காதலில் அழகாய் தோன்றும் அத்துனை விசயங்களும் ... நட்பில் அபத்தமாய் காட்சியளிக்கிறது.
தீக்குளித்து தற்கொலை செய்து கொள்பவர்களை ஆதரிப்பது அறிவாளிகளின் முட்டாள்தனம்; அரசியல்வாதிகளின் புத்திசாலித்தனம் .
எல்லா பெண்களும் சுதாரிப்பு என்கிற பெயரில் " அண்ணா ! " என்று அழைக்கிறார்கள் . # இல்ல தெரியாமாத் தான் கேக்குறேன் நாங்க என்னிக்காவது உங்கள "அக்கா" னு கூப்பிட்டிருக்கோமா ?
நீண்ட நாளாக ஒரு சந்தேகம் ! அழகு நிலையங்கள் பெரும்பாலும் ஏன் பெண்களுக்கு மட்டுமே உள்ளது ? # ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.
காதல் செய்யாதீர்கள்; மீறியும் காதல் செய்தால் காதலைக் கொலை செய்யாதீர்கள்
தனது தவறுகளை முழுவதுமாக மறைக்கத் தெரிந்தவன் அறிவுரைகள் சொல்கிறான்; தெரியாதவன் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்கிறான்.
இளமையைக் காட்டிலும் முதுமை அழகு. இளமையின் அழகு இருக்கும் வரை; முதுமையின் அழகு இறக்கும் வரை .
'நான் அழகாக இல்லை' என என்னை பலர் விமர்சித்திருக்கிறார்கள் என மனம் நோகும் படி. அழகை மூலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்கள் விபச்சாரிகள் ; நான் விபச்சாரம் செய்ய விரும்பவில்லை.
மருத்துவர்களாகிய எங்களுக்கு மருந்துகளை மட்டுமே அறிமுகம் செய்கிறார்கள்; மனிதர்களின் உணர்வுகளை அறிமுகம் செய்ய மறந்து விடுகிறார்கள்.
புத்தகம் ஒன்று தான் ! ஆனால், வயதுக்கேற்ப அதன் அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கிறது.
உன்னைச் சுற்றியுள்ள எல்லாமே அதிசயம் தான் ; உன்னையும் சேர்த்து ...
அடைப்பதற்கு முன் விற்று விடுங்கள் - எங்கள் சிறகுகளை !! இப்படிக்கு கூண்டுக்கிளி
♥
அரசியல் என்னும் சதுரங்க விளையாட்டில் வெட்டுப்படுபவர்கள் வாக்காள சிப்பாய்கள் மட்டுமே !
♥
மணமான பெண்களின் பேச்சுக்கு இரையாவது இறைவன் இல்லையென்றால் கணவன்
♥
கல்லூரிக்காலங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களில் மட்டுமே மகிழ்ச்சியைப் பார்க்க முடிகிறது ! நம்பவில்லையென்றால் உங்கள் திருமணப் புகைப்படங்களைப் பாருங்கள்.
♥
சொன்னான் பாரதி ... " அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம் " பாரதி உன் வார்த்தை பொய்த்து விட்டன. இன்றைய சூழலில் அச்சமும் நாணமும் பெண்களுக்கும் அவர்களைக் காதல் செய்யும் ஆண்களுக்கும் கட்டாயம் வேண்டும்.
♥
"ஒருவன் செய்தால் தவறு; அதனையே ஒரு ஒட்டு மொத்த சமுதாயமும் செய்தால் அதன் பெயர் நாகரீகம். "
♥
தவறுதலாக புரிந்து கொள்வது பெண்களுக்கே உரித்தான விஷயம் போல ...
♥
அது என்னவோ ! தெரியவில்லை ... தான் பார்க்கும் வேலையைத் தன் மகன் பார்க்கக்கூடாதென அப்பாக்கள் பிடிவாதமாகவே இருக்கிறார்கள்.
♥
இலங்கைத் தமிழனுக்கு உறுப்புடியாய் உதவுவதற்கு ஒருவனுக்கும் துப்பு இல்லை. ஆனால் ... ஆயிரமாயிரம் மேடைகள்; ஆக்ரோசமான பேச்சுகள்; புத்தகம் தோறும் கவிதைகள்; இன்னும் பல பல ... எல்லாம் வேசங்கள்! நம் வாழ்வு செழிக்க என் ஈழத்தமிழனின் கண்ணீரில் அல்லவா நாம் குளிர் காய்கிறோம்.
♥
போரின் காயங்களும்; மனித உரிமை மீறல்களும்; பெண்மைத் திருட்டுகளும் .. எனக்கு ஒன்றை மட்டும் நினைவுப் படுத்திக்கொண்டே இருக்கிறது. " கடவுள் இருக்கிறாரா ? ".
♥
எனக்கு ஒரு காதலி வேண்டும். என்னுடைய இலட்சியங்களையும் அதற்காக கொடுக்கப்படும் வலிகளையும்... முடிந்தால் என்னையும் நேசிக்கின்ற காதலி வேண்டும். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !
♥
காதலிப்பவர்கள் அழகாய் இல்லமால் இருக்கலாம். ஆனால் காதல் அழகானது. ஆதலில், காதல் செய்வீர் .
♥
எல்லா உறவுகளையும் பணம் தின்றுவிடுகிறது ; நட்பினைத் தவிர ...
♥
என் கையெழுத்து ஆட்டோகிராப் ஆகும் பகலுக்காக ... தூங்காமல் விடிகின்றன இரவுகளும்; கலையாமல் விரட்டுகின்றன கனவுகளும் .
♥
ஆண்களின் அழுகைக்கு சொந்தக்காரிகள் பெண்கள் மட்டுமே !
♥
உன்னுடைய கடைசி நிமிட ஆசை வரை பூர்த்தி செய்ய வேண்டுமேன்பதற்காகவே ... நான் உன்னைக் காதல் செய்கிறேன்
♥
உன்னை உலகம் அறியும் வரை .. நீ எழுதும் கவிதைகளெல்லாம் கிறுக்கல்கள் ; உன்னை உலகம் உணர்ந்த பின்பு .. நீ கிறுக்கியவைகள் கூட கவிதைகள் .
♥
செய்த உதவிகள் சுட்டிக்காடுப்படும் பொழுது தான், உதவியதின் உண்மையும்... உதவியவர்களின் தன்மையும் .... உறுத்திக் கொல்கிறது.
♥
உலகிலயே !!! மிகச் சிறந்த கேள்வி - மௌனம்; மிகச் சிறந்த பதில் - புன்னகை.
♥
கொடுப்பவர்களாக இருங்கள் .... அன்பு உட்பட !!
♥
என்ன தான் தீவிரமாக முயற்சி செய்தாலும் ... சில விசயங்களில் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப் பட மட்டுமே முடிகின்றது .
பெற்றோர்களுடைய ஆசிர்வாதத்தோடு நடக்கும் காதல் திருமணங்களில் காதலர்களின் வைராக்கியத்தைக் காட்டிலும் பெற்றோர்களின் பெருந்தன்மையையே என்னால் உணர முடிகிறது !!!
♥
பெரிய வீட்டு பிள்ளைகளின் பத்திரிக்கை செலவிலே என் பல ஏழை நண்பர்களின் திருமணங்கள் சிறப்பாக நடைபெற்றுவிடுகின்றன !
♥
" ஏழ்மை " என்ற ஒரு அடையாளம் போதும் என்னைக் குற்றவாளி என்று சமுதாயம் ஒப்புக் கொள்ள !
♥
ஆடவர்கள் அறியாமால் உரசினால் கூட அதட்டிக் கேட்கும் ஆண்கள் சமூகம், பெண்கள் உரசினால் மட்டும் பெருந்தன்மையாக மன்னித்து விடுகிறது !
♥
தாய்மொழியில் பேசும், புனையும் ஆர்வத்துக்காக என்னை அவமானப்படுத்த முயல்கிறது இந்தச் சமூகம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.