Sunday, November 20, 2011

கை நழுவிய நளனும் நந்தினியும் !



குறிப்பு: சில பல மாதங்களுக்கு 'நளனும் நந்தினியும்' இயக்குனர் வெங்கடேசன் அவர்களை அழைத்தேன். பாடல் குறித்து விவாதித்தோம். இசை கொடுக்கப்பட்டது. பாடல் எழுதப்பட்டது. ஆனால், காரணங்கள் சிலவால்  வாய்ப்பு கை நழுவியது. அந்த வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக ! நீங்கள் கூறுங்கள் உங்களுக்கு இந்த வரிகள் பிடித்திருக்கிறதா ?


ன்னவோ சொல்லுற உந்தன் கண்ணால
என்னத்தான் கொல்லுற உந்தன் சொல்லால
தன்னால பேசித்தான் தினமும் சாகுறேன் ;
பேசாமல் பார்க்காமல் என் மனம் ஏங்கித் தவிக்குதே ! ( ஆண் )

ழையடிக்குது குளிரடிக்குது
மனசுக்குள்ள புயலடிக்குது .
படபடக்குது துடிதுடிக்குது
இதயம் ரெண்டும் சலசலக்குதுவே ! ( கோரஸ் )

பூ மிதிச்சு வண்டு சாகுதே !
தேன் குடிக்க மனசு ஏங்குதே !
விழியிலது மொழிகளது
நூறுகோடி உள்ளதே !
மௌனமது போதுமது
காதல் பேய் கொல்லுதே ! ( ஆண் )

பூ மிதிச்சு வண்டு அது சாகும் கதையிலே !
தேன் முடிஞ்சா பூ கசக்கும் காதல் உலகிலே !
விழியில் என்ன மொழிகள் உண்டு ? பொய் சொல்லுற !
பல பொய்கள் சொல்லும் காதலுக்கு பேய் தேவல !  ( பெண் )


ன்னவோ செய்யுற  உந்தன் கண்ணால
என்னத்தான் நெய்யுற  உந்தன் சொல்லால
தன்னால பேசித்தான் தினமும் சாகுறேன் ;
பேசாமல் பார்க்காமல் என் மனம் ஏங்கித் தவிக்குதே ! ( ஆண் )



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



7 comments:

  1. நன்றாக இருக்கிறது சீலன் வரிகள் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது நண்பா . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வேற யாராவது பெரிய மனுஷங்க கிட்ட கேளுங்க... அதுசரி யார் அந்த உதவி இயக்குனர்...

    ReplyDelete
  4. சொல்லாடல் அருமை... சத்யா...

    வாழ்த்துகள்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...