Saturday, November 14, 2015

அறிவியல் வளர்ச்சி


றவையின் சிறகைப் பார்த்துப்
பாரினில் செய்திட்டான் விமானம்.
விமானத்தின் முட்டையாய் வீழ்ந்தது
அழிவைக் கக்கும் அக்கினிக் குஞ்சு.
முட்டை வெடித்தது; மௌனம் ஸ்தம்பித்தது.
அறிவியல் பிறந்தது; ஆக்சிஜன் தின்றது.
திராணி இல்லாத என்னைப் பார்த்து
வளர்ந்து விட்டேன் என்று சிரித்தது.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Wednesday, July 29, 2015

கலாம் சார் !ஒரு இஸ்லாமிய மனிதனக்கு, இந்து மதக் கடவுள்களின் புகைப்படங்களை விற்கும் ஒரு அங்காடியின் வெளியே, ஒரு ஐயர், அந்த மனிதனின் புகைப்படத்தை வைத்து, மாலையிட்டு, விளக்கு ஏற்றி இரங்கல் தெரிவிக்கிறார். அதே மனிதனுக்காக, ஒரு கிறிஸ்துவ ஆலயத்தின் வெளியே, மெழுகுகள் ஏற்றப்பட்டு பிரார்த்திக்கப்படுகின்றது. அதே மனிதனுக்காக ஒரு இஸ்லாம் கல்லூரியில், இரங்கல் கூட்டம் நடைபெறுகின்றது. அதே மனிதனுக்காக வழி நெடுகிலும், இரங்கல் பதாகைகள், சுவரொட்டிகள்; இப்படிக்கு, இவண், என்ற இடத்தில் மட்டும் கட்சியின் பெயரோ , உறவினர்களின் பெயரோ, சாதியின் பெயரோ இல்லை, வெவ்வேறு வார்த்தைகள். கீழத்தெரு மக்கள், கங்கா ஸ்வீட்ஸ் , அசோக் மற்றும் நண்பர்கள், இன்னும் பல ... இவை எல்லாம் எப்படி ஒரு மனிதனால் சாத்தியமானது ??? அதுவும் அவன் இறப்பிற்கு பிறகு ? உண்மையான உள்ளம் கொண்டு ஒருவன் பழகினால், எளிமையின் பின் நடந்து சென்றால், அறிவில் மிகுந்தாலும் அடக்கம் கொண்டால், பிள்ளை மனம் கொண்டு பிள்ளைகளோடு உறவாடினால், அனைவரையும் சமமாக மதித்தால், நிறம் , இனம், மதம் தாண்டி மனிதர்கள் அவனைத் தன்னுள் ஒருவனாக நினைப்பார்கள்; பெருமிதம் கொள்வார்கள்; உள்ளத்திலிருந்து கண்ணீர் சிந்துவார்கள். தலைவன் என்பவன் தன்னோடு நடந்து செல்பவன்; தன்னைச் சுமக்கச் சொல்பவன் அல்ல. கலாம் ஒரு மனிதர்; தலைவர். கலாம் சார், என் நிறைவேறாத ஆசைகளுள் உங்களைச் சந்திப்பதையும் ஒன்றாக இறைவன் சபித்து விட்டான். நீர் சொன்னது போல், கனவு காண்கிறேன், உங்களைப் போன்ற மனிதர்களை சந்திப்பதற்காக. நீர் வாழ்க ! எங்கள் மனங்களில். #RIP #APJAbdulkalam 
_ சத்தியசீலன் @ கிறுக்கல்கள்100

Wednesday, July 15, 2015

கொஞ்சம் சிந்தியவைகள்ப்பிற்கான அளவுகோல் அவரவர் தகுதியைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகின்றது . 

ண்கள் பெண்களிடம் சொல்லும் அத்தனை மன்னிப்புகளும் தவறுகளுக்கானது அல்ல அன்பிற்கானது. 

இராமன்களுக்கு சீதையும், சீதைகளுக்கு இராமன்களும் எப்பொழுதும் கிடைப்பதில்லை.

விதைகள் திருடப்படும் பொழுதெல்லாம் காதல் பிறக்கின்றது.

னக்குத் தெரிந்த எல்லாவற்றையும் முழுமையாக சொல்லி விடாதே ! பிறகு, சொல்வதற்கு ஒன்றும் இருக்காது; கேட்பதற்கும் செவிகள் திறக்காது. 

ல்லோரும் கதாநாயகர்களாக வாழத்தான் ஆசைப்படுகிறார்கள். ஆனால், காலம் அவர்களை வில்லன்களாகச் சித்தரித்து விடுகின்றது . 

ங்கு இலவசமாய் கிடைக்க வேண்டியதெல்லாம் (கல்வி, மின்சாரம்,குடிநீர்) காசு கொடுத்தும், காசு கொடுத்துப் பெற வேண்டியதெல்லாம் ( தொலைக்காட்சி , மின்னம்மி, அரவைப்பொறி, மின்விசிறி, அரிசி ) இலவசமாய் கிடைக்கும். 
இப்படிக்கு 
தமிழக அரசு. 
c/o இந்திய அரசு.

காமம் திகட்டிப் போகும் சமயத்தில் காதல் பிறக்கிறது.

'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொன்ன பாரதி மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால், தன் பேரனுக்கோ, பேத்திக்கோ, OC Category யில் PG Seat கிடைக்காமல் கல்லூரி கல்லூரியாக அலைந்திருப்பார். 

ரு மொழியோ, கவிதையோ, மனிதனோ, மனிதமோ, கடவுளோ, கலையோ கொஞ்சம் புரியவில்லை என்றால் அதனை உயர்வாகக் கருதும் மனப்பாங்கு எனக்கு எவ்வாறு தொற்றிக்கொண்டது? 


- சத்தியசீலன் @ கிறுக்கல்கள்100Tuesday, September 2, 2014

மோதிரம்

சில பல காலங்களுக்கு முன்பு, புகைப்படங்களுக்குக் கவிதை எழுதி வந்தேன். அதை, ஞாபகம் வைத்து தோழி சரண்யா, இந்த புகைப்படத்திற்கு எழுதுமாறு கேட்டுக்கொண்டார். இதோ அது உங்கள் முன்னே !


னைக் காணா வேளையில் 
நான் கடிக்கும் ஆறாம் விரல் 
மோதிரம்.

மோதிரத்தின் வெற்றிடமாய் 
என்னுள்ளம் தானிருக்க ...
தினம் தினம் நிரப்புகிறாய் 
விரலால் ... விழியால் .. 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Thursday, August 21, 2014

இப்படிக்கு மருத்துவன்


குறிப்பு : நீயா நானா 17/08/2014 நிகழ்ச்சி கண்டு மனம் வெதும்பி எழுதியது. அரசியல் படுத்தாதீர்கள்.

ருத்துவர்களை மருத்துவம் பார்க்க விடாமல்
வாதாட அழைக்கிறது இந்த 'வக்கீல்' சமூகம்
பொருத்தது போதும் பேசி விடலாம்
என எத்தனித்தால் - ஓர் இருமல் சத்தம்
என்னைக் கலைத்து விடுகிறது
நுரையீரல் புற்றோ இல்லை
உடல் உருக்கும் காச நோயோ இல்லை
மழைக்கால சளி இருமலோ ?
Bronchoscopy ஓ? இல்லை
Sputum Smear ஓ? இல்லை
வெறும் Antibiotic ஓ ?
சொல்லலாமா ? வேண்டாமா ?
சொன்னால் நான் காசு பிடுங்குபவன்
சொல்லாவிடில் நான் மருத்துவம் படிக்காதவன்
நடப்பது நடக்கட்டும்
சொல்லிவிடுகிறேன்
இதையெல்லாம் செய்து விடுங்கள்; - ஆம்
எங்களைத் திட்டுவதற்காகவாவது நீங்கள்
உயிருடன் இருக்க வேண்டுமல்லவா ?
- இப்படிக்கு மருத்துவன்.

- சத்தியசீலன் @ கிறுக்கல்கள் 100 

Related Posts Plugin for WordPress, Blogger...