Saturday, November 14, 2015
Wednesday, July 29, 2015
கலாம் சார் !
ஒரு இஸ்லாமிய மனிதனக்கு, இந்து மதக் கடவுள்களின் புகைப்படங்களை விற்கும் ஒரு அங்காடியின் வெளியே, ஒரு ஐயர், அந்த மனிதனின் புகைப்படத்தை வைத்து, மாலையிட்டு, விளக்கு ஏற்றி இரங்கல் தெரிவிக்கிறார். அதே மனிதனுக்காக, ஒரு கிறிஸ்துவ ஆலயத்தின் வெளியே, மெழுகுகள் ஏற்றப்பட்டு பிரார்த்திக்கப்படுகின்றது. அதே மனிதனுக்காக ஒரு இஸ்லாம் கல்லூரியில், இரங்கல் கூட்டம் நடைபெறுகின்றது. அதே மனிதனுக்காக வழி நெடுகிலும், இரங்கல் பதாகைகள், சுவரொட்டிகள்; இப்படிக்கு, இவண், என்ற இடத்தில் மட்டும் கட்சியின் பெயரோ , உறவினர்களின் பெயரோ, சாதியின் பெயரோ இல்லை, வெவ்வேறு வார்த்தைகள். கீழத்தெரு மக்கள், கங்கா ஸ்வீட்ஸ் , அசோக் மற்றும் நண்பர்கள், இன்னும் பல ... இவை எல்லாம் எப்படி ஒரு மனிதனால் சாத்தியமானது ??? அதுவும் அவன் இறப்பிற்கு பிறகு ?
உண்மையான உள்ளம் கொண்டு ஒருவன் பழகினால், எளிமையின் பின் நடந்து சென்றால், அறிவில் மிகுந்தாலும் அடக்கம் கொண்டால், பிள்ளை மனம் கொண்டு பிள்ளைகளோடு உறவாடினால், அனைவரையும் சமமாக மதித்தால், நிறம் , இனம், மதம் தாண்டி மனிதர்கள் அவனைத் தன்னுள் ஒருவனாக நினைப்பார்கள்; பெருமிதம் கொள்வார்கள்; உள்ளத்திலிருந்து கண்ணீர் சிந்துவார்கள். தலைவன் என்பவன் தன்னோடு நடந்து செல்பவன்; தன்னைச் சுமக்கச் சொல்பவன் அல்ல. கலாம் ஒரு மனிதர்; தலைவர். கலாம் சார், என் நிறைவேறாத ஆசைகளுள் உங்களைச் சந்திப்பதையும் ஒன்றாக இறைவன் சபித்து விட்டான். நீர் சொன்னது போல், கனவு காண்கிறேன், உங்களைப் போன்ற மனிதர்களை சந்திப்பதற்காக. நீர் வாழ்க ! எங்கள் மனங்களில். #RIP #APJAbdulkalam
_ சத்தியசீலன் @ கிறுக்கல்கள்100
Wednesday, July 15, 2015
கொஞ்சம் சிந்தியவைகள்
![]() |
தப்பிற்கான அளவுகோல் அவரவர் தகுதியைப் பொருத்து நிர்ணயிக்கப்படுகின்றது .
ஆண்கள் பெண்களிடம் சொல்லும் அத்தனை மன்னிப்புகளும் தவறுகளுக்கானது அல்ல அன்பிற்கானது.
இராமன்களுக்கு சீதையும், சீதைகளுக்கு இராமன்களும் எப்பொழுதும் கிடைப்பதில்லை.
கவிதைகள் திருடப்படும் பொழுதெல்லாம் காதல் பிறக்கின்றது.
உனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் முழுமையாக சொல்லி விடாதே ! பிறகு, சொல்வதற்கு ஒன்றும் இருக்காது; கேட்பதற்கும் செவிகள் திறக்காது.
எல்லோரும் கதாநாயகர்களாக வாழத்தான் ஆசைப்படுகிறார்கள். ஆனால், காலம் அவர்களை வில்லன்களாகச் சித்தரித்து விடுகின்றது .
இங்கு இலவசமாய் கிடைக்க வேண்டியதெல்லாம் (கல்வி, மின்சாரம்,குடிநீர்) காசு கொடுத்தும், காசு கொடுத்துப் பெற வேண்டியதெல்லாம் ( தொலைக்காட்சி , மின்னம்மி, அரவைப்பொறி, மின்விசிறி, அரிசி ) இலவசமாய் கிடைக்கும்.
இப்படிக்கு
தமிழக அரசு.
c/o இந்திய அரசு.
காமம் திகட்டிப் போகும் சமயத்தில் காதல் பிறக்கிறது.
'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொன்ன பாரதி மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால், தன் பேரனுக்கோ, பேத்திக்கோ, OC Category யில் PG Seat கிடைக்காமல் கல்லூரி கல்லூரியாக அலைந்திருப்பார்.
ஒரு மொழியோ, கவிதையோ, மனிதனோ, மனிதமோ, கடவுளோ, கலையோ கொஞ்சம் புரியவில்லை என்றால் அதனை உயர்வாகக் கருதும் மனப்பாங்கு எனக்கு எவ்வாறு தொற்றிக்கொண்டது?
ஆண்கள் பெண்களிடம் சொல்லும் அத்தனை மன்னிப்புகளும் தவறுகளுக்கானது அல்ல அன்பிற்கானது.
இராமன்களுக்கு சீதையும், சீதைகளுக்கு இராமன்களும் எப்பொழுதும் கிடைப்பதில்லை.
கவிதைகள் திருடப்படும் பொழுதெல்லாம் காதல் பிறக்கின்றது.
உனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் முழுமையாக சொல்லி விடாதே ! பிறகு, சொல்வதற்கு ஒன்றும் இருக்காது; கேட்பதற்கும் செவிகள் திறக்காது.
எல்லோரும் கதாநாயகர்களாக வாழத்தான் ஆசைப்படுகிறார்கள். ஆனால், காலம் அவர்களை வில்லன்களாகச் சித்தரித்து விடுகின்றது .
இங்கு இலவசமாய் கிடைக்க வேண்டியதெல்லாம் (கல்வி, மின்சாரம்,குடிநீர்) காசு கொடுத்தும், காசு கொடுத்துப் பெற வேண்டியதெல்லாம் ( தொலைக்காட்சி , மின்னம்மி, அரவைப்பொறி, மின்விசிறி, அரிசி ) இலவசமாய் கிடைக்கும்.
இப்படிக்கு
தமிழக அரசு.
c/o இந்திய அரசு.
காமம் திகட்டிப் போகும் சமயத்தில் காதல் பிறக்கிறது.
'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொன்ன பாரதி மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால், தன் பேரனுக்கோ, பேத்திக்கோ, OC Category யில் PG Seat கிடைக்காமல் கல்லூரி கல்லூரியாக அலைந்திருப்பார்.
ஒரு மொழியோ, கவிதையோ, மனிதனோ, மனிதமோ, கடவுளோ, கலையோ கொஞ்சம் புரியவில்லை என்றால் அதனை உயர்வாகக் கருதும் மனப்பாங்கு எனக்கு எவ்வாறு தொற்றிக்கொண்டது?
- சத்தியசீலன் @ கிறுக்கல்கள்100
Tuesday, September 2, 2014
மோதிரம்
சில பல காலங்களுக்கு முன்பு, புகைப்படங்களுக்குக் கவிதை எழுதி வந்தேன். அதை, ஞாபகம் வைத்து தோழி சரண்யா, இந்த புகைப்படத்திற்கு எழுதுமாறு கேட்டுக்கொண்டார். இதோ அது உங்கள் முன்னே !
உனைக் காணா வேளையில்
நான் கடிக்கும் ஆறாம் விரல்
மோதிரம்.
மோதிரத்தின்
வெற்றிடமாய்
என்னுள்ளம் தானிருக்க ...
தினம்
தினம் நிரப்புகிறாய்
விரலால் ...
விழியால் ..
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Thursday, August 21, 2014
இப்படிக்கு மருத்துவன்
குறிப்பு : நீயா நானா 17/08/2014 நிகழ்ச்சி கண்டு மனம் வெதும்பி எழுதியது. அரசியல் படுத்தாதீர்கள்.
மருத்துவர்களை மருத்துவம் பார்க்க விடாமல்
வாதாட அழைக்கிறது இந்த 'வக்கீல்' சமூகம்
பொருத்தது போதும் பேசி விடலாம்
என எத்தனித்தால் - ஓர் இருமல் சத்தம்
என்னைக் கலைத்து விடுகிறது
நுரையீரல் புற்றோ இல்லை
உடல் உருக்கும் காச நோயோ இல்லை
மழைக்கால சளி இருமலோ ?
Bronchoscopy ஓ? இல்லை
Sputum Smear ஓ? இல்லை
வெறும் Antibiotic ஓ ?
சொல்லலாமா ? வேண்டாமா ?
சொன்னால் நான் காசு பிடுங்குபவன்
சொல்லாவிடில் நான் மருத்துவம் படிக்காதவன்
நடப்பது நடக்கட்டும்
சொல்லிவிடுகிறேன்
இதையெல்லாம் செய்து விடுங்கள்; - ஆம்
எங்களைத் திட்டுவதற்காகவாவது நீங்கள்
உயிருடன் இருக்க வேண்டுமல்லவா ?
- இப்படிக்கு மருத்துவன்.
- சத்தியசீலன் @ கிறுக்கல்கள் 100
Monday, July 28, 2014
இதுவும் கடந்து போகும் - ஒரு முறை பாடல்
முன் குறிப்பு: இது என்னுடைய முதல் பாடல் தமிழ்த் திரையுலகில். அதுவும், ஏ.வி.எம் என்னும் பெரிய நிறுவனத்தில். அந்த பாடல் வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக ! இத்துடன் அப்படத்தின் சுட்டியை இணைத்துள்ளேன். 'ஒரு முறை' பாடல் இடம் பெரும் நேரம் 10.25 முதல் 15.40 வரை. உங்கள் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.
இசை : உமாசங்கர்
வரிகள் : மரு.சத்தியசீலன்
இயக்கம்: அனில் மற்றும் ஸ்ரீஹரி பிரபாகரன்
படத்தின் சுட்டி : https://www.youtube.com/watch?v=UstJCj5r2dw
தினம் தினம் ஒரு நொடி போதும் அன்பே
சிநேகம் உன்னோடு
யுகம் யுகம் நம் காதல் வாழும் பெண்ணே
எந்தன் கண்ணோடு
மொழியிழந்தேன் திரிந்தேன்
ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே ....
ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே ....
( ஹம்மிங் )
ஒரு முறை ஒரு முறை எதிர் நீயும் தோன்றவே வாழ்கிறேன்
காதலே ....
காதலே ....
( ஹம்மிங் )
என் தேடல் பிழை நீ
மழை தேடும் முகில் நீ - நான்
கிறுக்காத கவிதைகள் நீ
என் தோளில் விழும் நீ
மடியில் எழும் நான் - உன்
ஸ்பரிசங்கள் உயிர் தீண்டும் தேடல்.
எங்கு சென்றாலும் தள்ளி நின்றாலும்
காதலில் உனை நனைப்பேன்
நரைகள் விழுந்தாலும் பிறைகள் தேய்ந்தாலும் - உன்
காலடி நான் கிடப்பேன்.
( ஹம்மிங் )
( ஹம்மிங் )
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Saturday, April 26, 2014
வாயை மூடி பேசவும் - விமர்சனம்
அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து, பெரியவனாகி, முகத்தில் புன்னகையும், பேச்சில் மயக்கும் வித்தையையும் கொண்ட 'பிக்ஸ் இட்' நிறுவனத்தின் சேல்ஸ் ரெப் அரவிந்த் ( அறிமுகம் துல்கர் - நடிகர் மம்முட்டியின் மகன்) உடைந்ததை எல்லாம் ஒட்ட வைக்கின்றார் உறவுகள் உட்பட. இவரே கதையின் நாயகன். பார்க்கும் பட்சத்தில் ஒட்டிக் கொள்ளும் முகபாவம், நடிப்பு, மென்மை துல்கருக்கு. தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்வரவு.
முகத்தில் மெல்லிய சோகம் இலையாட, காதலனின் விருப்பங்களுக்காகத் தன்னை மாற்றிக் கொள்ளும், மனதில் பட்டதை வெளியில் சொல்லாமல் தனக்குள்ளே முடங்கிக்கொள்ளும், அப்பாவின் இரண்டாம் திருமணத்தை அங்கீகரித்தும், அதனை தன் மனம் ஏற்க முடியாமல், இறந்த தன் தாயில் நினைவுகளோடு வாழ ஏங்கும் பனிமலை அரசு மருத்துவமனையின் இளம் மருத்துவர் அஞ்சனா, கதையின் நாயகி. ( நஸ்ரியா )
நஸ்ரியாவின் சித்தியாக, எழுத்தாளராக மதுபாலா, சுகாதரத் துறை அமைச்சராக பாண்டியராஜ், தமிழ்நாடு குடிகாரர்கள் சங்கத் தலைவராக ரோபோ சங்கர், துல்கரின் நண்பன் அர்ஜுனன், அமைச்சரின் பி.ஏ வாக காளி, ஆசிரம இடத்தின் உரிமையாளராக வினுச்சக்கரவர்த்தி, நியூக்கிளியர் ஸ்டாராக ஜான் விஜய், ரேடியோ ஜாக்கி பாலாஜி, அப்புறம் முக்கியமாக, ப்ரைம் டிவியின் செய்தி வாசிப்பாளராக படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் இன்னும் பலர் இணைத்து கலந்து கட்டிய காமெடி மற்றும் கொஞ்சம் கருத்து நிறைந்த படமே வாயை மூடி பேசவும்.
பனிமைலையை "டம்ப் ஃப்ளு" என்ற வியாதி தாக்குகிறது. அது என்ன, எப்படி பரவுகிறது, எப்படி அதைத் தடுப்பது என ஒரு டாக்டர் கணக்காக அவர்களே சொல்லிவிடுகின்றனர். அதலால், நாம் யாரும் பயப்படத் தேவையில்லை. அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் வரை யாரும் யாருடனும் பேச கூடாது எனும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஏனெலில் அது பேசுவது மூலம் தான் பரவுமாம். இத்தகைய சூழலில், ஆர்.ஜே வாகத் துடிக்கும் துல்கர், தன் காதலை பிடிக்க வில்லை என சொல்லத் துடிக்கும் நஸ்ரியா மற்றும் பலரின் சூழ்நிலை என்னாகிறது என்பதே படத்தின் சுருக்கக் கதை.
காமெடி கலாட்டாவிற்கு ரோபோ உத்திரவாதம். 'விஸ்வரூப' விவகாரத்தை எடுத்துக் கலந்து கட்டி சிரிக்க வைத்திருக்கிறார்கள். படத்தின் முன் பாதி சுமார் ரகம். படத்தின் பின்பாதியில் யாரும் பேசாவிடினும், அயர்வு ஏற்படுத்தாமல் கடக்கின்றது. பின்னணி இசை நன்று. பாடல்களில், 'காதல் அரையைத்' தவிர மற்ற எதுவும் மனதில் சிவக்கவில்லை. கற்பனைக் கதையில் காமடி ரசம் பிழிந்து, கொஞ்சம் கருத்துச் செர்ரி வைத்திருக்கிறார்கள். நல்ல முயற்சி இருப்பினும், அனைத்து மக்களுக்கும் இது பிடிக்குமா என்பது சந்தேகம். படம் 'கொஞ்சம் நீளம்' துல்கர் கொடுக்கும் ஜவ்வு மிட்டாய் போல. மத்தபடி குமுதா ஹாப்பி அண்ணாச்சி !!!
பிடித்தது:
- கற்பனை
- நகைச்சுவை
- கருத்து ( பேசுனா எல்லா பிரச்சனையும் சரி ஆகிடும் )
- ஒளிப்பதிவு
- எடிட்டிங்
பிடிக்காதது:
- திரைக்கதை நீளம்
- பாடல்கள்
படம் முடிந்த பின்பு, தாங்கள் தங்கள் வாழ்வில் கொஞ்சம் யோசித்து உங்கள் மனதில் பட்டதை சமரசம் செய்து கொள்ளாமல் தைரியமாக செய்தால் அதுவே படத்தின் வெற்றி. மொத்தத்தில் வாயை மூடி பேசவும், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் அல்ல, பார்த்தால் கண்டிப்பாக பிடிக்கும் வைப்புகள் அதிகம் உள்ள படம்.
எனது மதிப்பீடு - 3.5/5
படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Friday, January 31, 2014
சையத் என்னும் நண்பன் !!!
சில மனிதர்களின் உணர்வுகள் நம்முள் மிகப்பெரிய ஆச்சரியங்களை
விதைத்துச் செல்லும். சில முகங்கள் நம்முள் புதைந்துக் கிடக்கும் பரவசங்களை
மீட்டுத் தரும். சில நிகழ்வுகள் ‘நட்பு’ என்னும் ஒரு சொல் இன்னும் உயிர்ப்புடன்
தான் இருக்கிறது என நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டும். இப்படி சில, இன்னும் பல,
ரகசியங்களை, அதியசங்களை தன்னுள் பூட்டி வைத்துக்கொண்டிருக்கும் இந்த இளைஞனை இசையின்
மடியில் கண்டத்தில் எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சி, கூடுதல் பொறாமை.
இவன் ராகங்களைக் கரைத்துக் குடித்தவன் என நான் சொல்லவில்லை; ராகங்களின்
இடையே புது ராகம் தேடி, உணர்வால் வருடி, நம்மை மனதால் சிரிக்கவும், அழவும் செய்ய
வைக்கத் தெரிந்த, மதம் மாறிய குழல் ஊதும் கண்ணன். போராடி பெரும் வெற்றி தான்
நிரந்தரம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்னும், இன்னும் சொல்லிக்கொண்டே
போகலாம். காலம் காத்திருக்கிறது, இவன் சரித்திரத்தை கடல் நீர் கொண்டு வானில் எழுத!
எனக்கு ஒரே ஒரு ஐயம் நீர் வற்றிப்போனால் என் செய்யும் இந்தக் காலம். கவலை
வேண்டாம், என் உதிரம் ஒரு துளி போதும் வானம் தீர்ந்து போகும். இது நான் என் மேல்
கொண்ட கர்வத்தின் கூப்பாடு அல்ல. இவன் இசையோசை என்னுள் மீட்டிய நட்பின் வெளிப்பாடு.
சையத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ?
(இவை யாவும் எனது சொந்த கருத்துக்களே; இது மற்ற போட்டியாளர்களின் மனங்களைக்
காயப்படுத்தும் நோக்கில் கூறப்படுபவை அல்ல.)
·
தான் வெற்றி பெறாவிட்டாலும், தன் நண்பன் வெற்றிப்பெற்றிருக்க வேண்டும்
என சிந்திய கண்ணீர்த்துளிகளுக்காக.
·
வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாகப் பாவிக்கும் சலனமற்ற
உள்ளத்திற்காக.
·
இன்னும் இந்த குரல், பல மாற்றங்களை இந்த உலகில் உருவாக்க வேண்டும்
என்பதற்காக.
·
தன்னுடைய சந்தோசத்தை பார்க்கும் மனிதர்கள் தோறும் அப்பிச்செல்லும்
காரணத்திற்காக.
·
கடைசியாக, தனிமை விரும்பும் ஒரு மனிதனை, அவன் வட்டத்தில் இருந்து
விடுவிப்பதற்காக !
சையத்திற்கு வாக்களிக்க www.supersinger.in
என்ற இணையதளத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டுமென்று உங்கள்
அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அல்லது SS04 என டைப்
செய்து 57827 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பலாம். வருங்கால இசை உலகம் உங்கள்
கையில். வாய்ப்பளியுங்கள் ; அவன் நம்மை மகிழ்விப்பான்.
பின் குறிப்பு : அன்பின் மிகுதியால், நட்பின் மொழி கொண்டு ‘அவன் இவன்’
என நான் பயன்படுத்திருக்கிறேன். யாரேனும் என் கூர் வார்த்தைகளால் காயப்பட்டிருந்தால்
மன்னிக்கவும்.
முகப்புத்தக முகவரி : Syed Subahan
யூடியூப் பதிவுகள்: SS04 Syed Singing Collections
உங்கள் வாழ்த்துக்களையும் வாக்குகளையும் , என் நண்பன் திறமையானவன் என
தாங்கள் கருதினால் வழங்குங்கள்.
அன்புடன்
சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Tuesday, August 20, 2013
நம்ம திருச்சி !
![]() |
| http://www.123photography.co.uk |
வாடா மச்சி ! – இது
நம்ம திருச்சி
வாடா மச்சி ! மச்சி ! – இது
நம்ம திருச்சி.
சோழனுக்கு சோறு போட்ட உறையூரு – இங்கு
சொல்லாம கொல்லாம கிடக்குது பாரு.
சத்தம் எங்கும் ஏறிப்போச்சு தமிழ்நாட்டுல – நீ
சந்தோசமா வாழலாம் எங்க ஊருல .
தீவு போல இருக்குது பார் ஸ்ரீரங்கம் – இது
காவிரியும் கொள்ளிடமும் கொஞ்சும் இடம்.
ஒரு முறை ஏறி வாடா மலைக்கோட்டை – உன்
உச்சி முதல் பாதம் வரை ஆயுள் ரேகை !
எங்க ஊரு தி-நகரு தில்லைநகரு – இங்கு
ஏராளமா கொட்டிக்கிடக்கு ரொம்ப பிகரு.
பொண்ணுங்க பப்புல மப்புல திரிவதில்லை – நீ
கைநீட்டிக் கூப்பிட இது சென்னையில்லை!
காந்தி வந்து தொறந்து வச்ச மார்கெட்டு – இங்கு
காணும் முகம் ஒவ்வொன்னிலும் கலாம் லுக்கு.
சுஜாதா, வாலியெல்லாம் நம்ப ஊருட – இவங்கள
படிக்காதவன் மனுசனில்லை நீயும் கேளுடா !
-சத்தியசீலன் @ கிறுக்கல்கள்100
Friday, July 19, 2013
வாலி நீர் வாழி !
![]() |
| Photo Courtesy : Google |
அங்கே
கவிதைப்புத்தகங்கள் கிழித்தெறியப்படுகின்றன.
கவிஞர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.
கவிஞிகள் கற்பு அழிக்கப்படுகிறது.
முடமாய்த் தமிழ் திரிகிறாள்.
முண்டாசுக்கவி மூக்கு சிந்துகிறான்.
திருவரங்கம் காவிரிக்குள் மூழ்குகிறது.
வெற்றிலைப் பாக்கு இரத்தம் சிந்துகிறது.
வாலி கொலை செய்யப்படுகிறார்.
-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Wednesday, May 29, 2013
மாடர்ன் தத்துவப் பாடல் !
குறிப்பு : இந்த பாடல் (?) 'இளையதலைமுறை' STUGAZINE இரண்டாவது செய்திமடலுக்காக எழுதிய தத்துவப்பாடல் !!! ??? செய்தி மடலைத் தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே அழுத்தவும். இளையதலைமுறை அரசு சாரா பொது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
பல்லவி:
அட இங்க பாரு ! அங்க பாரு !
இவன பாரு ! அவன பாரு !
சொல்லி சொல்லி போரடிச்சு போச்சு மாப்புள - நீ
சொந்தமா சிந்திச்சிடு கொஞ்சம் கேப்புல.
சரணம்:1
காந்தி போல வாழ்ந்த காலம் போயே போச்சு - நீ
கேட்ஸ் அ போல அழுத்தி பாரு கணினி மௌசு.
ஆமை முயல் காலமெல்லாம் மாறிப் போச்சு - இங்கே
பத்து முயல் ஓடுது பாரு - ஓடு பாஸு !
சரணம்:2
சிரிச்சு பேசும் மனசுக்குள்ள ஆயிரம் தூசு - நீ
சிந்திக்காம பேசிட்டீனா போயிடும் மவுசு.
அம்மா அப்பா வாத்தியாரு கடவுளு தாண்டா - உனக்கு
கஷ்டம் வந்தா வந்து நின்னா நண்பேன் தாண்டா !
சரணம்:3
கண்ணு முழி பிதுங்க நீயும் படிப்ப புக்ஸு - அட
கண்ண நீயும் தொறந்து வச்சா உலகமே புக்கு ! - நீ
காசு பணம் வச்சிருந்தா கடவுளு இல்ல - மனுஷ பய
கண்ணீர தொடச்சு விட்டா மரணமே இல்ல !
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Subscribe to:
Comments (Atom)











