Thursday, July 21, 2011

காதல் கொலை செய்யாதீர் !

Copyright -Wedding Photography | India@FB

தோழர் ராஜா அனுப்பிய  புகைப்படத்தில் காதலர்கள் மரத்தில் மரணம் செய்துக்  கொள்வது போல் இருந்தது. என்னுடைய கிறுக்கல்100 நண்பர்கள் இளகிய மனம் உடையவர்கள் என்பதாலும் , மேலும் காதலர்களின் அத்தகைய முடிவை நான் விரும்பாததாலும் அதை நான் இங்கு பதிவு செய்யவில்லை. மன்னிக்கவும் ராஜா. தோழர் அனுப்பிய புகைப்படுத்துக்காக நான் கிறுக்கிய வரிகள்.


காதல் 
கொலை செய்யப்படுகின்றன 
மணக்கயிறுகளால் மற்றும்
பிணக்கயிறுகளால் ... - சத்தியசீலன் @கிறுக்கல்கள்100 


Friday, July 15, 2011

மும்பை தீவிரவாதம் - கசாப் தூக்கு - கண்ணீர்க் கவிதை

Photo Courtesy - medinab.blogspot.com


குறிப்பு : மும்பை குண்டுவெடிப்பில் உயிரிழந்த என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு இக்கண்ணீர்க்கவிதை சமர்ப்பணம். அதோடு கசாபைத்  தூக்கிலிட்ட இத்தருணத்தில் இக்கவிதையை மறுபதிப்பு செய்கிறேன். உண்மையாக சொல்ல வேண்டுமானால் எனக்கு என்றுமே மரண தண்டனையில் உடன்பாடு இல்லை. அப்படி ஒருவனைத் தூக்கிலிட்டே ஆக வேண்டுமென்றால் , இதுவரை தவறே செய்யாத ஒருவன் மூலம் அவனைத் தூக்கிலிடச் செய்யுங்கள்.


தீவிரவாதப் பேயடா ! - நீ
திருந்தும் வழியேதடா ?
தீர்க்கமாய் சொல்லி செல்லடா - இல்லை
திருகிக் குடிப்போம் உன் உயிரடா !

வெட்டி சாய்த்துவிட வேண்டுமடா - உன்
நெஞ்சில் ஈரம் பட்டு போய் விட்டதடா !
கண்ணீர்த்துளி கேட்கும் நரமாமிசா - உன்
கண்ணை வெட்டி நீயும் நீர் குடிடா !

யிரின் மகத்துவம் நீ பாரடா - உன்
உயிரைக் கொண்டு போராடடா !
வாதங்கள் செய்து வாழாதடா - உன்
தீவிர வாதங்கள் விழல் தானடா !

ழலைக் கொண்டாடும் தேசமடா - இது
உயிரைக் குடிக்கும் தேசமடா !
அரசியல் வணிகம் நடக்குதடா - தினமும்
அறிக்கை மட்டும் கேட்குதடா !

தவிகள் தந்தது மக்களடா
பாடையில் இருப்பதும் மக்களடா
உரிமைகள் தந்தது மக்களடா
உயிரைக் கொடுப்பதும் மக்களடா !

காந்தியம் பிறக்க மறந்ததடா - காந்தி
நோட்டுகள் பிணங்கள் கேட்குதடா !
சாந்திகள் இல்லா நாடடா - என்
சந்ததிக்கு ஏது வழியடா !

கிம்சை தந்த  நாடடா - அது
னுதினமும் அழுவது ஏனடா !
ஒருமுறை சிந்தித்து பாரடா - எங்கள்
உயிரைக் குடிப்பது ஏனடா !!!
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

 

Thursday, July 7, 2011

கருக்கலைப்பு காலத்தின் கட்டயாமா ?


Copyright -  Jeremy Snell @ flickr

ண்மையில் முகப்புத்தகத்தில் ஒரு வீடியோ பதிவு பார்த்தேன். நீங்களும் அதனைப் பார்த்தால் நான் கூற வருவது உங்களுக்கு எளிதாக விளங்கும் என விழைகிறேன். மேலும், தன் இன்பத்தை முன்னிறுத்தும் இந்த இளைய சமுதாயத்தில் கருக்கலைப்பு என்பது அத்தியாவசியமானதாக மாற்றப்பட்டது வருந்தத்தக்கது.
Medical termination of Pregnancy Act ( MTP) 1947 , ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. Jammu & Kashmir இல் மட்டும் இச்சட்டம் நவம்பர் 1 , 1976  முதல் அமல்படுத்தப்பட்டது. அச்ச்சட்டத்தின் படி 20  வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்யலாம். அச்சட்டம் கருக்கலைப்பு செய்வோர் ஒரு தேர்ச்சி பெற்ற மருத்துவராக இருப்பதோடு மட்டுமல்லாமல் அக்கருக்கலைப்பு அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே நடைபெறவேண்டும் எனக் குறிப்பிடுகிறது. இவ்வகையில் நடைபெறாத கருக்கலைப்புகள் சட்டத்திற்குப் புறம்பானவை. லர் பயத்தின் காரணமாகவும், அறியாமையின் காரணமாகவும் கருக்கலைப்புக்குத்  தாங்களே  மருந்துகளை உட்கொள்வதும், பல வினோதமான முறைகளைக் கடைப்பிடிப்பதும் நடைமுறையில் உள்ளது. இத்தகைய செயல்கள் அவர்களின் உயிருக்கே ஆபத்தாய் முடியும் வாய்ப்புகளும் உள்ளது. 

நான் என் சில நெருங்கிய நண்பர்கள் மூலம் அறிந்த செய்தி. வேலூரில் உள்ள புகழ் பெற்ற தனியார்  கல்லூரியில் கருக்கலைப்புகள் சர்வசாதாரணாமாக நடைபெறுகிறது என்றும், அதற்கு என்றே " ABORTION WARD"  இருப்பதாகவும் கேள்விப்பட்டுள்ளேன். அது எந்த அளவு உண்மை என்பது நான் அறியாத ஒன்று.என்னுடைய கல்லூரியின் வட  இந்திய முதலாமாண்டு மாணவன் ஒருவனிடம் அவன் பெண் தோழியைப் பற்றி கிண்டலாக விசாரித்துக் கொண்டிருந்தோம். அதற்கு அவன் கூறியது அதிர்ச்சியுடன் அச்சம்மும் அடைய செய்தது. " Yes sir ! We had sex when I was in 12th and she was in her 10th. Whenever I had a feeling, I used to call her and We have sex in the hotel opposite to the lake at my Home town. " பட்டென்று அறைய வேண்டும் போல் இருந்தது. அறைந்தால் ராக்கிங் கொடுமை என்றாகி விடுமே !!? அதனோடு மட்டுமல்லாமல் சென்னை, மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களில் கல்லூரி மாணவ மாணவியர் வீட்டுக்குத் தெரியாமல் வெளியில் தங்குவதும், ஹார்மோன் பொங்கி இன்பம் காண்பதும், பின்பு கண்ணீர் சிந்துவதும் , இன்னும் சிலர் 'அது எல்லாம் ஒரு விசயமே இல்ல ! ' என வெகு சாதரணாமாக எடுத்துக் கொள்வதும் நடைமுறையில் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது . என்னுடைய நெருங்கிய முகப்புத்தக நண்பர் கூறியது இன்னும் அதிர்ச்சியூட்டியது , " பாஸ், லவ் லவ்வுன்னு டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருந்தாளுக ; நான் தெளிவா சொல்லிட்டேன் , 'I DON'T BELIEVE IN RELATIONSHIP, IF U WANT WE CAN SHARE BED' னு , அதுக்கப்புறம் 10 டு 15 டைம்ஸ் பாஸ் ! ". எனக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை , அதன் பிறகு அந்த நட்பு முகப்புத்தகத்தில் Unfriend பட்டனை கிளிக் செய்வதில் முடிந்தது.

ருக்கலைப்புக்கு காரணம் ஏழ்மை, இளமை, அறியாமை, கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தாமை என பல இருந்தாலும் , அண்மைக்காலமாக PREMARITAL SEX முக்கிய காரணம் என ஒரு ஆய்வு கூறுகிறது. இதனைக் காட்டிலும் வருத்தம் என்னவென்றால், இதில் தவறில்லை என ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் தெரிவித்திருப்பதுதான். டை முதல் நடை வரை 'நாகரீகம்' என மார்தட்டிக் கொள்ளும் இந்த நவீன இளைய சமுதாயம் இதனையும் நாகரீகம் என சேர்த்துக்கொள்ளுமோ?! "ஒருவன் செய்தால்  தவறு; அதனையே ஒரு ஒட்டு மொத்த சமுதாயமும் செய்தால் அதன்  பெயர் நாகரீகம். " இதற்கு "தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா என்று சப்பைக் கட்டு வேறு !!".


சொன்னான் பாரதி ... " அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம் " பாரதி உன் வார்த்தை பொய்த்து விட்டன. இன்றைய சூழலில் அச்சமும் நாணமும் பெண்களுக்கும் அவர்களைக் காதல் செய்யும் ஆண்களுக்கும் கட்டாயம் வேண்டும்.

தையெல்லாம் பார்க்கும் பொழுது என் மனதில் எழுவது ஒன்றே ஒன்று தான்...

" புதுமை என்ற பெயரில் நாம் அள்ளிப் பூசிக்கொள்வது சந்தனமல்ல ; சாக்கடையே  ! "
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100Sunday, July 3, 2011

எனது தத்துவங்கள்
பெற்றோர்களுடைய ஆசிர்வாதத்தோடு நடக்கும் காதல் திருமணங்களில் காதலர்களின் வைராக்கியத்தைக் காட்டிலும் பெற்றோர்களின் பெருந்தன்மையையே என்னால் உணர முடிகிறது !!!
பெரிய வீட்டு பிள்ளைகளின் பத்திரிக்கை செலவிலே என் பல ஏழை நண்பர்களின் திருமணங்கள் சிறப்பாக நடைபெற்றுவிடுகின்றன !
" ஏழ்மை " என்ற ஒரு அடையாளம் போதும் என்னைக் குற்றவாளி என்று சமுதாயம் ஒப்புக் கொள்ள !
 
ஆடவர்கள் அறியாமால் உரசினால் கூட அதட்டிக் கேட்கும் ஆண்கள் சமூகம், பெண்கள் உரசினால் மட்டும் பெருந்தன்மையாக மன்னித்து விடுகிறது !
தாய்மொழியில் பேசும், புனையும் ஆர்வத்துக்காக என்னை அவமானப்படுத்த முயல்கிறது இந்தச் சமூகம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
உறவுகளும் உணர்வுகளும் மென்மையானவை . உடைத்து விடாதீர்கள் !
 
தவம் செய்யாமல் கிடைத்த வரம் காதல்
தவறு செய்யாமல் கிடைத்த சாபமும் காதல்.
 
என்னை நானே உயர்த்திக் கொள்ள முயல்கிறேன் . அப்பொழுது தானே ! என்னை நாடும் நண்பர்களுக்கு என்னால் உதவ முடியும். பணத்தால் மட்டுமல்ல .... மனத்தால் கூடவும் .
வறுமை வரைந்த வார்த்தைகளுக்கு மட்டும் தான் ....
வலியும் அதிகம்; வலிமையையும் அதிகம் .
 
" தீவிரவாதத்திற்கு மத அடையாளம் பூசி மதத்தைக் கலங்கப்படுத்தாதீர்கள். "
"அன்புக்கு மதம் கிடையாது - அவையெல்லாம்
அறிவுக்கு மட்டும்தான் "
  - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Related Posts Plugin for WordPress, Blogger...