COPYRIGHT : Carol VanHook |
உன்னில் பெரியவனும் இல்லை;
உன்னில் சிறியவனும் இல்லை.
உறுப்படியான இவ்வுலகில் உனக்கு
உறுப்படியாய் எதுவும் இல்லை.
பிறப்பது ஓர் நாள்
இறப்பது ஓர் நாள் -மற்றவை
எல்லாம் உன் வாழ்நாள்.
பிறக்கையில் பிறந்தாய்
இறக்கையில் இறந்தாய்
இருப்பதில் என்ன இழந்தாய்.
கொடுக்காத கை வீணே ! - கொடுப்பதைக் கண்டு
ரசிக்காத கண் வீணே !
சிரிக்காத முகம் வீணே - பிறரை
அணைக்காத நீயும் வீணே !
கர்ணன் பற்றிப் பேசுகிறாய்
கடையேழு பற்றி பேசுகிறாய்
காலம் காலமாய் பேசுகிறாய்
கொடுப்பதில் மட்டும் யோசிக்கிறாய்
பிச்சை இட்டவன் இறைவன்
பிச்சை பெற்றவன் மனிதன்
பிச்சை கேட்பவன் "மனிதன்"
பிச்சையிட்டால் நீ இறைவன்.
மாறுமோ உன் மனம்!
தீறுமோ தீ குணம்!
சேருமோ நல் மனம்!
வாய்க்குமோ விண் குணம்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100