயொரு வேண்டுகோள்
என்றேனும் ஒரு நாள்
எங்கேனும் ஓரிடத்தில்
உங்கள் மாணவன் என்று நான் அறிமுகம் செய்கையில்
ஒரு முறையேனும் கேட்பீரோ?
” டேய்! ராஸ்கல் எப்படிடா இருக்க?” .



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100






மரம் பேசுகிறது !

Photo Courtesy : Sudharshun Gopalan


வாருங்கள் மானிடர்களே 
வாருங்கள் ....
அடுத்தவர் அவஸ்தையில் 
அமிர்தம் உண்ணும் 
அன்பற்ற மானிடர்களே வாருங்கள் !

ன்ன யோசிக்கிறீர்கள் !
எதற்கு அழைக்கிறான் இந்த 
மரமடையன் என்றா ?
 பாருங்கள் உங்கள் 
பாதத்தின் அடியில் 
பாதாளத்தில் பரிதவிக்கும் எம் 
புதல்வர்களைப் பாருங்கள் !

தோ யாரங்கே ! 
சற்று நிறுத்தப்பா ...
நீ ! 
அறிவில் ஆதவன் தான் 
அதற்காக அந்த 
அறிவில்லாதவனை 
"மர மடையன்" என்று திட்டதே ! 
மண்ணோடு காதல் கொண்டு 
மழையோடு நட்பு கொண்டு 
மாலைத் தென்றலோடு உறவாடும் 
நாங்கள் மடையர்களா ? - அல்லது 
மண்ணுக்காக மடிந்து 
மதுக்காக மானமிழந்து 
மாதுக்காக மயங்கும் 
நீங்கள் மடையர்களா ? 
திருத்திக் கொள்ளுங்கள் உங்கள் 
திருவாய் மலர்ந்த வார்த்தைதனை 
அவன் 'மர மடையன்' அல்ல 
"மனித மடையன்."

ண்டு நூறுக்குமுன்
அஸ்தமித்து விடும்
அற்ப மானிடா!
ஆண்டுக்கொரு முறை நீ
அவதரித்த நாளைக் கொண்டாடுகிறாய்.
ஆண்டாண்டு காலமாய் இந்த
அவனியை அலங்கரிக்கும் எங்களுக்கு
“பர்த்டே கேக்” எப்போது செய்யப் போகிறாய்?

னிக்குடித்தனம் செல்லும்
வாழைகள்....
ஆலைத் தாங்க மறந்த
விழுதுகள்...
முகம் வாடிக் கிடக்கும்
மலர்கள்...
அடுத்தவர்க் குதவா
நாங்கள்...

ற்பனை செய்ய முடியுமா!
பிறகேன் நீங்கள் மட்டும்
இப்படி!

றறிவு கொண்ட உனக்கு
ஐந்தறிவு கொண்ட நான் அறிவுரை சொல்வதா! - து
இலக்கணத்திற்கு பொருந்தாத
இலக்கியம்.
இனியாவது திருந்துங்கள்.... எங்களை
இந்த உலகில் வாழ விடுங்கள்.

வ்வளவு கூறியும் அதோ ஒருவன் வருகிறான்...
கையில் எமனோடு...
எங்கள் உயிரைக் குடிப்பதற்கு.




 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Monday, April 4, 2011

மழையில் இரு மழலைகள்

Copyright : http://www.tastywallpapers.in


முத்தமிட்டுக்கொள்ளும்
மேகங்களின் எச்சில் துளிகளாய் ...
மண்ணில் விழுந்தது
மழைத்துளி.

ழையைக் கண்டு
மனதை மூடிக் கொள்ளும்
மனிதர்களுக்கு மத்தியில்….
மழைக்காக
மனிதர்களை மூடிக்கொள்ளும் – இந்த
மழலைகளை மதிப்போம்.

ழகான சோலை
அந்தி வேலை
ஆலமரத்தடி
ஆழிப்புதல்வர்கள்
அனைத்தையும் ரசிக்கும்
அழகான மழலைகள்
அங்கங்கள் மட்டும் அரவணைத்துக் கொள்ளாமல்.

ழையில் மழலைகள்
மனதில் ஆச்சரியமா?
ஆம்!
மழலைகளிடத்தில் பொய் வாழ்வதில்லை – இவர்கள்
மனங்களிடத்திலும் மெய் சாவதில்லை.

வர்கள்
மனங்களைப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு மழலைகள்:
மனங்களைப் புதைக்கத் தெரிந்தவர்களுக்கு காதலர்கள்.

ழியின் நீர்பட்டு
அங்கங்கள் அரைகுறையாய் தெரிந்தாலும்
கண்கள் மட்டுமே – பேசிக்கொள்ளும்
அற்புதக் கலையல்லவா காதல்.

ரசிப்பதற்கும் ருசிப்பதற்கும்
ஆயிரமாயிரம் உணவுகள்
இருந்தாலும்
அவள் இதழ்பட்ட சிறு
மழைத்துளிக்கு ஈடாகுமா!

யற்கையை ரசிக்க இரு கண்கள் போதாது
இவளை ரசிக்க எவன் கண்களும் போதாது.
மழைத்துளிகள் மரம் மேல் விழுந்து
இலைத்துளிகள் இவள் மேல் விழுந்து
இவள் துளிகள் அவன் மேல் விழுந்து
அவன் துளிகள் அவனியில் விழுந்தால்…
உனக்கும் காதல் வரும்
மழையின் மீது மோகம் வரும். 
 
த்தங்கள் கூட சங்கீதமாகும்
மழைத்துளி மண்ணில் விழும்போது.. 
மௌனங்கள்  கூட ராகங்களாகும்
இருவிழி அன்பில் இணையும் பொது.
மௌனங்களாலேயே
மனதைப் படித்துக்கொண்டிருந்தவர்களுக்கு
மழைத்துளி மறைந்தது
மனதில் பதியவில்லை.
மழை நின்றது.

வள் அவள் வீடு சென்றாள்
அவன் அவன் வீடு சென்றான்
மரம் மட்டும் அங்கேயே நின்றது
மற்றுமொறு  காதலர்களின் வரவுக்காக.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Related Posts Plugin for WordPress, Blogger...