Saturday, May 28, 2011

நீ என்னடா பேசுற இங்கிலீஷ் ?ன்பு ண்பர்களே ! நான் பல சமயங்களில் வியப்பில் ஆழ்ந்தது உண்டு . " எப்படிதான் இந்த Cricketers இவ்ளோ வேகமா இங்கிலீஷ் பேசுறாங்களோ " என்று.
நான் அவர்கள் போல் பேச பலமுறை முயற்சித்து தோற்றதும் உண்டு !

னக்குத் தெரிந்த பல பேர் தங்கள் மகனையோ ! மகளையோ ! மழலை மாறும் முன்பே ! SPOKEN ENGLISH CLASS இல் சேர்த்து விடுவது உண்டு. அவர்கள் தன் மக்கள் " அம்மா என்று அழைப்பதை விட , " Hi Mom & Dad ... How are you ? " என்று அழைப்பதைத்தான் விரும்புகிறார்கள். பல சமயங்களில் அவர்களைப் பார்த்து,
" தரங்கெட்ட தாய்மொழியா நம் தமிழ்மொழி ? " என்று வினவத் தோன்றும். 

னால் இந்தக் காணொளியைக் காணும் பொது , என்னையும் மீறி என் தமிழ் நாவு " ALL THE BEST RAJ. YOU HAVE A BRIGHT FUTURE ! MAY THE GOD BE WITH YOU " என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
ன் மனதைத் தைத்த ராஜின் வரிகள் ... " we don't have money what we do ... If we have money , we can buy Everything ! " .

றுமை வரைந்த வார்த்தைகள் அவை - அதில் 
வலியும் அதிகம் ; வலிமையையும் அதிகம். 


" ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் 
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று " 
- புறநானூறு .- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகளா ?

Copyright - http://www.nytimes.com

முன் குறிப்பு : அண்மையில் 'துப்பாக்கியில்' ஏற்பட்ட பிரச்சனைகளும், அதன் பிறகு அப்படத்தின் இயக்குனர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாகக் கூறியதுமே இக்கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னை உந்தியது!

" ன் இந்தக் கேள்வி ? உண்மை தானே ! "
என்று உங்கள் இதயத்தில் எங்கேனும் ஒரு மூலையில் நீங்கள் யோசித்தீர்கள் என்றால் உங்களைக் காட்டிலும் ஒரு அறிவிலி இந்த உலகத்தில் யாரும் இல்லை. ஏனென்றால், இஸ்லாம் மதத்தின் வலிமையையும், அதனைப் பின்பற்றும் நண்பர்களின் மனத்தூய்மையையும் அனுபவத்தால் பெறாதவன் பிதற்றுகிற வார்த்தைகள் தான் இவை.

சில சமயம் நான் யோசிப்பதுண்டு ... ஒரு குறுகிய சமூகம் என்பதற்காகவே அவர்கள் மீது நாம் குற்றம் சாற்றுகிறோமா என்று ? ல்லை ... இல்லை .....  அப்படியொன்றுமில்லை ; பின்லேடன் , கசாப் போன்றோரை வசைபாடும் நாம் தான் அப்துல் கலாம் , ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரையும் பாராட்டுகிறோம் என்று நீங்கள் சொல்லலாம். ண்மை தான் . ஆனால், அதே நாம் தான் ... இஸ்லாமிய பெயர் கொண்டவர் என்பதற்காக, இந்திய முன்னால் குடியரசுத் தலைவர் என்று கூட பாராமல் ஆடைகள் கலைத்து , அமெரிக்க அரசு அவமானப்படுத்திய போது அமைதியாக இருந்தோம் . அப்பொழுது நாம் என்ன பெரிதாக செய்து விட்டோம். இப்பொழுது புரிகிறதா ! நான் ஏன் அப்படி சொன்னேன் என்று !

சில மதங்களுக்கு முன்பு சிம்பு நடித்த வானம் படம் பார்த்தேன் . அதில் வரும் பிரகாஷ்ராஜின்  கதாப்பாத்திரம் இன்று பெரும்பாலான இந்திய முஸ்லீம்களின் முகமாக பிரதிபலிக்கிறது.கசப்பானவை என்றாலும் அதுவே உண்மை .தோ ! எங்கோ ! மதமறியா மூடன் செய்யும் அற்ப செயல்களுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் கூண்டில் ஏற்றுவது அழகா?ண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் ... எனக்கு வாய்த்த நண்பர்களுள் உண்மையானவர்கள் என் இஸ்லாமிய நண்பர்களே ! இதில் " உண்மையானவர்கள் "  என்று சொல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் அடிக்கோடிட்டுக் கொள்ளலாம். 

ன் இஸ்லாமிய நண்பன் ஒருவன் தன் மதம் மீது மிகுந்த பற்றுடையவன். நான் அவனுடன் அடிக்கடி இது பற்றி வாதிடுவது உண்டு. 
" முஸ்லீம்ஸ் எல்லாமே Terrorists தான் டா ! பாரு இன்னைக்குக் கூட Newspaper ல போட்டிருக்கான் ; நேத்து நடந்த குண்டு வெடிப்புக்கு ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு தான் பொறுப்பேத்திருக்கான்  ! " .
து அவன் மனத்தைக் காயப்படுத்தியிருக்கும் என எனக்கு நன்றாகவே தெரியும் . ன்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலாய் அவன் ஒன்றே ஒன்று மட்டும் சொல்வான் . " அவனுங்க எல்லாம் முஸ்லீம்சே இல்லடா ! உண்மையான இஸ்லாமியன் அன்பை மட்டும் தான் டா  விரும்புவான்

ப்பொழுது அவன் அளித்த பதில் மழுப்புவதாகவே தோன்றினாலும் ... இப்பொழுது நான் உணர்கிறேன் எவ்வளவு உண்மையான வார்த்தைகள் அவை என்று. ங்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் ;
" தீவிரவாதத்திற்கு மத அடையாளம் பூசி மதத்தைக் கலங்கப்படுத்ததீர்கள். "
க்கிரகாரத்துக் கவிஞன் வாலி கூட ஒரு முறை தன்னை " கூன் பிறைகளால் செய்த கோதண்டம் " என்று குறிப்பிட்டுள்ளார். இன்னும் உங்களுக்கு ஐயம் நீங்காவிடில் ஷாருக்கான் நடித்த " MY NAME IS KHAN " திரைப்படம் பாருங்கள் . உங்கள் பெரும்பாலான வினாக்களுக்கு விடை கிடைத்து விடும்.
சரி அதையெல்லாம் விடுங்கள் ; உங்களிடம் ஒரேயொரு கேள்வி .
ரம்ஜான், பக்ரீத் திருநாட்களில் உங்கள் இஸ்லாமிய நண்பன் உங்களுக்கு அளிக்கும் பிரியாணிச் சோற்றில் விஷம் இருக்கிறதா ? என்று ஆராய்ந்த பின்பா உண்பீர்கள்!


"அன்புக்கு மதம் கிடையாது - அவையெல்லாம் 
அறிவுக்கு மட்டும்தான் "    
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100Thursday, May 26, 2011

எங்கே போனது திண்ணை ?

Copyright : xavi.wordpress.com


" வீட்டில் திண்ணைகள் வைத்து கட்டுவோம் அம்மா 
வழிப்போக்கன் வந்துதான் தங்கி செல்லுவான் சும்மா "  

என்ற நா.முத்துகுமாரின் வரிகளைக் கேட்ட பொழுது தான் சுரீர் என்று உரைத்தது. நம் கலாச்சாரம் காலத்தால் கரைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று.எவனோ ஒரு வழிபோக்கனுக்காக தன் இல்ல வடிவமைப்பில் இடம் கொடுத்த தமிழனின் கட்டடக்கலைக்கு முன்னால் உலக அதிசயங்களும் எனக்கு அற்பம் தான்.இன்றைய சூழலில் எங்கேனும் திண்ணை வைத்த வீடுகளை நான் பார்க்க நேர்ந்தால் அதிசயிப்பது உண்டு.

சிறு வயதில் என் அம்மாச்சி வீட்டிற்கு செல்லும் போது இத்திண்ணைகளின் தரிசனம் எனக்குக் கிட்டும். அந்த இளம் பருவத்தில் எங்கள் பொழுதுபோக்குகள் அனைத்தும் இத்திண்ணையில் தான். அங்கு தான் நான் தாயம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி போன்ற கிராமத்துக்கு உரித்தான விளையாட்டுகளை நான் விளையாடியதுண்டு. என்னுடைய் அழுகையையும் ஆனந்தத்தையும் திண்ணையோடு பகிர்ந்து கொண்ட காலமது.சில சமயங்கள் நான் ஊருக்கு செல்லும் பொது அந்த கால சாகுபடிக்கு ஏற்ப நெல்லோ, கம்போ, பருத்தியோ, உளுந்தோ ... மூட்டைகளாக அடுக்கப்பட்டிருக்கும். அப்பொழுது எல்லாம் அந்த மூட்டைகளின் மேல் எனக்கு கோபம் கோபமாக வரும் . பிறகென்ன, எங்களுக்கான இடம் பறிக்கப்பட்டால் கோபம் வராதா ?

ம்மாச்சி வீட்டிற்கு உறவினர்கள் அதிகம் பேர் சென்றிருந்தார்கள் என்றால், பெண்கள் எல்லாம் உள்ளே ; ஆண்கள் எல்லாம் திண்ணையில் தான். அன்று அளவறியா சந்தோசத்தில் நானும் என் சகாக்களும் இருப்போம். அதன் காரணம் ஏன் என்று இன்று வரை நான் அறியேன்.மாலைப்பொழுதுகளில் , திண்ணையில், அத்தை மடியில் தலைவைத்துத் தெருவில் செல்பவர்களை வேடிக்கை பார்ப்பது என் சிறு வயது பொழுதுபோக்குகளில் ஒன்றாகும்.அப்பொழுது எதிர்வீட்டு திண்ணைகளில் வயசான பெருசுகள் தத்தம் பழங்கதைகளைச்  சொல்லிக்கொண்டிருக்கும். அப்படி என்னதான் அவர்கள் பேசுவார்கள் என்று அந்த வயதில் நான் ஆச்சரியப்பட்டதுண்டு. அதனால் தான் என்னவோ அரட்டையடிக்கும் பல வலைப்பூவிற்கும், ஞானி போன்ற எழுத்தாளர்களின் வலைத்தளங்களிலும் " திண்ணை " என்ற சொல் துரிதமாய் பயன்படுத்தப் படுகிறது." திண்ணைப்பள்ளிக்கூடங்கள் " தென்னிந்தியாவில் அக்காலத்தில் பிரசித்தமாக இருந்தது. திண்ணைகள் நம் கலாச்சாரத்தின் எச்சம்.

சில மாதங்களுக்கு முன்பு நான் " தக்க்ஷின் சித்ரா " சென்றிருந்த போது செட்டிநாட்டுத் திண்ணைகளைப் பார்த்தேன். எனது நண்பர்கள் உள்ளே செல்ல நான் மட்டும் அந்த திண்ணையில் அமர்ந்திருந்தேன். பழைய நினைவுகள் மனதின் பாதையில் நடந்துவிட்டு சென்றன. சன்னல் ( MICROSOFT WINDOWS ) வழியே உலகைப் பார்க்கும் என் போன்ற இளைய சமூகத்திற்கு திண்ணைகள் தூரம் தான்.தனைப் படிக்கும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ! எங்கேனும் திண்ணையை நீங்கள் கண்டால் ஐந்து நிமிடம் அமர்ந்து விட்டு செல்லுங்கள்.

" உறவுகள் மறந்த உலகில் உறவுகளை உணர்வீர்கள் "


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Tuesday, May 24, 2011

மன்னிக்கவும் கோகுல் !

Copyright - http://www.keeprelationships.com


குறிப்பு : நண்பர்களுக்குள் ஊடல் வருவது இயல்பு தானே ! அப்படியொரு ஊடல் பொழுதுகளில் உதிர்த்த வரிகள் . நண்பர்களை, அவர்களின் நட்பை புரியாமல் தவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இக்கவிதை . ண்பனே - நீ
என் வாழ்க்கையில் 
உன் பகுதியைச் 
சுருக்கிக் கொண்டாய்.
நான் - என் 
வார்த்தைகளை 
உன்னிடம்
சுருக்கிக் கொண்டேன்.
நான்
பேச நினைத்த போது
பேசாமல் விலகினாய் 
நீ
பேச நினைக்கும் போது 
பேச இயலாமல் 
விலகுகிறேன்.

நான் 
உன்னிடம் பலவற்றைப் 
பகிர்ந்து கொள்ள 
விழைகிறேன். 
ன்று தான்
புரிந்தது நீயும்
விழைகிறாய் என்று ...
பகிர்ந்து கொள்ள அல்ல 
பிரிந்து செல்ல

ன்னை இன்னொரு
அருணனாய் நினைத்திருந்தேன் - அதனை
அர்த்தமற்ற அந்தியாய் மாற்றி விட்டாயே !

சுகதுக்கங்களை     
சுதந்திரமாய்
சொல்லுமிடம்
நண்பனுள்ளம்.
ந்த நண்பனிடத்திலேயே 
சுதந்திரமில்லை
பிறகென்ன
அந்த உள்ளத்திற்கு.

நானும் பழகிக்கொண்டேன்
உன்னைப் போல் இருப்பதற்கு...
காலையில் காலை வணக்கம்
மாலையில் மாலை வணக்கம்
முடிந்தது நட்பின் இலக்கணம்.

ன்ன தான் 
நடிக்க முயன்றாலும்
தோற்று விடுகிறேன் - உன்
இயல்புக்கு முன்னால் .

ள்ளத்தின் உண்மைகளை
உள்ளத்திலேயே வைத்திருந்தால் 
யாரறிவார் அது உண்மையென்று !

காதலினும் உயர்ந்தது நட்படா ! - நம்
நட்பிற்கு அவ்விடம் இல்லையடா!
காதலில் கூட மறைத்திடலாம் 
நட்பிடம் மறைப்பது அரிதடா !

நான் சொல்வது 
உனக்கு மட்டுமல்ல 
நட்பைப் புரியாத 
அனைத்து நல்லவர்களுக்கும்.
து எப்படியிருந்தாலென்ன ?
உன் விருப்பம் போல் ...
நண்பனே !
விடை பெறுகிறேன் - என்
வார்த்தைகளைச் சுருக்கிக் கொண்டு . -சத்தியசீலன்@கிறுக்கல்கள்100Tuesday, May 17, 2011

❧ அப்பா ❧

Copyright : ftp.cdc.gov


குறிப்பு : இக்கவிதை என் நண்பன் கோகுலின்  தந்தை எங்களை விட்டுப் பிரிந்த பொழுது எழுதியது. இதுவரை அவனுக்கு நான் இக்கவிதையை அனுப்பி வைக்கவில்லை ! முதல் முறையாக உங்களுக்காக ....


ன்பு நண்பனே!
ஆறுதல் கூற வயதில்லை
இருப்பினும்....
ஆசை - என் 
அன்பு நெஞ்சம் 
ஆழ்ந்த வருத்தத்தில் - நம்
அன்பு அப்பா 
மறைந்த  நினைவினில் ...

ன் வார்த்தையால் 
உன்  வருத்தத்தை 
விலக்க இயலா !
நீ
அடைந்த மதிப்பெண்கள் 
படிக்கும் கல்லூரி
பார்க்கும் வேலை
கிடைக்கும் சம்பளம்
வாழ்க்கையின் சந்தோசங்கள் 
யாருக்காக
என்பது
எனக்கு தெரியும்.
னக்குத் தெரிந்து
என்ன பயன் ?
தெரியவேண்டிய அந்த
தெய்வத்திற்கு
தெரியவில்லையே ! 

டந்தது நினைத்து 
கண் சிந்தாதே !

நிறைவான சந்தோசமும்
மிதமான கோபமும்
கடின உழைப்பும்
உதவும் மனமும்
உனக்குள் கொள்;
உலகம் உன்னைத் தன
தலையில் கொள்ளும்.

மூத்த மகன் நீ
பொறுப்புகளுக்கு மூத்த மகன்.
பற்றுகோல் நீ
உன் குடும்பத்திற்கு ...
தூணாக விளங்க வேண்டிய நீ    
துவண்டு விடக்கூடாது.
துணிந்து நில்
தூரங்கள் தூக்கிலிடப்படும்;
துன்பங்கள் துன்பப்படும்.

ந்நிகழ்வு கண்டு
வருந்தாதே!
சோகங்கள் மட்டும் தான்
பாடங்கள் புகட்டும்.
சொந்தங்கள்...
பந்தங்கள்...
நண்பர்கள்..
பகைவர்கள்...
அறிந்திருப்பாய் ...
அவர்களைப் பற்றி 
அனைத்தையும்
அறிந்திருப்பாய்.

நிலையான இந்த உலகில்
நிலையில்லாதது நம் வாழ்வு;
நிலையில்லாத வாழ்க்கையில்
நிலையான புகழைத் தேடு.

துன்பங்கள் உன்னைத் தொடும் போது ...
கண்ணை மூடு
கடவுளை நாடு
கவலைகள் விடு
கடமைகள் தொடு    
மனதின் வடு
என்னிடம் விடு 
மற்றவர்  துன்பங்களைத் தாங்கிக் கொள்ள 
நான் ஒன்றும் ஏசுபிரான் அல்ல ....
 
ருப்பினும் தாங்குகிறேன் ,
ஏனெனில் 
நீ எனக்கு மற்றவனல்ல !!!!-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

   

Monday, May 9, 2011

இது நம்ம பாட்டு தான் !

Photo Courtesy : Sathyaseelan Rajendran


குறிப்பு : கொஞ்சம் வித்தியாசமான நேரத்துல தான் இந்த கவிதை எழுதுற சூழல் எனக்கு வந்துச்சு. எங்க Batch Day ... எப்பொழுதும் போல இல்லாம கொஞ்சம் வித்தியாசமா எதாவது பண்ணலாம்னு யோசிச்சோம் . சரி ஒரு பாட்டு compose பண்ணுனா என்னான்னு தொன்றிணப்ப தான் ... இந்த வரிகள் . உங்க Mind Voice எனக்கு புரியுது ! எதுப்பா ? உங்க Batch அப்படின்னு தானே கேக்குறீங்க ! என்னோடது 2006 Batch of Thanjavur Medical College. And I am proud to Say My Batch name ... Ya We are VALIANTZ .


ட்பென்னும் வலையைப் பிண்ணிகொண்டோம்
நட்புக்குள் நாங்கள் மாட்டிக் கொண்டோம்
நட்பாலே நாங்கள் வாழுகின்றோம் - எங்கள்
நட்பாலே பிறரை வாழ வைப்போம்.

ட்புக்கு அகராதி நாங்கள் தானே !
கர்ணனும் எங்கள் சீடன் தானே !
நட்பிற்கு தாஜ்மஹால் கட்டிவிட்டோம் - எங்கள்
கல்லூரி கற்களிலே கலந்து விட்டோம்.

சோகங்கள் கண்ணில் மழை பொழியும் - நண்பன்
கைவிரல் தானே துடைத்துவிடும்;
வெற்றிகள் தலையில் ஏறிக்கொள்ளும் - நண்பன்
குட்டுகள் தானே இறக்கி வைக்கும்.

னவுகள் மட்டும் காண மாட்டோம் - பலர்
கனவுகள் கனிந்திட வழிவகுப்போம்.
மருத்துவம் மட்டும் பார்க்க மாட்டோம் - பலர்
மனங்களில் மகனாய்/மகளாய் வாழ்ந்திடுவோம்.

ட்டம் பாட்டம் கொண்டாட்டம்
எந்நாளும் மாறாது இந்தக் கூட்டம்.
-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Saturday, May 7, 2011

உன்னைப் பற்றி ...

Copyright : Ganesamoorthy


குறிப்பு - இது என் பள்ளிக் கால நண்பன் கணேசமூர்த்திக்காக நான் 12 வகுப்பு படிக்கையில் எழுதப்பட்டது ! இக் கவிதையை அவனுக்காக மட்டும் அல்ல இதைப் படிக்கும் உங்கள் அனைவருக்கும் , என் நட்பை நேசிக்கும் அனைவருக்கும்  சமர்ப்பணம். கல்லூரிப் பெண்கள் கவனத்திற்கு 'HE IS STILL SINGLE' !

ழகின் 
அகராதி

நட்பின்
இமயம்

புறத்தால்
கெட்டவன்

மனத்தால்
தூயவன்

படிப்பில்
பரவாயில்லை

நடிப்பில்
நடிகர் திலகம்

துடிப்பில்
இதயம்

பழகுவதில்
பால்

விலகுவதில்
விலாங்கு

பிடித்தது
காதல்

பிடிக்காதது
துரோகம்

புரிவது
பாசம்

புரியாதது
பாடம்

ஆடைகளில்
ஆணழகன்

இல்லாமல்
பேரழகன்

பேச்சில்
கனிவு

பாட்டில் 
தெளிவு                              

வீட்டில் 
நல்லபிள்ளை

விடுதியில்
கெட்டபிள்ளை      

இன்னும் சொல்ல 
என்னிடம் வார்த்தையில்லை
ஏன்?
தமிழிளுமே வார்த்தையில்லை .- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Friday, May 6, 2011

சுமைகள்

Copyright : www.designzzz.comத்தனை சுமைகள்
நம் மனித வாழ்வுதனில்...

பிறந்தவுடன்
அரைஞான்கயிறு ஒரு சுமை

ஓர் வயதில்
உடைகள் ஒரு சுமை

1 முதல் 5 வரை
உணவு ஒரு சுமை

5 முதல் 10 வரை
மருந்து ஒரு சுமை

10 முதல் 15 வரை
படிப்பு ஒரு சுமை

15 முதல் 20 வரை
பருவம் ஒரு சுமை

20 முதல் 25 வரை
பணம் ஒரு சுமை

25 முதல் 30 வரை
மனைவி ஒரு சுமை

30 முதல் 35 வரை
மக்கள் ஒரு சுமை

35 முதல் 40 வரை
உறவுகள் ஒரு சுமை

40 முதல் 50 வரை
பழைய பதிவுகள் ஒரு சுமை

50 க்கு மேல்
நாமே ஒரு சுமை

சுமைகளிருந்தாலென்ன
அதை சாதிக்கும்
தகைமை உன்னிடம் உள்ளதன்றோ?
பிறகேன் கவலை!

சுமைகளை 
உடைத்து சூடங்களாக்கி
உன் வெற்றிகளுக்கு 
ஆராதனை காட்டு !

- ஜெயம்
 

 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...