Showing posts with label ட்வீட்ஸ். Show all posts
Showing posts with label ட்வீட்ஸ். Show all posts

Wednesday, July 15, 2015

கொஞ்சம் சிந்தியவைகள்







ப்பிற்கான அளவுகோல் அவரவர் தகுதியைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகின்றது . 

ண்கள் பெண்களிடம் சொல்லும் அத்தனை மன்னிப்புகளும் தவறுகளுக்கானது அல்ல அன்பிற்கானது. 

இராமன்களுக்கு சீதையும், சீதைகளுக்கு இராமன்களும் எப்பொழுதும் கிடைப்பதில்லை.

விதைகள் திருடப்படும் பொழுதெல்லாம் காதல் பிறக்கின்றது.

னக்குத் தெரிந்த எல்லாவற்றையும் முழுமையாக சொல்லி விடாதே ! பிறகு, சொல்வதற்கு ஒன்றும் இருக்காது; கேட்பதற்கும் செவிகள் திறக்காது. 

ல்லோரும் கதாநாயகர்களாக வாழத்தான் ஆசைப்படுகிறார்கள். ஆனால், காலம் அவர்களை வில்லன்களாகச் சித்தரித்து விடுகின்றது . 

ங்கு இலவசமாய் கிடைக்க வேண்டியதெல்லாம் (கல்வி, மின்சாரம்,குடிநீர்) காசு கொடுத்தும், காசு கொடுத்துப் பெற வேண்டியதெல்லாம் ( தொலைக்காட்சி , மின்னம்மி, அரவைப்பொறி, மின்விசிறி, அரிசி ) இலவசமாய் கிடைக்கும். 
இப்படிக்கு 
தமிழக அரசு. 
c/o இந்திய அரசு.

காமம் திகட்டிப் போகும் சமயத்தில் காதல் பிறக்கிறது.

'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொன்ன பாரதி மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால், தன் பேரனுக்கோ, பேத்திக்கோ, OC Category யில் PG Seat கிடைக்காமல் கல்லூரி கல்லூரியாக அலைந்திருப்பார். 

ரு மொழியோ, கவிதையோ, மனிதனோ, மனிதமோ, கடவுளோ, கலையோ கொஞ்சம் புரியவில்லை என்றால் அதனை உயர்வாகக் கருதும் மனப்பாங்கு எனக்கு எவ்வாறு தொற்றிக்கொண்டது? 


- சத்தியசீலன் @ கிறுக்கல்கள்100



Monday, October 10, 2011

என்றோ சிந்தித்தவைகள் !

 •  காதலில் அழகாய் தோன்றும் அத்துனை விசயங்களும் ... நட்பில் அபத்தமாய் காட்சியளிக்கிறது.
 • தீக்குளித்து தற்கொலை செய்து கொள்பவர்களை ஆதரிப்பது அறிவாளிகளின் முட்டாள்தனம்; அரசியல்வாதிகளின் புத்திசாலித்தனம் .
 •  எல்லா பெண்களும் சுதாரிப்பு என்கிற பெயரில் " அண்ணா ! " என்று அழைக்கிறார்கள் . # இல்ல தெரியாமாத் தான் கேக்குறேன் நாங்க என்னிக்காவது உங்கள "அக்கா" னு கூப்பிட்டிருக்கோமா ?
 • நீண்ட நாளாக ஒரு சந்தேகம் ! அழகு நிலையங்கள் பெரும்பாலும் ஏன் பெண்களுக்கு மட்டுமே உள்ளது ?
  # ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.
 •  காதல் செய்யாதீர்கள்; மீறியும் காதல் செய்தால் காதலைக் கொலை செய்யாதீர்கள்
 • தனது தவறுகளை முழுவதுமாக மறைக்கத் தெரிந்தவன் அறிவுரைகள் சொல்கிறான்; தெரியாதவன் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்கிறான்.
 • இளமையைக் காட்டிலும் முதுமை அழகு. இளமையின் அழகு இருக்கும் வரை; முதுமையின் அழகு இறக்கும் வரை .
 • 'நான் அழகாக இல்லை' என என்னை பலர் விமர்சித்திருக்கிறார்கள் என மனம் நோகும் படி. அழகை மூலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்கள் விபச்சாரிகள் ; நான் விபச்சாரம் செய்ய விரும்பவில்லை.
 • மருத்துவர்களாகிய எங்களுக்கு மருந்துகளை மட்டுமே அறிமுகம் செய்கிறார்கள்; மனிதர்களின் உணர்வுகளை அறிமுகம் செய்ய மறந்து விடுகிறார்கள்.
 • புத்தகம் ஒன்று தான் ! ஆனால், வயதுக்கேற்ப அதன் அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கிறது.
 • உன்னைச் சுற்றியுள்ள எல்லாமே அதிசயம் தான் ; உன்னையும் சேர்த்து ...
   
   - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
    

Saturday, August 20, 2011

சத்தியசீலனின் தத்துவங்கள் !

Photo Courtesy : GOOGLE

டைப்பதற்கு முன்
விற்று விடுங்கள் - எங்கள்
சிறகுகளை !!
இப்படிக்கு கூண்டுக்கிளி 
ரசியல் என்னும் சதுரங்க விளையாட்டில் வெட்டுப்படுபவர்கள் வாக்காள சிப்பாய்கள் மட்டுமே !
ணமான பெண்களின் பேச்சுக்கு இரையாவது இறைவன் இல்லையென்றால் கணவன்
ல்லூரிக்காலங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களில் மட்டுமே மகிழ்ச்சியைப் பார்க்க முடிகிறது ! நம்பவில்லையென்றால் உங்கள் திருமணப் புகைப்படங்களைப் பாருங்கள்.
சொன்னான் பாரதி ... " அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம் " பாரதி உன் வார்த்தை பொய்த்து விட்டன. இன்றைய சூழலில் அச்சமும் நாணமும் பெண்களுக்கும் அவர்களைக் காதல் செய்யும் ஆண்களுக்கும் கட்டாயம் வேண்டும்.
"ருவன் செய்தால் தவறு; அதனையே ஒரு ஒட்டு மொத்த சமுதாயமும் செய்தால் அதன் பெயர் நாகரீகம். "
வறுதலாக புரிந்து கொள்வது பெண்களுக்கே உரித்தான விஷயம் போல ...
து என்னவோ ! தெரியவில்லை ... தான் பார்க்கும் வேலையைத் தன் மகன் பார்க்கக்கூடாதென அப்பாக்கள் பிடிவாதமாகவே இருக்கிறார்கள்.
லங்கைத் தமிழனுக்கு உறுப்புடியாய் உதவுவதற்கு ஒருவனுக்கும் துப்பு இல்லை. ஆனால் ... ஆயிரமாயிரம் மேடைகள்; ஆக்ரோசமான பேச்சுகள்; புத்தகம் தோறும் கவிதைகள்; இன்னும் பல பல ... எல்லாம் வேசங்கள்! நம் வாழ்வு செழிக்க என் ஈழத்தமிழனின் கண்ணீரில் அல்லவா நாம் குளிர் காய்கிறோம்.
போரின் காயங்களும்; மனித உரிமை மீறல்களும்; பெண்மைத் திருட்டுகளும் .. எனக்கு ஒன்றை மட்டும் நினைவுப் படுத்திக்கொண்டே இருக்கிறது. " கடவுள் இருக்கிறாரா ? ".
னக்கு ஒரு காதலி வேண்டும். என்னுடைய இலட்சியங்களையும் அதற்காக கொடுக்கப்படும் வலிகளையும்... முடிந்தால் என்னையும் நேசிக்கின்ற காதலி வேண்டும். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !
காதலிப்பவர்கள் அழகாய் இல்லமால் இருக்கலாம். ஆனால் காதல் அழகானது. ஆதலில், காதல் செய்வீர் .
ல்லா உறவுகளையும் பணம் தின்றுவிடுகிறது ; நட்பினைத் தவிர ...
ன் கையெழுத்து ஆட்டோகிராப் ஆகும் பகலுக்காக ...
தூங்காமல் விடிகின்றன இரவுகளும்; கலையாமல் விரட்டுகின்றன கனவுகளும் .
ண்களின் அழுகைக்கு சொந்தக்காரிகள் பெண்கள் மட்டுமே !
ன்னுடைய கடைசி நிமிட ஆசை வரை பூர்த்தி செய்ய வேண்டுமேன்பதற்காகவே ... நான் உன்னைக் காதல் செய்கிறேன் 
ன்னை உலகம் அறியும் வரை ..
நீ எழுதும் கவிதைகளெல்லாம் கிறுக்கல்கள் ;
உன்னை உலகம் உணர்ந்த பின்பு ..
நீ கிறுக்கியவைகள் கூட கவிதைகள் .
செய்த உதவிகள் சுட்டிக்காடுப்படும் பொழுது தான், உதவியதின் உண்மையும்... உதவியவர்களின் தன்மையும் .... உறுத்திக் கொல்கிறது.
லகிலயே !!!
மிகச் சிறந்த கேள்வி - மௌனம்;
மிகச் சிறந்த பதில் - புன்னகை.
கொடுப்பவர்களாக இருங்கள் .... அன்பு உட்பட !!
ன்ன தான் தீவிரமாக முயற்சி செய்தாலும் ... சில விசயங்களில் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப் பட மட்டுமே முடிகின்றது .
 
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
 

Sunday, July 3, 2011

எனது தத்துவங்கள்




பெற்றோர்களுடைய ஆசிர்வாதத்தோடு நடக்கும் காதல் திருமணங்களில் காதலர்களின் வைராக்கியத்தைக் காட்டிலும் பெற்றோர்களின் பெருந்தன்மையையே என்னால் உணர முடிகிறது !!!
பெரிய வீட்டு பிள்ளைகளின் பத்திரிக்கை செலவிலே என் பல ஏழை நண்பர்களின் திருமணங்கள் சிறப்பாக நடைபெற்றுவிடுகின்றன !
" ஏழ்மை " என்ற ஒரு அடையாளம் போதும் என்னைக் குற்றவாளி என்று சமுதாயம் ஒப்புக் கொள்ள !
 
ஆடவர்கள் அறியாமால் உரசினால் கூட அதட்டிக் கேட்கும் ஆண்கள் சமூகம், பெண்கள் உரசினால் மட்டும் பெருந்தன்மையாக மன்னித்து விடுகிறது !
தாய்மொழியில் பேசும், புனையும் ஆர்வத்துக்காக என்னை அவமானப்படுத்த முயல்கிறது இந்தச் சமூகம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
உறவுகளும் உணர்வுகளும் மென்மையானவை . உடைத்து விடாதீர்கள் !
 
தவம் செய்யாமல் கிடைத்த வரம் காதல்
தவறு செய்யாமல் கிடைத்த சாபமும் காதல்.
 
என்னை நானே உயர்த்திக் கொள்ள முயல்கிறேன் . அப்பொழுது தானே ! என்னை நாடும் நண்பர்களுக்கு என்னால் உதவ முடியும். பணத்தால் மட்டுமல்ல .... மனத்தால் கூடவும் .
வறுமை வரைந்த வார்த்தைகளுக்கு மட்டும் தான் ....
வலியும் அதிகம்; வலிமையையும் அதிகம் .
 
" தீவிரவாதத்திற்கு மத அடையாளம் பூசி மதத்தைக் கலங்கப்படுத்தாதீர்கள். "
"அன்புக்கு மதம் கிடையாது - அவையெல்லாம்
அறிவுக்கு மட்டும்தான் "
  - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Related Posts Plugin for WordPress, Blogger...