Copyright : worth1000.com |
உலகம் தன்னுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு இருக்கின்றது. 'இந்தியா' மட்டும் தான் தவறுகளை சமூகத்தின் கண்களிலிருந்து மறைப்பதில் முனைப்புடன் இருக்கிறது. நான் இதைப் பற்றி எழுத வேண்டாமென்று தான் நினைத்தேன். மனம் கனத்தது. ஆதலால் ...
"அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும்; அவள் இந்தியாவின் மகள்; என்ன செய்கிறோம் நாம் ; அரசாங்கம் தூங்குகிறதா ? " என கூச்சலிடும் சமூகமே ! உன்னிடம் ஒரேயொரு கேள்வி . இதன் அடிப்படை யது என தெரியுமா ?
- பாரம்பரியத்தில் வாழ்ந்து வந்த இந்தியாவில் பப்புகளும், பகட்டு வாழ்கையும் செய்த புரட்சி பணம் மட்டுமல்ல ; பாலியல் பலாத்காரங்களும் தான்.
- நீ ஊரைத் திருத்த வேண்டாம்; உன் வீட்டில் உள்ள உன் தந்தையை, தமயனை, கணவனை, மகனை, நண்பனைத் திருத்து; தவறுகள் குறையும். கருப்பு பக்கங்கள் இல்லாத மனிதன் மிகக் குறைவு.
- இலங்கைப் பிரச்சனைக்கண் ஏற்பட்ட வலிகளை இதனோடு ஒப்பிட்டு சில நண்பர்கள் வினவியிருந்தார்கள். இரண்டுமே உயிர் தான் ; இரண்டுமே உணர்வுகள் தான். எல்லாவற்றுக்கும் கொடி பிடித்துக் கோஷமிடுவது முட்டாள்த்தனம். அதை செய்வதை விட கொடிபிடித்து வரும் கரை வேட்டியில் கொள்கையும், உண்மையும், நன்மையையும் கொண்ட உள்ளங்களைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் நம் மக்களுக்கு வர வேண்டும் என்பதையே நான் விழைகிறேன்.
- ஒற்றுக்கொள்ளாமல் நடந்தால் பலாத்காரம். அதற்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன; நல்லது. ஒற்றுக்கொண்டு நடக்கும் கூத்துகளுக்கு பெயர் என்ன ? கலாச்சாரமா ? இதனைத் தட்டிக் கேட்பது யார் ? கருக்கலைப்பின் புள்ளிவிபரங்கள் உங்களில் ஒருவரையேனும் சுடவில்லையா ?
- பணத்தாலும், அரசியல் பலத்தாலும், அடிமைத் தனத்தாலும் இன்றும் பல இடங்களில் தவறுகள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அதைக் களைவது எப்போது ? அந்த நாய்களுக்குத் தூக்குத் தண்டனை ஒரு தீர்வாகும் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அது உலகிற்கு வேண்டுமானால் ஒரு பாடமாக அமையலாம். ஆனால் அவனுக்கு, அது ஒரு நிமிட வேதனை. இந்தக் கொடியவனுக்கு அந்த ஒரு நிமிட தண்டனை போதுமா ?
சமூகமே ! சிந்தித்து செயல்படு; மாற்றங்கள் உன்னில் இருந்து தான் உருவாக வேண்டும்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
:(
ReplyDelete