Monday, November 21, 2011

அன்புள்ள ஏ.ஆர்.முருகதாசுக்கு ...

Photo Courtesy: http://www.nilacharal.com

குறிப்பு: ஏழாம் அறிவு திரையிடப்பட்ட போது எழுதியது! இப்பொழுது தலைவர் துப்பாக்கியில் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டார்.


ன்புள்ள ஏ.ஆர்.முருகதாசுக்கு ,


அடியேன் தமிழன் எழுதிக் கொள்வது . " ஏழாம் அறிவு " பார்த்தேன்; தமிழன் பெருமை சொல்வதற்காக எடுத்த படம் வேற்று மொழிகளில் தடம் மாறியிருந்தது. உங்கள் ரசிகன், தமிழன், கலைஞன் என்ற முறையில் உங்கள் முன் சில கேள்விகளை நான் கேட்க விழைகிறேன். எங்கேனும் இக்கேள்விகளை நீங்கள் கடக்க நேர்ந்தால் தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்.

  • தமிழ்ப்பெண் ஸ்ருதி நாவில் "தமிழ்" வரவில்லை. 'தமில்' என்று சொல்லும் ஒருவரை தமிழின் பெருமைப்பற்றிப் பேச வைத்தது அழகா ? கமலின் மகள் என்பதற்காக தமிழைக் கொலை செய்வதற்குத் தாங்கள் அனுமதிக்கலாமா ? தங்கக் கத்தியால் குத்தினால், தமிழுக்கும், தமிழனுக்கும் வலிக்காதா என்ன ?
  •  ஒரு மனிதனக்கு அப்பாவிடமிருந்து பாதி DNAக்களும் அம்மாவிடமிருந்து மீதி DNAக்களும் வரும் பொழுது, பல நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த போதிதர்மன் DNAவோடு , அரவிந்தின் DNA 80 % மேல் பொருந்தியிருப்பது எவ்வாறு அறிவியலில் சாத்தியமாகும் ? 
  • தமிழ் மொழியில் வெளியான படத்தில், அறிஞர்கள் அவையில் தமிழில் பேச விரும்பும் ஸ்ருதி , தெலுங்கு மொழியில் வெளியான படத்தில் தெலுங்கில் பேச விரும்புவதன் உள்நோக்கம் என்ன ? இதில் நீங்கள் யாரை ஏமாற்றுகிறீர்கள் ... தமிழர்களையா ? இல்லை இந்தியர்களையா ?
  • இதே படம் இலங்கையிலும் வெளியானது . உண்மைத் தமிழனாகத் தாங்கள் இருந்திருந்தால், தாங்கள் ஏழாம் அறிவை இலங்கையில் திரையிட அனுமதித்திருக்கக் கூடாது. மேலும், " ஒரு தமிழனை ஒன்பது நாடு சேர்ந்து கொல்லுறதுக்கு பேரு வீரம் இல்லை துரோகம். " போன்ற வசனங்களை இலங்கை அரசு நீக்கிய பொழுதாவது , தாங்கள் சிந்தித்திருக்க வேண்டாமா ?
  • ஒரு சீனத்து இளைஞன் தமிழகத்தில் அவன் இஷ்டத்துக்கு அடிதடி விளையாட்டுகளை அரங்கேற்றும் பொழுது தமிழக போலீஸ் என்ன பாப்கார்ன் தின்று கொண்டா இருக்கும் ? கொஞ்சம் யோசிங்க நண்பா !

" ஏழாம் அறிவு " முருகதாசின் ஆறாம் அறிவை பணம் வந்து தின்று ஐந்தறிவாக மாற்றி விட்டதே என்ற எண்ணம் எனக்கு மட்டும் தோன்றவில்லை; தமிழை நேசிக்கும் பல தமிழர்களுக்கும் தான் ...


அன்புடன்,
உங்கள் ரசிகன் ( தமிழன் ).

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Sunday, November 20, 2011

கை நழுவிய நளனும் நந்தினியும் !



குறிப்பு: சில பல மாதங்களுக்கு 'நளனும் நந்தினியும்' இயக்குனர் வெங்கடேசன் அவர்களை அழைத்தேன். பாடல் குறித்து விவாதித்தோம். இசை கொடுக்கப்பட்டது. பாடல் எழுதப்பட்டது. ஆனால், காரணங்கள் சிலவால்  வாய்ப்பு கை நழுவியது. அந்த வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக ! நீங்கள் கூறுங்கள் உங்களுக்கு இந்த வரிகள் பிடித்திருக்கிறதா ?


ன்னவோ சொல்லுற உந்தன் கண்ணால
என்னத்தான் கொல்லுற உந்தன் சொல்லால
தன்னால பேசித்தான் தினமும் சாகுறேன் ;
பேசாமல் பார்க்காமல் என் மனம் ஏங்கித் தவிக்குதே ! ( ஆண் )

ழையடிக்குது குளிரடிக்குது
மனசுக்குள்ள புயலடிக்குது .
படபடக்குது துடிதுடிக்குது
இதயம் ரெண்டும் சலசலக்குதுவே ! ( கோரஸ் )

பூ மிதிச்சு வண்டு சாகுதே !
தேன் குடிக்க மனசு ஏங்குதே !
விழியிலது மொழிகளது
நூறுகோடி உள்ளதே !
மௌனமது போதுமது
காதல் பேய் கொல்லுதே ! ( ஆண் )

பூ மிதிச்சு வண்டு அது சாகும் கதையிலே !
தேன் முடிஞ்சா பூ கசக்கும் காதல் உலகிலே !
விழியில் என்ன மொழிகள் உண்டு ? பொய் சொல்லுற !
பல பொய்கள் சொல்லும் காதலுக்கு பேய் தேவல !  ( பெண் )


ன்னவோ செய்யுற  உந்தன் கண்ணால
என்னத்தான் நெய்யுற  உந்தன் சொல்லால
தன்னால பேசித்தான் தினமும் சாகுறேன் ;
பேசாமல் பார்க்காமல் என் மனம் ஏங்கித் தவிக்குதே ! ( ஆண் )



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Related Posts Plugin for WordPress, Blogger...