Sunday, September 18, 2011

கீழ்க்காணும் யாவும் காதல் கவிதைகளே !

புத்தகம் 

Copyright : http://wallpaper4free.org

னக்கான வார்த்தைகள் மட்டும் சேர்த்து - ஒரு
புத்தகம் எழுதினேன் ;
பிரித்துப்பார்த்தால்
பக்கங்களெல்லாம் - உன்
பெயர் மட்டுமே !

பசுமையாய் அவள்

Copyright : http://www.desktopwallpaperhd.net

காலத்தின் கறுப்புத் தடங்கள்
பதிந்து கிடக்கும் என் மனச்சுவர்களில் ...
பசுமையாய் அவள் நினைவுகள் ! 


முதல் எழுத்து 

Copyright : besthomedecorators.com
யிர் அழகு நானும்
மெய் அழகு நீயும் ...
உயிர்மெய் அழகை உருவாக்கும்
உன்னதமான நேரம் - இந்த
முதலிரவுக் காலம்.


ஒற்றை ரூபாய் 

Copyright : www.sparkthemagazine.com


ன்பே!
ஒற்றை ரூபாயாக 
உன் காதல் - நீ 
கொடுப்பதிலோ *
வைப்பதிலோ **
இருக்கிறது 
என் காதல்.

பின் குறிப்பு : * இத்தல் நிகழ்வு
                          ** இத்தல் நிகழ்வு.

உதடு 

Copyright : webs.com


ன்பே ! நீ 
முனுமுனுக்கும் பொழுதெல்லாம் - உன்
உதட்டுச் சுருக்கங்களில்
ஒளிந்திருக்கிறது ....
எனக்கான தமிழும்;
தமிழுக்கான கவியும்.- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Tuesday, September 13, 2011

களவாடிய கவிதைகள் !

Photo Courtesy : http://desigg.com

த்தி பூத்தாற்போல்
ரிதாய் பூக்கிறது 
அழகுப் பெண் பூக்கள்
அம்பது வருட சுதந்திர இந்தியாவில்.

புயலோடு போராடி;
புழுதியோடு மாறாடி
பூத்து நிற்கிறது
புதுப்புது தெம்போடு.

க்காள் தங்கை பிரிந்து
அங்கொன்றும் இங்கொன்றும்
அடைக்கப்படுகிறது
அரைசாண் கயிற்றுக்குள்
மாலையாக ...

யிற்றில் சேராத
கானகத்து மலர்கள் - எறியப்படுகின்றன
குப்பைத்தொட்டிகளில்.

லர்கள் !
கசங்கியதால் வந்தது தண்டனை;
கசக்கியவர்களுக்கு ஏது தண்டனை ?

காயம் காயாத கமலங்கள்
கடித்தெரியப்படுகின்றன
மனிதப்பன்றிகளால்
மாமிசப்பொறுக்கிகளால்

லர்கள் !
கடவுளிடம் சேர வேண்டும் - இல்லை
கல்லறையில் சேர வேண்டும் - இல்லையென்றால்
கசங்கித்தான் தீர வேண்டும்.
காரணம் கற்பித்த கயவர்கள் எங்கே ?

லர்கள் களவாடப்படுகின்றன
மணங்களால்; மனங்களால்.
மங்கைகளும் களவாடப்படுகின்றன
மணங்களால்; மனங்களால்.

காலத்தின் வேர்கள்
களவாடிய கவிதைகள்;
கற்புக்காக போராடும் - எம்குலக்
கன்னிகள்!


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 Monday, September 5, 2011

நானாகிய நான் !

Copyright : Sathyaseelan

ன்பு நண்பா !
அறிவு நண்பி ...
அனைவருக்கும் வணக்கம் .

றிமுகம் தேவையில்லை - என்றால்
அருகில் வந்து பேசலாம்
அறிமுகம் அவசியமென்றால்
அடுத்த வரி படிக்கலாம் ...

நான்
தோல்வியின் தோழன்
தமிழின் காதலன்
நண்பனுக்கு நண்பன்
எதிரிக்கும் அன்பன்.

வி தெரியும்...
காதல் தெரியாது.
புகைப்படம் தெரியும்...
புகைவிட தெரியாது.
கணினி தெரியும் ...
க்வாட்டர் தெரியாது.

நான்
நல்லவன் என்று சொல்லவில்லை....
நல்லவனுக்கான நல்லவைகள் மட்டும் உள்ளவன்
என்றே சொல்கிறேன் .

நான்
தேடும் நட்பு ...
உங்களில் இருக்கலாம்.
நீங்கள்
தேடும் அன்பு ....
என்னிடம் கிடைக்கலாம்.
பகிர்ந்து கொள்ள
தடைகள் தென்படலாம்...
புரிந்து கொள்ள
மொழிகள் கைவிடலாம்....

உணர்வுகளால் உணர்த்த முடியாத
உண்மையான நட்பும் உளவோ ?

வா தோழா !
முகம் தெரியாத நீயும் ..
அகம் புரியாத நானும்..
இணைவோம்
இணையத்தில்
உணர்வுகளோடும் ...
உண்மைகளோடும் .... 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 


தொடும்தூரம் நீயில்லை !

Copyright : .tumblr.com
பல்லவி: 
தொடும்தூரம் நீ இல்லை ;
தொலைதூரம் தான் தொல்லை.
தொட்டாச்சிணுங்கி என் மனசு - தினம்
தொட்டுப் பார்க்கிறதடி உன் கொலுசு.

சரணம்:1
முத்தம் கேட்டு இம்சித்ததில்லை - உன்னை
சத்தம் போட்டு வைததுமில்லை.
நித்தம் உன்னை நினைத்ததுமில்லை - நின்னை
நினைக்காத நாள் என் வாழ்விலில்லை.

சரணம்:2
முகம் பார்த்து பேசியதில்லை;
முகப்புத்தகத்திலும் பேசியதில்லை.
முல்லைப் பூவடி உன்னுதடு;
முத்தம் கேட்டு வாடுதடி என்னுதடு.

சரணம்:3
காலம் பிரித்து வைத்த காதல்;
காயம் தந்து வைத்த காதல்.
காமன் எட்டி நின்ற காதல்;
காலன் விட்டு நின்ற காதல்.

சரணம்:4
றக்கும்வரை காதல் வாழ்வதில்லை;
இறந்தபின்பு காதல் சாவதில்லை. - நான்
இருக்கும் நொடி காதல் வீழ்வதில்லை - உன்னை
எரிக்கும்நொடி காதல் காதலில்லை.


 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Saturday, September 3, 2011

தெரியாத முகங்களே !தெரியாத முகங்களே !
தெரிகின்ற முகங்களே!
உண்மை தேடும் உணர்வில்லா விழிகளே !

ருக்கின்ற இறைவன் இருப்பது புரியுமோ ?
எரிக்கின்ற நாட்கள் எவனுக்கும் தெரியுமோ ?

ணங்கள் தேடும் மாமிசப்பட்சிகள்;
பிணங்கள் தின்னும் அதிசயப் பூச்சிகள்.

யிரின் உறைவிடம் ஒருவனும் அறியா ;
 உணர்ந்தவன் உலகினில் இருப்பது  தெரியா.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100Thursday, September 1, 2011

Baa Baa Black Sheep By Airtel super singer SRINIVAS !

Copyright : Srinivas

ர்டெல் சூப்பர் சிங்கர் ஸ்ரீநிவாஸ் , தனது வசீகரக் குரலால் மனதை மயக்கும் மாயன். திருமணமானவர் எனினும் , அவரின் குரலுக்கும் அவருக்கும் பெண் ரசிகைகள் அதிகம். நானும் அவருடைய கந்தர்வக் குரலக்கு அடிமை தான். பல திரையிசைப் பாடல்களை அவர் பாடி நாம் கேட்டிருக்கிறோம் . ஆனால், Baa Baa Black Sheep ? இதோ உங்களுக்காக.

வீடியோ பாத்திட்டு கிளம்பிடாதீங்க ! அப்படியே அவருடைய வலைத்தளத்துக்கு போங்க ; அவர் குரலில் நிறைய பாடல்கள் கேளுங்க !  வருங்கால இசையுலகம் உங்களுக்காக காத்திருக்கிறது ஸ்ரீனி நண்பா ! வாழ்த்துக்கள் ! 

வலைத்தள முகவரிக்கு செல்ல இங்கே அழுத்தவும்


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Related Posts Plugin for WordPress, Blogger...