Showing posts with label Love Poems. Show all posts
Showing posts with label Love Poems. Show all posts
Wednesday, March 6, 2013
Wednesday, June 27, 2012
உன் பேர் என் பேர் சேர்த்துவைத்தால் !
![]() |
Photo Courtesy : sortol.com |
உன் பேர்
என் பேர் சேர்த்துவைத்தால்
காதல் வந்து பிறக்குமா ?
காதல் வந்தால்
நொடிகள் கூட
காத்திருக்கும் தெரியுமா ?
நீஉண்ட தேநீர் உண்டு
இனிப்புச் சேர்க்கச் சென்றேனடி;
இதழோடு இதழ் சேர்த்து
தேநீர் கசக்க செய்தாயடி !
சிறு சிறு முத்தம் கேட்டு
சிறுகச் சேர்த்தேன் என்னை
முழுதாய் கட்டி அனைத்து
மொத்தம் தொலைத்தாய் பெண்ணே !
விரலோடு மழைகோர்த்து
வழிகள் நூறு சென்றேனடி
வழியெங்கும் நீயே நின்றால்
பாதை எங்கே காண்பேனடி!
குறு குறு குழைந்தையெனக்
கண்சிமிட்டி பார்த்தேன் உன்னை
விளையாட்டாய்ப் பிடுங்கிச் சென்றாய்
விழியோடு இதயம் தன்னை!
இமைக்கும் நொடி மறைவாயெனில்
இமைகள் வெட்டி எறிந்திடுவேன் - உன்
இதழ்கள் தரும் சூட்டில் தானே
தினந்தோறும் உயிர்த்தெழுவேன்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Tuesday, April 10, 2012
கவிதையாய் சில கிறுக்கல்கள்
மரண நாள்
![]() |
Photo Courtesy : ifreewallpaper.com |
என்றோ எரிந்து விட்ட நான்
மறுபடியும் எரிக்கப்படுகிறேன் ! - இன்று எனக்கு
மரண நாள்.
முதல் எழுத்து
![]() |
Photo Courtesy : http://prozailirika.ru |
மெய் அழகு நீயும் ...
உயிர்மெய் அழகை உருவாக்கும்
உன்னதமான நேரம் - இந்த
முதலிரவுக் காலம்.
தற்கொலை
![]() |
Photo Courtesy : midiaextra.com |
அன்பே!
தற்கொலைக்கு நான் எதிரி தான்
இருந்தாலும் என்ன செய்ய …
உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் – என் வார்த்தைகள்
அதைத் தானே செய்கின்றன.
கல்லறை
![]() |
Photo Courtesy : bp6316 @ Flickr |
கல்லுக்குள் ஈரம் – என்
காதலியின் கண்ணீர் – எனது
கல்லறையில்..
மழைக்காதல்
![]() |
Photo Courtesy : http://www.wallpapermania.eu |
இன்றைய இல்லங்கள் அனுமதிக்கின்றன
காதலையும் மழையையும்
தொலைக்காட்சிப்பெட்டிக்குள் மட்டும்.
Wednesday, March 14, 2012
உயிர்ப்பார்வை
Hi "satya" hw r u?. "this sarath". first of all i m big fan of ur cute and sweet lines, may be i can say addict to your each words.that y i have request to you.
can you u make a short romantic words as a poet for be lowed pic. can u do it for me??????
my heart expecting this pic on ur blog wit your lines
thank you
with regards,
sarath
♥
தேகமெல்லாம் - உன்
தீர்த்தப்பார்வை
தெளித்தாலென்னடி?
காதல் கடலில்
தத்தளிக்கும்
படகென்னை பார்த்துச்
சென்றாலென்னடி?
பனி பொழியும் இரவில்
இமை மூடும் நொடியில்
இதழில் கனிரசம்
பகிர்ந்தாலென்னடி?
ஆளில்லா மழையில்
ஆழியின் நடுவில்
காமக்கடலில்
மிதந்தாலென்னடி?
பேசாத பொழுதுகளில்
பேதளித்துத் திரிகையில்
பேச்சு முத்தம்
தந்தாலென்னடி?
தேநீர்பருகும் பொழுதுகளில்
தேகம் தாகம் தேடுகையில் - உன்
இதழ்நீரால் இனிப்புச்சுவை
செய்தாலென்னடி?
வயிற்றுப் பள்ளத்தாக்கில்
விழிவைத்து உறங்க - ஒரு
வாய்ப்பு
தந்தாலென்னடி?
இரவு பயணங்களில்
இருட்டு வெளிச்சத்தில்
இடைவெளியின்றி
அணைத்தாலென்னடி ?
விழிக்காத விடுமுறைகளில்
இழுத்துப்போர்த்திய இமைகளில் - உன்
இதழால் விழிவிரித்து - உறக்கம்
கலைத்தாலென்னடி ?
இவையெல்லாம்
இயலாத நேரங்களில் - உன்
இமையடி உறங்கும் - என்
இதயங்களால் - ஓர்
உயிர்ப்பார்வை
பார்த்தாலென்னடி?
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Friday, February 10, 2012
♥ குட்டியாய் சில காதல் கவிதைகள் ♥
![]() | |
Photo Courtesy : MUK Team |
தாகம் தீர்க்கும்
துளி நீர் போல
காமம் தீர்க்குமா
காதல் ?
![]() | ||
Photo Courtesy : http://nickstraffictricks.com |
உன்
செல்ல அதட்டல்களுக்கு
அடங்கிப் போகிறேன்
Sunday, September 18, 2011
கீழ்க்காணும் யாவும் காதல் கவிதைகளே !
புத்தகம்
![]() |
Copyright : http://wallpaper4free.org |
புத்தகம் எழுதினேன் ;
பிரித்துப்பார்த்தால்
பக்கங்களெல்லாம் - உன்
பெயர் மட்டுமே !
பசுமையாய் அவள்
![]() |
Copyright : http://www.desktopwallpaperhd.net |
காலத்தின் கறுப்புத் தடங்கள்
பதிந்து கிடக்கும் என் மனச்சுவர்களில் ...
பசுமையாய் அவள் நினைவுகள் !
பசுமையாய் அவள் நினைவுகள் !
முதல் எழுத்து
![]() |
Copyright : besthomedecorators.com |
மெய் அழகு நீயும் ...
உயிர்மெய் அழகை உருவாக்கும்
உன்னதமான நேரம் - இந்த
முதலிரவுக் காலம்.
ஒற்றை ரூபாய்
![]() |
Copyright : www.sparkthemagazine.com |
அன்பே!
ஒற்றை ரூபாயாக
உன் காதல் - நீ
கொடுப்பதிலோ *
வைப்பதிலோ **
இருக்கிறது
என் காதல்.
பின் குறிப்பு : * இரத்தல் நிகழ்வு
** இறத்தல் நிகழ்வு.
உதடு
![]() |
Copyright : webs.com |
அன்பே ! நீ
முனுமுனுக்கும் பொழுதெல்லாம் - உன்
உதட்டுச் சுருக்கங்களில்
ஒளிந்திருக்கிறது ....
எனக்கான தமிழும்;
தமிழுக்கான கவியும்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Tuesday, June 14, 2011
♥ குட்டி குட்டி காதல் கவிதைகள் ♥
நீயும் காலன் தானடி - என்
காதலை வதை செய்ததால்
நானும் பாவம் தானடி - உன்னை
நான் காதல் செய்ததால்.
தேவதையே !
உன் நினைவுகள்
என்னில் வரும்பொழுதெல்லாம்
நானும் பைத்தியம் தான் - என்
அறைசுவர்களுக்கு.
அன்பே!
காகிதங்களின் காயங்கள்
கவிதைகள் தானடி - என்
இதயத்தின் காயங்கள் - நம்
காதல் தானடி !
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
ஏனடி ! இப்படி அழகானாய் ?
![]() |
Copyright : http://safa.tv |
ஏனடி ! இப்படி அழகானாய் ?
அழகால் என்னைத் தின்கின்றாய்.
சொல்லடி அன்பே ஆருயிரே!
சாகவும் தோணுதே காதல் தானோ! ( பல்லவி )
அரைநொடி வாழ்தால் கூட - உன்
அரவணைப்பில் வாழ வேண்டும் .
அடுத்தநொடி இறந்தால் கூட - உன்
மடி மீது நான் சாக வேண்டும். ( சரணம் - 1 )
பிரம்மன் செய்த பிழையோ- நீ
பெண்கள் கூட்டத்துத் தேவதையோ ! - என்
உயிரைக் குடிக்கும் மோகினியோ - பலர்
உயிரைக் காக்கும் தேவதையோ. ( சரணம் - 2 )
சிரிக்காமல் சிரிப்பது எப்படியோ! - என்னுயிரைக்
குடிக்காமல் குடிப்பது எப்படியோ!
அழுகின்ற பொழுது அணைத்திடடி - நான்
அணைக்கின்ற பொழுது அச்சம் தவிர்த்திடடி. ( சரணம் - 3 )
கிறுக்கன் என்னைக் கவிஞனாக்கினாய் ;
கவிஞர்கள் பலரைக் கிறுக்கனாக்கினாய்.
அழகைக் கொண்டே ஆளைக் கொல்கிறாய்;
அகிம்சைக் கொள்கை ஏற்க மறுக்கிறாய். ( சரணம் - 4 )
முத்தம் கேட்டு முயன்றிடவில்லை -உன்னை
நித்தம் பார்க்க முறையிடவில்லை.
சத்தம் இன்றி நுழைந்தாயே - என்னை
நித்தம் நீயே வென்றாயே ! ( சரணம் - 5 )
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Wednesday, June 1, 2011
Monday, April 4, 2011
மழையில் இரு மழலைகள்
![]() |
Copyright : http://www.tastywallpapers.in |
முத்தமிட்டுக்கொள்ளும்
மேகங்களின் எச்சில் துளிகளாய் ...
மண்ணில் விழுந்தது
மழைத்துளி.
மண்ணில் விழுந்தது
மழைத்துளி.
மழையைக் கண்டு
மனதை மூடிக் கொள்ளும்
மனிதர்களுக்கு மத்தியில்….
மனதை மூடிக் கொள்ளும்
மனிதர்களுக்கு மத்தியில்….
மழைக்காக
மனிதர்களை மூடிக்கொள்ளும் – இந்த
மழலைகளை மதிப்போம்.
மனிதர்களை மூடிக்கொள்ளும் – இந்த
மழலைகளை மதிப்போம்.
அழகான சோலை
அந்தி வேலை
ஆலமரத்தடி
ஆழிப்புதல்வர்கள்
அனைத்தையும் ரசிக்கும்
அழகான மழலைகள்
அங்கங்கள் மட்டும் அரவணைத்துக் கொள்ளாமல்.
அந்தி வேலை
ஆலமரத்தடி
ஆழிப்புதல்வர்கள்
அனைத்தையும் ரசிக்கும்
அழகான மழலைகள்
அங்கங்கள் மட்டும் அரவணைத்துக் கொள்ளாமல்.
மழையில் மழலைகள்
மனதில் ஆச்சரியமா?
மனதில் ஆச்சரியமா?
ஆம்!
மழலைகளிடத்தில் பொய் வாழ்வதில்லை – இவர்கள்
மனங்களிடத்திலும் மெய் சாவதில்லை.
மழலைகளிடத்தில் பொய் வாழ்வதில்லை – இவர்கள்
மனங்களிடத்திலும் மெய் சாவதில்லை.
இவர்கள்
மனங்களைப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு மழலைகள்:
மனங்களைப் புதைக்கத் தெரிந்தவர்களுக்கு காதலர்கள்.
மனங்களைப் புதைக்கத் தெரிந்தவர்களுக்கு காதலர்கள்.
ஆழியின் நீர்பட்டு
அங்கங்கள் அரைகுறையாய் தெரிந்தாலும்
கண்கள் மட்டுமே – பேசிக்கொள்ளும்
அற்புதக் கலையல்லவா காதல்.
அங்கங்கள் அரைகுறையாய் தெரிந்தாலும்
கண்கள் மட்டுமே – பேசிக்கொள்ளும்
அற்புதக் கலையல்லவா காதல்.
இரசிப்பதற்கும் ருசிப்பதற்கும்
ஆயிரமாயிரம் உணவுகள்
இருந்தாலும்
அவள் இதழ்பட்ட சிறு
மழைத்துளிக்கு ஈடாகுமா!
ஆயிரமாயிரம் உணவுகள்
இருந்தாலும்
அவள் இதழ்பட்ட சிறு
மழைத்துளிக்கு ஈடாகுமா!
இயற்கையை ரசிக்க இரு கண்கள் போதாது
இவளை ரசிக்க எவன் கண்களும் போதாது.
இவளை ரசிக்க எவன் கண்களும் போதாது.
மழைத்துளிகள் மரம் மேல் விழுந்து
இலைத்துளிகள் இவள் மேல் விழுந்து
இவள் துளிகள் அவன் மேல் விழுந்து
அவன் துளிகள் அவனியில் விழுந்தால்…
இலைத்துளிகள் இவள் மேல் விழுந்து
இவள் துளிகள் அவன் மேல் விழுந்து
அவன் துளிகள் அவனியில் விழுந்தால்…
உனக்கும் காதல் வரும்
மழையின் மீது மோகம் வரும்.
மழையின் மீது மோகம் வரும்.
சத்தங்கள் கூட சங்கீதமாகும்
மழைத்துளி மண்ணில் விழும்போது..
மழைத்துளி மண்ணில் விழும்போது..
மௌனங்கள் கூட ராகங்களாகும்
இருவிழி அன்பில் இணையும் பொது.
இருவிழி அன்பில் இணையும் பொது.
மௌனங்களாலேயே
மனதைப் படித்துக்கொண்டிருந்தவர்களுக்கு
மழைத்துளி மறைந்தது
மனதில் பதியவில்லை.
மனதைப் படித்துக்கொண்டிருந்தவர்களுக்கு
மழைத்துளி மறைந்தது
மனதில் பதியவில்லை.
மழை நின்றது.
அவள் அவள் வீடு சென்றாள்
அவன் அவன் வீடு சென்றான்
மரம் மட்டும் அங்கேயே நின்றது
மற்றுமொறு காதலர்களின் வரவுக்காக.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Trustworthiness:
Vendor reliability:
Privacy:
Child safety:
Subscribe to:
Posts (Atom)