Sunday, April 24, 2011

மலர் vs மங்கை

Copyright : Flickr


ன் அன்பே !
பூவிதழ்கள் சிந்தும் தேனும்
பூவை நின் இதழ்கள் சிந்தும் தமிழும்
ஒன்றோ! நன்றோ!

னதில் சத்தமிடும் உன் நினைவும்
மலரை சுற்றி வரும் மணமும்
ஒன்றோ! நன்றோ!
மலர்கள் பிரசவித்த கனியும் - உன்
நினைவுகள் பிரசவித்த கவிதையும்
ஒன்றோ! நன்றோ!

காசுக்காக கடத்தப்பட்ட கனியும் - உன்
கல்யாணத்திற்காக கடத்தப்பட்ட நம் காதலும்
ஒன்றோ! நன்றோ!

ன்பே ..
கனிகளின் கல்லறை தான்
மரங்களின் கருவறை - பலர்
காதலின் கல்லறை தான்
கவிதைகளின் கருவறை.

ன் மணவறையிலும்
என் பிணவறையிலும்
நாம் வேண்டுமானால் மறித்துப்  போகலாம் - ஆனால்
நம் நினைவுகள் !!! 
       


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100




Monday, April 18, 2011

ஏசுபிரான் அல்ல ....

Copyright : kmadisonmoore.blogspot.com

துன்பங்கள் உன்னைத் தொடும் போது ...
கண்ணை மூடு
கடவுளை நாடு
கவலைகள் விடு
கடமைகள் தொடு    
மனதின் வடு
என்னிடம் விடு 
மற்றவர்  துன்பங்களைத் தாங்கிக் கொள்ள 
நான் ஒன்றும் ஏசுபிரான் அல்ல ....
 
இருப்பினும் தாங்குகிறேன் ,
ஏனெனில் 
நீ எனக்கு மற்றவனல்ல !!!!




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


அட ! இன்னுமா தெரியவில்லை

Copyright : http://www.profimedia.com


ந்தோசமாய் மலர்ந்தது காலை - அந்த
சூரியனின் உதயத்தில் ...

ழக்கமாய் செல்லும் வகுப்பறைகள்
தினசரி வாசிக்கும் அதே முகங்கள்
எல்லாம் சரிவர இருந்தன முகத்தில் 
சந்தோசத்தைத் தவிர ...   

ந்நியர் போல் நண்பர்கள்
ஆளுக்கொரு திசையில்
அவரவர் புத்தகத்தோடு.  

முத்தமிட இதழ்களா தேவை?
அட! முத்தமிடுகின்றனவே  
விரல்களும் விழிகளும் 
புத்தகத்தின் பதிப்புகளோடு.

ச்சம், அடக்கம், அகங்காரம், அனுபவம்
அனைத்தும் காணலாம்
அவர்கள் விழிகளில் 
அன்று மட்டும்.

புத்தகத்தை சிறுபதிப்பு எடுத்து
சின்ன சின்ன இடைவெளிகளில்
சிதறாமல் ஒழித்து வைக்கும்
சில மாணவர்கள்    

மூளையை மட்டுமே நம்பி
முன்னுக்கு வரத் துடிக்கும்
முதல் மாணவர்கள்    

து நடந்தால் 
எனக்கென்ன என இருக்கும்
ஏராளமான மாணவர்கள் ! 

விதங்கள் ஆயிரமிருந்தாலும்
விழிகளில் ஒரே பயம் தான் .. 

திகாலை விழிப்பு
அரைகுறை சாப்பாடு
ஆண்டவநிடும் கோரிக்கை 
அவசரமாய் புரட்டிய பக்கங்கள்
அனைவரின் ஆசீர்வாதம்
அன்று மட்டும் பேசாத அவர்கள்
எல்லாம் இந்நாளின் சிறப்பு நிகழ்சிகள் !

 
த்தனை சிரமங்களுக்கு நடுவிலும்
அவர்களின் அவ(ள்/ன்)கள் சொல்லும்
ALL THE BEST ற்காக காத்திருந்த அவர்கள் !   

ட ! இன்னுமா தெரியவில்லை 
இன்று தான் அவர்களுக்கு பரீட்சை !!!




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Wednesday, April 13, 2011

வகுப்பறை

Copyright : Wikipedia



ரியைத் தோற்கடிக்கும்
கருமை கொண்ட
கரும்பலகை

 பாலை மிஞ்சிவிடும்
வெண்மையைக் கொண்ட 
சுண்ணாம்புக்கட்டி

ருப்பரும் வெள்ளையரும்
இணைந்தால் தான் அழகு பெறும்
உலகம் அழகு பெறும்
என்பதை உணர்த்தும் இவையிரண்டும்

டுக்குகள் மாறாமல் 
அழகாய் அடுக்கப்பட்டிருக்கும்
மரப்பலகைகள்

வ்வப்போது தென்றலோடு கலந்துவரும்
ஆசிரியரின் தாலாட்டு

விழிக்க மனம் நினைத்தாலும்
ஒற்றுக் கொள்ளாமல்
போராட்டம் நடத்தும் இமைகள்

சிரியரின் வார்த்தைகளை
அவரை விடவும்
அழகாய் உச்சரிக்கும் என் நண்பர்கள்

நேற்று பார்த்த 
திரைப்படங்கள், விளையாட்டு நிகழ்சிகள், பாடல்கள்
மறுஒளிபரப்பு செய்யப்படும்
எங்கள் வகுப்பு அலைவரிசையில்...

லகப்போர் எங்கள் வகுப்பிலும்
சுண்ணாம்புக் குண்டுகளோடு.

ர்ச்சுனனின் அம்புகளுக்கு இணையான 
அம்புகளாய் - என் நண்பர்கள்
விடுப்புமணி அடித்தவுடன்

ல்லோரும் சென்ற பின்பு
ஏக்கத்துடன் ஏங்கியிருக்கும் ஒரு ஜீவன்
அது வேறு யாருமல்ல - எனது 
வகுப்பறை தான் !  



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

                     

Tuesday, April 12, 2011

மூக்கு

Copyright : Wikipedia


குறிப்பு : இக்கவிதை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற   "அரங்கேறும் அங்கங்கள் "     கவியரங்கில் பதிவு செய்யப்பட்டு பாராட்டைப் பெற்றது. 

 ங்கீகரிக்கபடாத அங்கம்
அழகைச் சொல்ல அங்கம்
அறிவுக்குதவா அங்கம்
அவசியமில்ல அங்கம் - இவ்
அவையோரின் எண்ணம் - பலர்
அகத்தின் எண்ணமும் கூட !

ண்கள் கண்டதைக் காணச் சொல்லும்
செவிகள் வதந்திகள் கேட்கச் சொல்லும்
இதழ்கள் பொய்கள் பேசச் சொல்லும்
நாசி நல்லதை மட்டும் செய்யச் சொல்லும்.

னைத்து அங்கங்களும்
அழிவிற்கு வழிவிடும் - இவன் மட்டும் தான் 
ஆக்சிசனுக்கு வழிவிடுவான்.

ங்கங்கள் பழுதானவர்கள்
அகிலத்தில் உண்டு;
இவன் பழுதானவன்
எவ்வுலகினில் உண்டு.

பாண்டியனின் நாசி
நக்கீரர் புகழ் பாடச் செய்தது
சூர்ப்பநகையின் நாசி
இராமகாவியம் கூறச் செய்தது.

வமானத்தில் வீழ்பவனும் இவனே !
அகங்காரத்தில் எழுபவனும் இவனே !

" மூக்கிற்கு மேல் கோபம் " - அடைமொழி
காரணம்
அங்கத்தில் உயர்ந்தவன் மூக்கு.
அவனின் உயர்ந்தது உன் கோபமா?

வார்த்தைகள் மறித்துப்போகும் நேரத்தில் கூட
மூச்சுகள் பேசிக் கொள்ளும்.

யிரம் நட்சத்திரங்கள் ஆகாயத்தை அலங்கரித்தாலும்
மதியில்லையென்றால் மயக்கமில்லை.
ஆயிரம் அங்கங்கள் நம்மிடம் இருந்தாலும்
அலகு இல்லை என்றால் அழகு இல்லை.
 
விழிகள் ஓய்வு கொள்ளும் இமைமூடும் நேரத்தில்
இதழ்கள் ஓய்வு கொள்ளும் மௌனம் கொள்ளும் நேரத்தில்
செவிகள் ஓய்வு கொள்ளும் அமைதி உலவும் நேரத்தில்
கை, கால்கள் ஓய்வு கொள்ளும் துயில்பயிலும் நேரத்தில்
இவனும் ஓய்வு கொள்வான் இதயம் உறங்கும் நேரத்தில்.

வனிடம் பேசாதவர்கள் உண்டா?
மலர்கள் பேசும்; மணங்கள் பேசும்/
ஏன்!
கைக்குட்டை கூட பேசும்
ஜலதோஷம் வரும் பொழுது...

வானத்தின் நட்சத்திரம் 
தமிழச்சியின் மூக்குத்தி
அங்கத்தின் நட்சத்திரம் 
அவளுடைய மூக்கு.

ங்கங்கள் செத்துவிட்டால்
நாம் சாவதில்லை
இவன் செத்து விட்டால்
நாம் வாழ்வதில்லை

நேசிக்க மறந்தவர்கள் கூட சுவாசிக்க மறப்பதில்லை
சுவாசிக்க மறந்தவர்களை நாம் நேசிக்க நினைப்பதில்லை !!

மூச்சை துறந்தவனும் மனிதனல்ல!
மூக்கை மறந்தவனும் மனிதனல்ல !!



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100





Related Posts Plugin for WordPress, Blogger...