Showing posts with label மூக்கு. Show all posts
Showing posts with label மூக்கு. Show all posts

Tuesday, April 12, 2011

மூக்கு

Copyright : Wikipedia


குறிப்பு : இக்கவிதை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற   "அரங்கேறும் அங்கங்கள் "     கவியரங்கில் பதிவு செய்யப்பட்டு பாராட்டைப் பெற்றது. 

 ங்கீகரிக்கபடாத அங்கம்
அழகைச் சொல்ல அங்கம்
அறிவுக்குதவா அங்கம்
அவசியமில்ல அங்கம் - இவ்
அவையோரின் எண்ணம் - பலர்
அகத்தின் எண்ணமும் கூட !

ண்கள் கண்டதைக் காணச் சொல்லும்
செவிகள் வதந்திகள் கேட்கச் சொல்லும்
இதழ்கள் பொய்கள் பேசச் சொல்லும்
நாசி நல்லதை மட்டும் செய்யச் சொல்லும்.

னைத்து அங்கங்களும்
அழிவிற்கு வழிவிடும் - இவன் மட்டும் தான் 
ஆக்சிசனுக்கு வழிவிடுவான்.

ங்கங்கள் பழுதானவர்கள்
அகிலத்தில் உண்டு;
இவன் பழுதானவன்
எவ்வுலகினில் உண்டு.

பாண்டியனின் நாசி
நக்கீரர் புகழ் பாடச் செய்தது
சூர்ப்பநகையின் நாசி
இராமகாவியம் கூறச் செய்தது.

வமானத்தில் வீழ்பவனும் இவனே !
அகங்காரத்தில் எழுபவனும் இவனே !

" மூக்கிற்கு மேல் கோபம் " - அடைமொழி
காரணம்
அங்கத்தில் உயர்ந்தவன் மூக்கு.
அவனின் உயர்ந்தது உன் கோபமா?

வார்த்தைகள் மறித்துப்போகும் நேரத்தில் கூட
மூச்சுகள் பேசிக் கொள்ளும்.

யிரம் நட்சத்திரங்கள் ஆகாயத்தை அலங்கரித்தாலும்
மதியில்லையென்றால் மயக்கமில்லை.
ஆயிரம் அங்கங்கள் நம்மிடம் இருந்தாலும்
அலகு இல்லை என்றால் அழகு இல்லை.
 
விழிகள் ஓய்வு கொள்ளும் இமைமூடும் நேரத்தில்
இதழ்கள் ஓய்வு கொள்ளும் மௌனம் கொள்ளும் நேரத்தில்
செவிகள் ஓய்வு கொள்ளும் அமைதி உலவும் நேரத்தில்
கை, கால்கள் ஓய்வு கொள்ளும் துயில்பயிலும் நேரத்தில்
இவனும் ஓய்வு கொள்வான் இதயம் உறங்கும் நேரத்தில்.

வனிடம் பேசாதவர்கள் உண்டா?
மலர்கள் பேசும்; மணங்கள் பேசும்/
ஏன்!
கைக்குட்டை கூட பேசும்
ஜலதோஷம் வரும் பொழுது...

வானத்தின் நட்சத்திரம் 
தமிழச்சியின் மூக்குத்தி
அங்கத்தின் நட்சத்திரம் 
அவளுடைய மூக்கு.

ங்கங்கள் செத்துவிட்டால்
நாம் சாவதில்லை
இவன் செத்து விட்டால்
நாம் வாழ்வதில்லை

நேசிக்க மறந்தவர்கள் கூட சுவாசிக்க மறப்பதில்லை
சுவாசிக்க மறந்தவர்களை நாம் நேசிக்க நினைப்பதில்லை !!

மூச்சை துறந்தவனும் மனிதனல்ல!
மூக்கை மறந்தவனும் மனிதனல்ல !!



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100





Related Posts Plugin for WordPress, Blogger...