Thursday, April 28, 2011

அன்புள்ள அம்மாவுக்கு ...

Photo Courtesy : http://www.mnn.com


குறிப்பு - இக்கவிதை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் வார விழாவையொட்டி நடைபெற்ற கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.

ன்புள்ள அம்மாவுக்கு
அன்பு (?) மகன் எழுதும்
அழகிய மடல் .
ச்சரியப்படாதே !
அம்மா
கடிதங்கள் ஆச்சரியம் தான்
கணினி உலகில்.
பாசங்கள் ஆச்சரியம் தான்
மனிதம் மடிந்த - இந்த மண்ணில்.

ன்றுமே! நீ எனக்கொரு
அதிசயம் அம்மா
அதிசயங்களே கண்டு வியக்கும்
அதிசயம் நீ அம்மா!

நான் கேள்விப்பட்டதுண்டு...
அம்மம்மா சொன்னார்கள்;
என்னை சுமப்பதற்கு முன்பு
"மலடி" என்ற பட்டத்தை 
மூன்றாண்டு சுமந்தயாமே !
அம்மம்மா சொன்னார்கள்.

ப்பத்தா சொன்னார்கள்;
மணம் முடிந்த முதல்
அரை வருடம் உனக்கு
அடுப்பங்கறை அத்துப்படி இல்லையாமே !
அப்பத்தா சொன்னார்கள்.

ப்பா சொன்னார்கள்;
அடுத்த வீட்டுடன் 
அடிக்கடி
அடிதடியில் நிற்பாயாமே !
அப்பா சொன்னார்கள்.

த்தனை முறை அழுதிருப்பாய் ..
இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு.
அத்தனைக்கும் மகுடமாய்
உன்னை நான் அழவைத்தேனே!
அன்றைய நாள்
என்னென்ன நினைத்திருப்பாய்?

த்தனையும் நான் அறிவேன்!
அம்மா! நான் அறிவேன்.
னைத்து குற்றங்களும்
மன்னிக்கப்படும் ஒரே நீதிமன்றம்
உன் உள்ளம் தான் அம்மா
குற்றவாளி நானாக இருக்கையில் மட்டும்.

ண்மையில் தான் படித்தேன்
தாய்ப்பால் ...
அறிவை வளர்க்குமென்று
அதிகமாய் வளர்ந்ததால் என்னவோ! - உன்னை 
அனுப்பி வைத்துவிட்டேன்.

ன்று ஒரு நாள் 
அநாதைச்  சிறுவன்...
அர்த்தநாரீஸ்வரர் சாலையில்
" அம்மா தேடி அலைகிறேன் " - என்றான்
அவனை அழைத்து
அவனைக் கேட்டேன் - அம்மா 
அவன் சொன்னான்.

" தாய் -  தெய்வம்     
அதனால் தான் என்னவோ ! - அவள்
காட்சி கிடைக்கிறது
தவமிருப்பவர்களுக்கு மட்டும்"
மேலும் சொன்னான்...
" பிறந்தவுடன் எறிந்து விட்டார்கள் ;
தப்பில்லை ... தாய்ப்பால் தந்தபின்பு எறிந்திருக்கலாம்
நானாவது நடந்திருப்பேன் - என்
தமிழ் போல் நொண்டாமல்.
 
தேடல் தான் வாழ்க்கை என்றான்  
தேடித் திரிகிறானாம் தினத்தோறும்
அவன் அன்னையை...
தேகத்தில் வலிமையில்லாமல்.
றுதியாக அவன் கேட்டுக் கொண்டான்
"தந்து விடுங்கள்
தைரியத்தை தூக்கி எரியும் முன்பே - இல்லை
கொன்று விடுங்கள்
எங்களை மண்ணில் மலரும் முன்பே "

வன் வார்த்தையில்
வந்து சென்றதம்மா - உன் முகம்.
மைகளுக்குள் சிறைபிடிக்க
முடியவில்லை...
சிதறிவிடுகிறது என் கண்ணீர் - அன்று 
நீ சிந்தியது போல.
தற்குள்  அவள் கேட்டு விடுவாள்; 
உன்னை மறக்காமல்...
" இன்னமும் உங்க அம்மா ஞாபகம் போகலையா?"        

ன்னமா! யோசிக்கிறாய்
கடிதம் எதற்காக என்று தானே ?
இதோ சொல்லி விடுகிறேன்
ன்னைவிட்டுச் சென்றவரிடம் கேட்டுச்சொல் ...
இரண்டு இடம் காலியாய் இருக்குமா? என்று.
ன் மகன் 
இரண்டு மாதமாய் தேடி அலைகிறான் - எங்களுக்கான
முதியோர் இல்லத்தை.



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100




10 comments:

  1. சார் பாராட்ட வரத்தை தேடினேன் கிடைக்கவில்லை
    எதோ எனக்கு தெரிந்த தமிழில் சொல்லிவிட்டு போகிறேன்
    அத்தனை வரிகளும் ஒவ்வொரு வைரங்களாக மின்னுகின்றன
    உங்கள் கவிதையில் எதோ தொலை துரத்தில் இருக்கும் என் அம்மா
    வை பார்த்ததாய் உணர்தேன்

    ReplyDelete
  2. அருமை. ரசித்தேன். வாழ்த்துக்கள்
    தொடருங்கள்.

    ReplyDelete
  3. ammavai pattri sandhoshamaga share seidhukolla onrume illaiya ungalidam?

    ReplyDelete
  4. paasangal nu vara kudathu, paasam than sari. sumanthaayamae la yaa nedil varanum. unnai vittuchendravaridam ketu sol antha vari puriyala..mathabadi yathaarthama nallaarukku, continue.. yathaartham eppavumae azhagu than

    ReplyDelete
  5. @ மோகம் - பாசங்கள் என்று நான் குறிப்பிட காரணம் ... அங்கு பன்மை தேவைப்படுவதால். தாய் மகன் பாசத்தை மட்டும் நான் குறிப்பிடவில்லை.

    விட்டுச்சென்றவர் - முதியோர் இல்லக் காப்பாளர்

    ReplyDelete
  6. இறுதி வரி ரொம்பவே வலிக்கிறது பாஸ்

    ReplyDelete
  7. அருமையான கவிதை.

    கண்கள் கண்ணீரை கக்கிவிட்டது இதை படிக்கும் போது.. நன்றி..

    ReplyDelete
  8. let me spread you in Facebook.. :)

    ReplyDelete
  9. தோழரே என்னிடம்
    வார்த்தைகள் ஏதும் இல்லை நான் பாராட்ட
    ஆனால்,
    சில துளி நீர் கன்னத்தை முத்தமிட்டு சென்றது

    ReplyDelete
  10. எல்லைகள் இல்லாதவள் அம்மா . அம்மா என்று அழைக்காத உயிரில்லை. பாராட்டுக்கள.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...