Tuesday, October 11, 2011

நட்பின் புதைகுழியில் !



தேவதையே !
நட்புத் தாரகையே !
காதல் தேவையோ ? - பொய்க்
காதல் தேவையோ ?

ழியெங்கும் நட்பின் சருகுகள்
மனமெங்கும் மிதிக்கும் உணர்வுகள்.
விழியெங்கும் காதல் அரும்புகள்
தினந்தோறும் மலரும் கனவுகள்.

ட்பின் காகிதம் கொடுத்து
காதல் எழுதிக் கொண்டோம்.
நட்பின் விரல் பிடித்து
காதல் பழகிக் கொண்டோம்
நட்பின் மலர் கொடுத்து
காதல் தொடுத்துக் கொண்டோம்
நட்பின் கைக்குட்டை வாங்கி
காதல் துவட்டிக் கொண்டோம்.
நட்பைப் புதைத்து விட்டு
காதல் பெற்றுக் கொண்டோம்.


காதல் தோழியே !
நட்பு மழை தந்தது;
காதல் துளி தந்தது.
நட்பு வயல் தந்தது;
காதல் நெல் தந்தது.
நட்பு தாகம் தீர்த்தது;
காதல் தாகம் தந்தது.

நாம்
நட்பு கிழித்துக்
காதல் உடுத்திக் கொண்டோம்.
காதல் கிழித்துக்
காமம் உடுத்திக் கொள்வோம்.

நாம்
கண்ணீர் குடித்து
தாகம் தீர்த்துக் கொண்டோம்.
கண்ணை விற்று
காட்சி வாங்கி வருவோம்.

ம் தோழி !
நம்முள் காதல் பிறந்திருக்கிறது ;
காதல்
காமம்
காயம்
மூன்றும் முளைத்திருக்கிறது
நட்பின் புதைகுழியில் !!!


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Monday, October 10, 2011

என்றோ சிந்தித்தவைகள் !

  •  காதலில் அழகாய் தோன்றும் அத்துனை விசயங்களும் ... நட்பில் அபத்தமாய் காட்சியளிக்கிறது.
  • தீக்குளித்து தற்கொலை செய்து கொள்பவர்களை ஆதரிப்பது அறிவாளிகளின் முட்டாள்தனம்; அரசியல்வாதிகளின் புத்திசாலித்தனம் .
  •  எல்லா பெண்களும் சுதாரிப்பு என்கிற பெயரில் " அண்ணா ! " என்று அழைக்கிறார்கள் . # இல்ல தெரியாமாத் தான் கேக்குறேன் நாங்க என்னிக்காவது உங்கள "அக்கா" னு கூப்பிட்டிருக்கோமா ?
  • நீண்ட நாளாக ஒரு சந்தேகம் ! அழகு நிலையங்கள் பெரும்பாலும் ஏன் பெண்களுக்கு மட்டுமே உள்ளது ?
    # ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.
  •  காதல் செய்யாதீர்கள்; மீறியும் காதல் செய்தால் காதலைக் கொலை செய்யாதீர்கள்
  • தனது தவறுகளை முழுவதுமாக மறைக்கத் தெரிந்தவன் அறிவுரைகள் சொல்கிறான்; தெரியாதவன் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்கிறான்.
  • இளமையைக் காட்டிலும் முதுமை அழகு. இளமையின் அழகு இருக்கும் வரை; முதுமையின் அழகு இறக்கும் வரை .
  • 'நான் அழகாக இல்லை' என என்னை பலர் விமர்சித்திருக்கிறார்கள் என மனம் நோகும் படி. அழகை மூலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்கள் விபச்சாரிகள் ; நான் விபச்சாரம் செய்ய விரும்பவில்லை.
  • மருத்துவர்களாகிய எங்களுக்கு மருந்துகளை மட்டுமே அறிமுகம் செய்கிறார்கள்; மனிதர்களின் உணர்வுகளை அறிமுகம் செய்ய மறந்து விடுகிறார்கள்.
  • புத்தகம் ஒன்று தான் ! ஆனால், வயதுக்கேற்ப அதன் அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கிறது.
  • உன்னைச் சுற்றியுள்ள எல்லாமே அதிசயம் தான் ; உன்னையும் சேர்த்து ...
     
     - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
      

Saturday, October 8, 2011

பேருந்தில் தேவதை

Copyright : fotocommunity.com

பேருந்து நெரிசலில்
பக்கத்து இருக்கையில்
பளிச்சென்று தேவதை
பக்கத்தில் அவள் அன்னையோடு !

னியே சிரிக்கிறாள்
கேசம் கலைக்கிறாள்
கைநீட்டி அழைக்கிறாள்
மழலை மொழிகிறாள்
முத்தம் தருகிறாள்
கைபிடித்து இழுக்கிறாள்.

க்கம் பார்க்கிறாள்
கன்னத்தில் அறைகிறாள்
காதல் சொல்கிறாள்
கண்களில் கொல்கிறாள்

டைசியில் கேட்கிறாள் ...
" நான் UKG .... நீ ? "     


-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Sunday, September 18, 2011

கீழ்க்காணும் யாவும் காதல் கவிதைகளே !

புத்தகம் 

Copyright : http://wallpaper4free.org

னக்கான வார்த்தைகள் மட்டும் சேர்த்து - ஒரு
புத்தகம் எழுதினேன் ;
பிரித்துப்பார்த்தால்
பக்கங்களெல்லாம் - உன்
பெயர் மட்டுமே !

பசுமையாய் அவள்

Copyright : http://www.desktopwallpaperhd.net

காலத்தின் கறுப்புத் தடங்கள்
பதிந்து கிடக்கும் என் மனச்சுவர்களில் ...
பசுமையாய் அவள் நினைவுகள் ! 


முதல் எழுத்து 

Copyright : besthomedecorators.com
யிர் அழகு நானும்
மெய் அழகு நீயும் ...
உயிர்மெய் அழகை உருவாக்கும்
உன்னதமான நேரம் - இந்த
முதலிரவுக் காலம்.


ஒற்றை ரூபாய் 

Copyright : www.sparkthemagazine.com


ன்பே!
ஒற்றை ரூபாயாக 
உன் காதல் - நீ 
கொடுப்பதிலோ *
வைப்பதிலோ **
இருக்கிறது 
என் காதல்.

பின் குறிப்பு : * இத்தல் நிகழ்வு
                          ** இத்தல் நிகழ்வு.

உதடு 

Copyright : webs.com


ன்பே ! நீ 
முனுமுனுக்கும் பொழுதெல்லாம் - உன்
உதட்டுச் சுருக்கங்களில்
ஒளிந்திருக்கிறது ....
எனக்கான தமிழும்;
தமிழுக்கான கவியும்.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Tuesday, September 13, 2011

களவாடிய கவிதைகள் !

Photo Courtesy : http://desigg.com

த்தி பூத்தாற்போல்
ரிதாய் பூக்கிறது 
அழகுப் பெண் பூக்கள்
அம்பது வருட சுதந்திர இந்தியாவில்.

புயலோடு போராடி;
புழுதியோடு மாறாடி
பூத்து நிற்கிறது
புதுப்புது தெம்போடு.

க்காள் தங்கை பிரிந்து
அங்கொன்றும் இங்கொன்றும்
அடைக்கப்படுகிறது
அரைசாண் கயிற்றுக்குள்
மாலையாக ...

யிற்றில் சேராத
கானகத்து மலர்கள் - எறியப்படுகின்றன
குப்பைத்தொட்டிகளில்.

லர்கள் !
கசங்கியதால் வந்தது தண்டனை;
கசக்கியவர்களுக்கு ஏது தண்டனை ?

காயம் காயாத கமலங்கள்
கடித்தெரியப்படுகின்றன
மனிதப்பன்றிகளால்
மாமிசப்பொறுக்கிகளால்

லர்கள் !
கடவுளிடம் சேர வேண்டும் - இல்லை
கல்லறையில் சேர வேண்டும் - இல்லையென்றால்
கசங்கித்தான் தீர வேண்டும்.
காரணம் கற்பித்த கயவர்கள் எங்கே ?

லர்கள் களவாடப்படுகின்றன
மணங்களால்; மனங்களால்.
மங்கைகளும் களவாடப்படுகின்றன
மணங்களால்; மனங்களால்.

காலத்தின் வேர்கள்
களவாடிய கவிதைகள்;
கற்புக்காக போராடும் - எம்குலக்
கன்னிகள்!


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 



Related Posts Plugin for WordPress, Blogger...