Monday, September 5, 2011

நானாகிய நான் !

Copyright : Sathyaseelan

ன்பு நண்பா !
அறிவு நண்பி ...
அனைவருக்கும் வணக்கம் .

றிமுகம் தேவையில்லை - என்றால்
அருகில் வந்து பேசலாம்
அறிமுகம் அவசியமென்றால்
அடுத்த வரி படிக்கலாம் ...

நான்
தோல்வியின் தோழன்
தமிழின் காதலன்
நண்பனுக்கு நண்பன்
எதிரிக்கும் அன்பன்.

வி தெரியும்...
காதல் தெரியாது.
புகைப்படம் தெரியும்...
புகைவிட தெரியாது.
கணினி தெரியும் ...
க்வாட்டர் தெரியாது.

நான்
நல்லவன் என்று சொல்லவில்லை....
நல்லவனுக்கான நல்லவைகள் மட்டும் உள்ளவன்
என்றே சொல்கிறேன் .

நான்
தேடும் நட்பு ...
உங்களில் இருக்கலாம்.
நீங்கள்
தேடும் அன்பு ....
என்னிடம் கிடைக்கலாம்.
பகிர்ந்து கொள்ள
தடைகள் தென்படலாம்...
புரிந்து கொள்ள
மொழிகள் கைவிடலாம்....

உணர்வுகளால் உணர்த்த முடியாத
உண்மையான நட்பும் உளவோ ?

வா தோழா !
முகம் தெரியாத நீயும் ..
அகம் புரியாத நானும்..
இணைவோம்
இணையத்தில்
உணர்வுகளோடும் ...
உண்மைகளோடும் .... 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 


3 comments:

  1. நட்புக்காக விடுக்கப்பட்ட அழகிய கவிதை அருமை!......வாழ்த்துக்கள் சகோ என் தளத்திற்கும் வாருங்கள் .இப்படி உரிமையோடு அழைக்கலாம் அல்லவா சகோ?..மிக்க நன்றி பகிர்வுக்கு .............

    ReplyDelete
  2. என் தளத்தை நீங்கள் இன்னும் பின்தொடரவில்லையே சகோ.....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...