Tuesday, August 20, 2013

நம்ம திருச்சி !

http://www.123photography.co.uk

குறிப்பு : இப்பாடலைத் தன்னுடைய வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட 'நம்ம திருச்சி' நண்பர்களுக்கு எனது நன்றிகள்.

வாடா மச்சி ! – இது
நம்ம திருச்சி
வாடா மச்சி ! மச்சி ! – இது
நம்ம திருச்சி.

சோழனுக்கு சோறு போட்ட உறையூரு – இங்கு
சொல்லாம கொல்லாம கிடக்குது பாரு.
சத்தம் எங்கும் ஏறிப்போச்சு தமிழ்நாட்டுல – நீ
சந்தோசமா வாழலாம் எங்க ஊருல .

தீவு போல இருக்குது பார் ஸ்ரீரங்கம் – இது
காவிரியும் கொள்ளிடமும் கொஞ்சும் இடம்.
ஒரு முறை ஏறி வாடா மலைக்கோட்டை – உன்
உச்சி முதல் பாதம் வரை ஆயுள் ரேகை !

ங்க ஊரு தி-நகரு தில்லைநகரு – இங்கு
ஏராளமா கொட்டிக்கிடக்கு ரொம்ப பிகரு.
பொண்ணுங்க பப்புல மப்புல திரிவதில்லை – நீ
கைநீட்டிக் கூப்பிட இது சென்னையில்லை!

காந்தி வந்து தொறந்து வச்ச மார்கெட்டு – இங்கு
காணும் முகம் ஒவ்வொன்னிலும் கலாம் லுக்கு.
சுஜாதா, வாலியெல்லாம் நம்ப ஊருட – இவங்கள
படிக்காதவன் மனுசனில்லை நீயும் கேளுடா !
 
-சத்தியசீலன் @ கிறுக்கல்கள்100

Friday, July 19, 2013

வாலி நீர் வாழி !


Photo Courtesy : Google

ங்கே
கவிதைப்புத்தகங்கள் கிழித்தெறியப்படுகின்றன.
கவிஞர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.
கவிஞிகள் கற்பு அழிக்கப்படுகிறது.
முடமாய்த் தமிழ் திரிகிறாள்.
முண்டாசுக்கவி மூக்கு சிந்துகிறான்.
திருவரங்கம் காவிரிக்குள் மூழ்குகிறது.
வெற்றிலைப் பாக்கு இரத்தம் சிந்துகிறது.
வாலி கொலை செய்யப்படுகிறார்.

-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Wednesday, May 29, 2013

மாடர்ன் தத்துவப் பாடல் !


குறிப்பு : இந்த பாடல் (?) 'இளையதலைமுறை' STUGAZINE இரண்டாவது செய்திமடலுக்காக எழுதிய தத்துவப்பாடல் !!! ??? செய்தி மடலைத் தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே அழுத்தவும். இளையதலைமுறை அரசு சாரா பொது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.பல்லவி:
ட இங்க பாரு ! அங்க பாரு !
இவன பாரு ! அவன பாரு !
சொல்லி சொல்லி போரடிச்சு போச்சு மாப்புள  - நீ
சொந்தமா சிந்திச்சிடு கொஞ்சம் கேப்புல.

சரணம்:1
காந்தி போல வாழ்ந்த காலம் போயே போச்சு  - நீ
கேட்ஸ் அ போல அழுத்தி பாரு கணினி மௌசு.
ஆமை முயல் காலமெல்லாம் மாறிப் போச்சு - இங்கே
பத்து முயல் ஓடுது பாரு - ஓடு பாஸு !

சரணம்:2
சிரிச்சு பேசும் மனசுக்குள்ள ஆயிரம் தூசு  - நீ
சிந்திக்காம பேசிட்டீனா போயிடும் மவுசு.
அம்மா அப்பா வாத்தியாரு கடவுளு தாண்டா - உனக்கு
கஷ்டம் வந்தா வந்து நின்னா நண்பேன் தாண்டா !

சரணம்:3
ண்ணு முழி பிதுங்க நீயும் படிப்ப புக்ஸு - அட
கண்ண நீயும் தொறந்து வச்சா உலகமே புக்கு !  - நீ
காசு பணம் வச்சிருந்தா கடவுளு இல்ல - மனுஷ பய
கண்ணீர தொடச்சு விட்டா மரணமே இல்ல !


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Friday, May 3, 2013

பெர்பெக்ட் பெண்ணே !

© www.tumblr.com
 குறிப்பு : சில சமயம் என்ன தான் நாம் மாங்கு மாங்கு என்று யோசித்து வெண்பா, கலிப்பா , வஞ்சிப்பா என எல்லாம் கரைத்து எழுதினாலும் அது ஹிட் அடிப்பதில்லை. கொஞ்சம் லோக்கலாக 'ஒய் திஸ் கொலவெறி' போல் எழுதினால் தான் நம்மையும் கவிஞர் என இந்த தமிழ்ச்சமூகம் ஒப்புக்கொள்கிறது. மக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழியே ! இது குறித்த எனது அறிவுக்கண்ணை திறந்து வைத்த நண்பன் பிரவீன் அவர்களுக்கு இக் கவிதை(?) சமர்ப்பணம். இதனை ஒரு பாடலாக வடிவமைத்துத் தராமல் காலந்தாழ்த்தும் அன்பு நண்பர், இசை வித்தகர், 'கசப்பு இனிப்பு', 'தி லாஸ்ட் பாரடைஸ்' போன்ற ஹிட் அடித்த குறும்படங்களுக்கு இசை அமைத்த திரு.உமாசங்கர் அவர்களுக்கு எனது கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். மேலும் நீங்கள் , சூப்பர் சிங்கர் கனவின் முதல் கட்டமான பாத்ரூம் சிங்கர் பதவியில் தற்பொழுது இருந்தால், இப்பாடலை ஆண்ட்ரியா பாடிய  ' நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ' படத்தின் ப்ரோமோ பாடல், ' க்ரேசி மின்னல்' பாடலோடு பொருத்திப் பாடி மகிழலாம். இப்பாடல் கண்டு சமீப கால தனுஷ் போன்ற  கவிஞர்கள் கோபம் கொண்டால், என்னை மன்னித்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 


பெர்பெக்ட் பெண்ணே
பைத்தியம் நானே
உன்னாலே சுத்தி சுத்தி
காதல் கிறுக்கன் ஆனேன் !

ன் விழி ஓரம்
ஒரு துளி கண்டேன்
கண்ணீரா கவிதையா
குழம்பி நானும் நின்றேன்.

நீ செல்லும் ஸ்கூட்டி தனில்
நானும் சேர வேண்டும்
சொர்க்கங்கள் திருமணங்கள்
அங்கு நிச்சயம் ஆகும்

நீ போடும் சட்டை கலரில்
நானும் சட்டை போட்டேன்
சண்டைகள் போதும் அன்பே - நீ
காதல் செய்ய வேண்டும்

காபிஷாப்பில்  க்ரீடிங் கொடுத்தேன்
பஸ்ஸ்டாப்பில் தினமும் பட்ரோஸ் கொடுத்தேன்
பர்த்டே எல்லாம் பரிசுகள் கொடுத்தேன்
பாரின் சரக்கும் உனக்காக தவிர்த்தேன்.

பெர்பெக்ட்பெண்ணே
பைத்தியம் நானே
பாரடி! பேசடி!
பாவம் நானும் தானடி!
பிரெண்ட்ஷிப் எல்லாம் கட் பண்ணி விட்டேன் - உன்னோட
பிரெண்ட்சை நானும் மதிக்க கற்றேன்
ஜாக்கி தெரியும் பேண்டை வெறுத்தேன்
சாமியார் போல உன் சரணம் படித்தேன்.

ங்கேயோ கிடந்த என் கைபேசி எல்லாம்
பாக்கெட்டை விட்டு எங்கும் நகருவதில்லை
சாரி பலவும் லவ் யூ சிலவும
டெம்ப்லேட்டில் தினமும் உனக்காக சேர்த்தேன்

காதல் கலவும்
காயம் தரவும்
காதல் இதுவா - என
கண்கலங்கி நின்றேன்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100Tuesday, April 16, 2013

நண்பனுக்காக !

Copyright : blog.hirschi.se

 குறிப்பு : இக்கவிதை என் பள்ளிகால தோழன் அருணனுக்காக எழுதப்பட்டது . இது தன் நண்பனைப் பற்றி கவிதை எழுத துடிக்கும் கவிஞனுக்கும் அவன் கைகளுக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அமைக்கப்பட்டது. அவனுடன் அதிகம் நேரம் செலவிட்டதில்லை; அதிகம் ஊர் சுற்றியதில்லை; அதிகம் பகிர்ந்ததில்லை; அதிகம் சண்டையிட்டதில்லை; இருப்பினும் ஏனென்று எனக்குத் தெரியவில்லை. அவனைப் போன்ற ஒரு நண்பன் இதுவரை எனக்குக் கிடைத்ததில்லை.

யாராருக்கோ
கவிதை எழுதிய என்
கைகள் 
உனக்காக எனும் போது ...
சுருங்கிக் கொண்டது.

கேட்டேன் கைகளை ...
கேள்விக் கணைகளால்.

என் கணை செல்லும் முன்னே
மறு கணை வந்தது.

முதலில் என் கேள்விக்கு பதில் ...
கேள்!

கவிஞனுக்கு தற்பெருமை அழகா?
அசிங்கம்.

நீ கவிஞனா?
காலம் பதில் சொல்லும்.

யாருக்காக இந்த கவிதை?
நண்பனுக்காக.

பெயர்?
அருணன்.

அர்த்தம்?
சூரியன்.

எதற்காக இக்கவிதை?
பார்க்காத நான்
பார்ப்பதே அவன் எழுத்துக்கள் மட்டும் தான்
அந்த எழுத்துக்கள் பிறப்பதற்காக
என் எழுத்துக்கள்.

நண்பனென்றால்?
உயிர்.

உனக்கு?
எனக்கும் அப்படித்தான்.

செய்வாயா உன் நண்பன் சொல்வதை?
வீணான கேள்வி.

காரணம்?
உயிர் சொல்வதைத் தானே உடல் செய்யும்.

பிடித்தது?
யாரிடம்.

அவனிடம்?
மரியாதை ...

மன்னிக்கவும். அவரிடம்?
எல்லாம்.

பிடிக்காதது?
எல்லாம்.

உயிரைத் தருவாயா உன் நண்பனுக்காக?
உயிரே அவன் என்கிறேன்.

நட்பைப் பற்றி ஒரு கவிதை ?
அன்பைத் தருவாள் அன்னை
அனுபவம் தருவார் தந்தை
அறிவைத் தருவார் ஆசான்
உள்ளம் தருவாள் மனைவி
புகழைத் தருவான் பிள்ளை
இவை அனைத்தும் தருவான்
"நண்பன்"

நண்பனுக்காக?
வாழ்வேன்.

நண்பனில்லாமல்?
வீழ்வேன்.

உலகில் உயர்ந்தது உங்கள் நட்பா?
உலகில் தாழ்ந்தது  உன் கேள்வி.            

உன் கேள்வி?

ஏன் கவிதை எழுதாமல் சுருங்கினாய்?
மடையா!
உன் மனதில் உன் நண்பன்
அவன் மனதில் நீ !
இருவரும் ஒருவரே ..

உடலால் வேறுபட்டாலும் 
உள்ளத்தால் ஒருவரே !

சுற்றி வளைக்காதே ...
பதில் கூறு .

கடைசியாக ஒரு கேள்வி?
கேள்.

கவிதை தோன்றுமிடம்?
உள்ளம்.

உள்ளம் ஒன்று எனும் போது
உன் நண்பனை பற்றிய கவிதை என்பது...
உன்னைப் பற்றியாகாதா?
தற்பெருமை ஆகாதா?
கவிஞனுக்கு அழகா?
போதுமா விளக்கம்.

புரிந்தது .
மன்னித்து விடு.

என் வாழ்த்துக்கள் உன் நண்பனுக்கு...
என் வணக்கங்கள் உங்கள் நட்பிற்கு.-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Monday, April 15, 2013

இப்படியும் ஒரு புத்தாண்டு !

Copyright : Flickr

குறிப்பு : கிறுக்கல்களைப் படம் பிடித்துச் சென்றுள்ள பத்தாயிரம் கண்களுக்கும் மற்றும் தமிழை நேசிக்கும்  அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மிழ் வாழ்த்து சொல்ல ஆங்கில அட்டைகள்

ஜீன்ஸ் அணியும் தமிழன்னைகள் 

தமிழ் பேச மறந்த தமிழர்கள் 

மம்மி என்று சொல்லும் மழலைகள் 

தமிழே அறியாத நடிகையின் பேட்டி 

தமிழ் மணக்காத செம்மொழி மாநாடு 

காமக்காட்சிகள் அரங்கேறும் செம்மொழிப் பூங்கா

அறிவுப்புகளெல்லாம் ஆங்கிலத்தில் 

தமிழ்ப்படங்களுக்கு வரிவிலக்கு தமிழில் பெயர் வைத்தால் 

தமிழனைக் கொன்று குவித்தோம் ஈழத்தில்

தைக்கும் சித்திரைக்குமாய் தத்தளிக்கும் புத்தாண்டு 

இருந்தும் உணர்வற்றுக் கொண்டாடுகிறோம் ;
இனிய  தமிழ்ப் புத்தாண்டு !!!
-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100Thursday, April 11, 2013

சிந்தி விடாதே !

Copyright : www.loverofsadness.net

டி என்னவளே ! -உன்
கருவிழி மேகங்கள்
கண்ணுக்குள் மோதிக்கொண்டு
கருங்குளத்து நீர்
கன்னங்களில் வழியும் பொது - என்

தயக் குளத்தின்
செந்நீர் சிதறி
சாலையில் ஓடுதடி- என்னை
சோகத்தில் வாட்டுதடி.

ழிகின்ற நீர் - உன்
வாய்க் கமலத்தில்
வடிந்து விட்டால் - நீ
மகிழ்ச்சியால் சற்று சிரித்து விட்டால் - என் 

தயத்தின் நீரெல்லாம் 
ஓட மறுத்து
ஒரு நிமிடம் உறைந்து
உன் அழகை ரசிக்குதடி
உன்னை முத்தமிட துடிக்குதடி

ண்கள் தான் காதலின் பிறப்பிடம்
கவிஞர்கள் சொல்கிறார்கள் - உன்
கண்ணீரல்லவா என் உயிரின் இருப்பிடம்
நான் சொல்கிறேன்.

சிந்தி விடாதே - என் செல்லமே !
கண்ணீரை மட்டுமல்ல - என்
காதலையும் தான்.                 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100Wednesday, April 10, 2013

நான் பெண்

Copyright : photo2000.blogspot.com


விளக்கு அணைக்கப்படுகிறது;
நான் புரட்டி எடுக்கப்படுகிறேன்.

விளக்கு பிரகாசிக்கிறது;
நான் புரட்டி எடுக்கப்படுகிறேன்.

விளக்கு முக்கியமில்லை;
நான் புரட்டி எடுக்கப்படுகிறேன்.

பரத்தை - நடிகை - மனைத்துணை.


*பரத்தை - விலைமகள்
*மனைத்துணை - மனைவி.

-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Thursday, April 4, 2013

நட்புக்காக ஒரு பெக்

Copyright : commons.wikimedia.org
தோ  அங்குதான் அவன் இருக்கிறான்.
கொஞ்சம் தொட்டுவிடும்  தான்.
என்று ஆரம்பித்தது எங்கள் உறவு என சரியாகத் தெரியவில்லை
கல்லூரிக் காலமாக இருக்கலாம்.
எவனோ ஒருவன்  அறிமுகம் செய்து வைத்தான் .
என்றாலும் இத்தனை நெருக்கம்
எனக்கே ஆச்சரியம் தான்.

வன் எனக்கு நண்பன்  - ஆம்
அவனிடம் மட்டும் தான் நான் உண்மையாக இருந்துள்ளேன்.
காதல் கசக்கும் போதும்
கண்ணீர்  பெருகும் போதும்
அவனுடன் தான் நான் இருப்பேன்.
சில சமயம்
பள்ளிகாலச் சொந்தங்களோ
கல்லூரிக்காலப் பந்தங்களோ  வந்தால்
இவனையும் அழைத்துச் செல்வதுண்டு.
பெரும்பாலும் இவனைத் தெரியாதவர்கள் இல்லை.
தெரியாதவர்களுக்கு இவனை அறிமுகம் செய்ய
நான் மறந்ததில்லை.

னைவி வந்த போதும்
மகள்கள்  பிறந்த போதும்  - எங்கள்
நட்பில் மட்டும் மாற்றமில்லை.
அவர்களுக்கு இவனைப் பிடிக்காது.
'என்னைக் கொலை செய்யத் திட்டமிடுகிறான்' எனக் கூறியுள்ளார்கள்.
'சீ ... போடி'
உன்னை  மணக்கும்   முன்பே
அவனை எனக்குத் தெரியும்.
நட்பில் விஷம் கலக்காதே - என
நா தெறிக்க வசை பாடியதுண்டு.

ப்படியாக எங்கள் நட்பு
காலங்காலமாக தொடர்ந்தது.
கண்ணதாசனும்  கவிதையும் போல.

தோ இன்று நான் இறந்து விட்டேன்.
' என்னை அவன் தான் கொன்றான்' என
என்னைச் சார்ந்த சமூகம் சொல்கிறது.
எனக்கும் சிறு சந்தேகம் தான்.
ஏனெனில் இன்று என் இறப்புக்கு அவன் வருந்தவில்லை.
ஓரத்தில் ஒரு புது நட்பு பிடித்திருக்கிறான்.
என்னை போலவே அவனும் இருக்கிறான்.
கையில் அவனைச் சுமந்தபடி.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100Tuesday, March 26, 2013

சிறு கதையாய் சில கவிதைகள்

கண்ணதாசனின் கட்டில் குழந்தை

Copyright : Nilacharal.com

ண்ணதாசன் கட்டிலில்
கண்ணயர்ந்த கைக்குழந்தை
கண்விழித்தபின் கூறியது.
" அகரம் - எனக்கு அவள் கரம்." 
விஞர்கள் வீழ்வதுண்டு ;
கவிதைகள் வீழ்வதில்லை. 

 விலைமகள்
 
Copyright : Zedge.com


பூக்களை வட்டமிடும் பட்டுப்பூச்சியே ! - இந்த
பூவை வட்டமிடும் காரணமென்னவோ ? 
காலையில் சிரித்து மாலையில் மூடும் மலரும்
மாலையில் சிரித்து காலையில் மூடும் இவளும்
ஒன்றெனக் கண்டாயோ ! - அவள்
உள்ளம் தொட வந்தாயோ ? 


SMS

Copyright : Flickr


காலத்தின் உச்சம்
கடிதத்தின் எச்சம் 
குறுஞ்செய்திகள் !!

திருநங்கைகள்குறிப்பு : இக் கவிதை நண்பர்களுடன் பெங்களூரில் இருந்து தொடர்வண்டியில் திரும்புகையில் ஏற்பட்ட அனுபவத்தைச் சார்ந்து எழுதப்பட்டது. இது யார்  மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. என் வார்த்தைகள் உங்கள் கண்ணாடி இதயங்களைக் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். 


ன்ன தான்
மதிப்பு, மரியாதை 
பரிதாபம், பாசம்
உங்கள்மேல் இருந்தாலும்....
அத்தனையையும் அழித்து விடுகிறீர்கள் !
டவர்களை* உரசி 
அதிகாரமாய்ப் பிச்சைக் கேட்கும்
அத்தனைத் தருணங்களிலும்.
திருநங்கைகளே !
தயவு செய்து வாங்கி விடாதீர்கள் ...
திருவோட்டு  நங்கைகள் என்ற பட்டத்தை ?? :-(


* குறிப்பாக கல்லூரி மற்றும் பதின்வயது இளைஞர்கள். ஏன்? 

Copyright : The Hindu

குறிப்பு : இக்கவிதை ஹாக்கி இந்தியாவின் அதிகாரப்பூர்வமான தேசிய விளையாட்டு அல்ல என அறிவிப்பதற்கு முன்பு எழுதப்பட்டது


தாய்  தெருவில்
மனைவி மடியில் 
ஹாக்கி - கிரிக்கெட் !!! 


வரதட்சணை

Copyright : http://lipstickandpolitics.com


நாமும் ஊமைகள் தான்
திருமணத் திருவிழாக்களில்
வரதட்சணை.- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 

Friday, March 15, 2013

போர்வை !

Copyright : Flickr.com

ன்னை நான் போர்த்திக்கொள்ள
என்னை நீ போர்த்திக்கொள்ள - போர்வையை
போர்த்திக் கொண்டது கட்டில்.

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Sunday, March 10, 2013

இளைய தலைமுறையும்; புகற்சி பதிப்பகமும்Copyright : fotografia.facilisimo.com

"ன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தர்மங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - மகாகவி " 
என்று என்றோ சொல்லி விட்டான் பாரதி. உண்மை தான்; ஒருவனுக்குக் கல்வி தருவதன் மூலம் அவனுக்கு மட்டுமல்ல, அவனைச் சார்ந்த உறவுகளுக்கும், அவனைப் போன்றோர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சமூகத்துக்கும் நன்மை செய்ய இயலும். ஆனால், ஏட்டுச் சுரைக்காய் என்பது மட்டும் போதுமா ?

', ஆ' மட்டுமே சொல்லித்தரும் கல்வி முறையில் 'ஆப்பிள்' நிறுவனத்தைப் பற்றி அவன் எவ்வாறு அறிந்து கொள்வான் ? பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்த பின்புதானே இங்கு பலருக்கும் ( நான் உட்பட ) சமுதாயம் குறித்த கண்கள் திறக்கப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில் அவன் எவ்வாறு தனக்குப் பிடித்தத் துறையைத் தேர்வு செய்ய இயலும் ? இதற்கான விடைகளைத் தருகின்றனர் இந்த 'இளைய தலைமுறை'யினர்.

பாடப்புத்தகங்கள் மட்டும் தான் அறிவை வளர்க்கும் என்ற மூடநம்பிக்கைதானே, இந்தப் பிற்போக்கான, அடித்தளமற்ற, சுயமாய் சிந்திக்க சக்தியற்ற இளைய சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அறிவை வளர்க்கும் மற்ற புத்தகங்களை பெற்றோர்களும், பள்ளிகளும் அவனுக்கு அறிமுகம் செய்வதே இல்லை. அப்படியே ஓரிருவர் அறிமுகம் செய்தாலும், அது பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்களாகவே இருக்கின்றன. ஏன் ! நாளிதழ்கள் உட்பட ஆங்கிலம் தானே முன்னுரிமை பெற்று வருகின்றது.

'ஹாரி பாட்டர்' ஐக் கொண்டாடும் இந்தச் சமூகம் அவனுக்கு 'பொன்னியின் செல்வன்' பற்றிக் கூற மறுக்கிறது. பிறகு எப்படி அவனுக்கு தமிழ்மொழி மீது ஆர்வம் ஏற்படும். வேலை தராத, அறிவுக்குதவாத, தேவையற்ற மொழியாகப் பாவிக்கப்படும் ஒரு மொழி மீது அவனுக்கு எப்படி மதிப்பும், மரியாதையும் அதனோடு அதனைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஞானமும் தோன்றும். அத்தகைய சூழலை மனதில் கொண்டு, திறமைமிக்க இளம் எழுத்தாளர்களை, தமிழைப் பாரமாக நினைக்கும் சமூகத்தில் இருந்து உருவாக்க வேண்டும் என அடியெடுத்து வைத்திருக்கிறது 'புகற்சி பதிப்பகம்'.

ருவேறு அமைப்புகளும், 'நாகரீகம் என்ற பெயரில் சமுதாயத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று பொத்தாம்பொதுவாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் தகவல் தொழில்நுட்ப (IT) நண்பர்களால் முன்னெடுத்து நடத்தப்படுகின்றது. நான் பள்ளி பயிலும் காலங்களில், ஒருவேளை இந்த இரு அமைப்புகள் இருந்திருந்தால், 'மருத்துவன்' என்றல்லாமல் 'எழுத்தாளன்' ஆகியிருப்பேன். என்னுடையப் புத்தகங்களைப் புகற்சி பதிப்பகமும் வெளியிட்டிருக்கும்.

இளைய தலைமுறை :

Copyrighted logo of IT


வர்கள் பள்ளிதோறும் சென்று, எதிர்கால வேலைவாய்புகள் குறித்தும், எவ்வாறு நம் சமுதாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்தும் கருத்தரங்குகள், போட்டிகள் மூலம் ஒரு விசாலமான பார்வை அமைத்துத் தருகின்றனர். அதனோடு மட்டுமல்லாமல், மாதம் ஒருமுறை செய்தி மடல் (Newsletter) வெளியிடுகின்றனர். அது கூடிய விரைவில் தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்து வருகின்றனர். சாதனை செய்யத் துடிக்கும் இந்த இளைஞர்களுக்கு உங்கள் உதவி பணமாகவும் இருக்கலாம் அல்லது அறிவாகவும் இருக்கலாம். யாருக்குத் தெரியும், உங்கள் பெயரன் பெயர்திகளுக்கு  நீங்கள் விட்டுச் செல்லும் அறிவுச்சொத்தாக இந்த இளையதலைமுறை இருக்கலாம்.

தொடர்பு : 

முகப்புத்தக முகவரி : Ilaiya Thalaimurai
மின்னஞ்சல் முகவரி : ilaiyathalaimurai@outlook.com
கைப்பேசி எண்கள் : 9731262058,9789040980
செய்திமடல் தரவிறக்கம் செய்து கொள்ள :  STUGAZINE

புகற்சி பதிப்பகம் : 

Copyrighted logo of FFP


திறமைமிக்க இளம் எழுத்தாளரா நீங்கள் ?  கல்கியும், சுஜாதாவும் உங்களுக்குள் ஒளிந்திருக்கிறார்கள் என உங்கள் உள்மனம் உங்களை இம்சிக்கிறதா ? இவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். திறமை மிக்க உங்கள் படைப்புகளை இந்த உலகம் கொண்டாட உங்களுக்கு மேடை அமைத்துத் தரும் வேலையை இந்த நண்பர்கள் செய்து வருகிறார்கள். பணமாகவும், தமிழாகவும் இவர்களுக்கு உதவ விரும்புபவர்கள் இவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு : 

வலைத்தள முகவரி : Fresh Face Publications
மின்னஞ்சல் முகவரி : freshfacepublication@gmail.com
கைப்பேசி எண்கள் : 08008790704, 09994436138.
புத்தகங்களைப் பெற : CLICK HERE


Copyright : http://browseideas.comந்த இரு அரசுசாரா பொது நிறுவனங்களும் வெற்றிகளும், மாலைகளும், பாராட்டுகளும், பரிசுகளும், பெறுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இந்த இரு சிறு கற்களும், நம் சமுதாயக்குளத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி .


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100.
Wednesday, March 6, 2013

மழை பிடிப்பவன்


ட்டுத்திண்ணையில்
ஒட்டில் அமர்ந்து கொண்டு - உனக்காக
மழை பிடித்துக்கொண்டிருந்தேன் நான் - எனக்காக
குடை பிடித்துகொண்டிருந்தது - காதல் !


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Thursday, February 21, 2013

முதல் காதல்

Copyright : Google

ன் முதல் காதல்
அவளோடு ….

யார் அவள்?
நானும் அறியேன்.

பெயர்?
சில வருடங்களுக்கு முன்பு தான்  எனக்குத் தெரிந்தது .

ஊர்?
எங்கு வேண்டுமானாலும் இருப்பாளாம்.

அவளைப் பற்றி?
நிச்சயமாக, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவள் தான்.

எப்படி அறிமுகமானாள் ?
மின்னல் ஒளியில் அவள் தெரிந்தாள் – என்
மனதை உடன் பறித்தாள்.

பார்ப்பதற்கு ?
தண்ணீர் முகம்
கூரிய முக்கு
அரை குறை  உயரம்
அழகிய உதடு
உதடு கொண்டு என் தாகம் தீர்ப்பாள்
என் உள்ளத்தில் என்றும் அவள் வாழ்வாள்.

எவ்வளவு நாள் காதல்?
விவரம் தெரியும் முன்பிலிருந்தே.

உன் காதல் பரிசு?
முத்தம்.

அவள் பரிசு?
பதில் முத்தம்.

கைப்பேசி காதல்?
அவள் ஊரில் வசதி இல்லை.

பிறகு பேசிக்கொள்வது?
எப்போதாவதுதான்.

விளையாடுவீர்களா?
காகிதக் கப்பல் விடுவதுண்டு.

சத்தமிடுவாளா?
எக்கச்சக்கமாக.

கோபப்படுவாளா?
ம் ….. ம் …..
கோபப்படும் போது – சில சமயம்
கொலையும் செய்வாள்.

அது …. ? இது …..?
சீ …… சீ ….
அப்படியொன்றும் இல்லை.
அவள் புனிதம் கெட்டுவிடக்கூடாது – என்று
நான் புனிதம் காக்கிறேன்.

அவளை விட்டுப்  பிரியும் பொழுது?
நான் படுத்துக் கொள்வேன் உடல்நிலை சரியில்லாமல் .

யாருக்கேனும் அவளைப் பிடிக்குமா?
குழந்தைகளுக்கு அவளைப் பிடிக்கும்
எனக்கும் தான்;
பெரியோர்களுக்கு அவள் கசக்கும்
என் பெற்றோருக்கும் தான்.

மாமனார் மாமியார் பார்த்ததுண்டா?
தூரத்திலிருந்து.

அவள் பார்த்ததுண்டா?
என்னைச் சந்திக்க வரும்பொழுது….
என்ன அவள் வருவதைப் பார்த்தால்
இவர்கள் கதவடைத்து விடுவார்கள்
ஜன்னல்கள் உட்பட.

அவளைப் பற்றி கவிதை எழுதியதுண்டா?
அவள் ஒரு கவிதை
அவளைப் பற்றி எழுதாதவன் கவிஞனில்லை.

அவளைப் பார்க்க வேண்டுமே?
ஜன்னல் திறந்து வையுங்கள் – உங்கள்
வாசல் வழி நடந்து போகலாம்.

எப்போது திருமணம்?
பொறுங்கள், மகனைக் கேட்டு சொல்கிறேன்.

மகனா?
இப்பொழுது அவன் தானே அவளைக் காதலிக்கிறான்.

என்ன?
அட, மழையைக் காதலிக்காத மழலை உண்டா?
நானும் காதலித்தேன் அவளை – என்
மழலைப் பருவத்தில்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100Related Posts Plugin for WordPress, Blogger...