Showing posts with label நட்புக்கவிதைகள். Show all posts
Showing posts with label நட்புக்கவிதைகள். Show all posts

Tuesday, May 24, 2011

மன்னிக்கவும் கோகுல் !

Copyright - http://www.keeprelationships.com


குறிப்பு : நண்பர்களுக்குள் ஊடல் வருவது இயல்பு தானே ! அப்படியொரு ஊடல் பொழுதுகளில் உதிர்த்த வரிகள் . நண்பர்களை, அவர்களின் நட்பை புரியாமல் தவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இக்கவிதை . 



ண்பனே - நீ
என் வாழ்க்கையில் 
உன் பகுதியைச் 
சுருக்கிக் கொண்டாய்.
நான் - என் 
வார்த்தைகளை 
உன்னிடம்
சுருக்கிக் கொண்டேன்.
நான்
பேச நினைத்த போது
பேசாமல் விலகினாய் 
நீ
பேச நினைக்கும் போது 
பேச இயலாமல் 
விலகுகிறேன்.

நான் 
உன்னிடம் பலவற்றைப் 
பகிர்ந்து கொள்ள 
விழைகிறேன். 
ன்று தான்
புரிந்தது நீயும்
விழைகிறாய் என்று ...
பகிர்ந்து கொள்ள அல்ல 
பிரிந்து செல்ல

ன்னை இன்னொரு
அருணனாய் நினைத்திருந்தேன் - அதனை
அர்த்தமற்ற அந்தியாய் மாற்றி விட்டாயே !

சுகதுக்கங்களை     
சுதந்திரமாய்
சொல்லுமிடம்
நண்பனுள்ளம்.
ந்த நண்பனிடத்திலேயே 
சுதந்திரமில்லை
பிறகென்ன
அந்த உள்ளத்திற்கு.

நானும் பழகிக்கொண்டேன்
உன்னைப் போல் இருப்பதற்கு...
காலையில் காலை வணக்கம்
மாலையில் மாலை வணக்கம்
முடிந்தது நட்பின் இலக்கணம்.

ன்ன தான் 
நடிக்க முயன்றாலும்
தோற்று விடுகிறேன் - உன்
இயல்புக்கு முன்னால் .

ள்ளத்தின் உண்மைகளை
உள்ளத்திலேயே வைத்திருந்தால் 
யாரறிவார் அது உண்மையென்று !

காதலினும் உயர்ந்தது நட்படா ! - நம்
நட்பிற்கு அவ்விடம் இல்லையடா!
காதலில் கூட மறைத்திடலாம் 
நட்பிடம் மறைப்பது அரிதடா !

நான் சொல்வது 
உனக்கு மட்டுமல்ல 
நட்பைப் புரியாத 
அனைத்து நல்லவர்களுக்கும்.
து எப்படியிருந்தாலென்ன ?
உன் விருப்பம் போல் ...
நண்பனே !
விடை பெறுகிறேன் - என்
வார்த்தைகளைச் சுருக்கிக் கொண்டு . 



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Related Posts Plugin for WordPress, Blogger...