Showing posts with label சத்தியசீலன். Show all posts
Showing posts with label சத்தியசீலன். Show all posts

Monday, September 5, 2011

நானாகிய நான் !

Copyright : Sathyaseelan

அன்பு நண்பா !
அறிவு நண்பி ...
அனைவருக்கும் வணக்கம் .

அறிமுகம் தேவையில்லை - என்றால்
அருகில் வந்து பேசலாம்
அறிமுகம் அவசியமென்றால்
அடுத்த வரி படிக்கலாம் ...

நான்
தோல்வியின் தோழன்
தமிழின் காதலன்
நண்பனுக்கு நண்பன்
எதிரிக்கும் அன்பன்.

கவி தெரியும்...
காதல் தெரியாது.
புகைப்படம் தெரியும்...
புகைவிட தெரியாது.
கணினி தெரியும் ...
க்வாட்டர் தெரியாது.

நான்
நல்லவன் என்று சொல்லவில்லை....
நல்லவனுக்கான நல்லவைகள் மட்டும் உள்ளவன்
என்றே சொல்கிறேன் .

நான்
தேடும் நட்பு ...
உங்களில் இருக்கலாம்.
நீங்கள்
தேடும் அன்பு ....
என்னிடம் கிடைக்கலாம்.
பகிர்ந்து கொள்ள
தடைகள் தென்படலாம்...
புரிந்து கொள்ள
மொழிகள் கைவிடலாம்....

உணர்வுகளால் உணர்த்த முடியாத
உண்மையான நட்பும் உளவோ ?

வா தோழா !
முகம் தெரியாத நீயும் ..
அகம் புரியாத நானும்..
இணைவோம்
இணையத்தில்
உணர்வுகளோடும் ...
உண்மைகளோடும் .... 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 


Saturday, August 20, 2011

சத்தியசீலனின் தத்துவங்கள் !

Photo Courtesy : GOOGLE

அடைப்பதற்கு முன்
விற்று விடுங்கள் - எங்கள்
சிறகுகளை !!
இப்படிக்கு கூண்டுக்கிளி 
♥
அரசியல் என்னும் சதுரங்க விளையாட்டில் வெட்டுப்படுபவர்கள் வாக்காள சிப்பாய்கள் மட்டுமே !
♥
மணமான பெண்களின் பேச்சுக்கு இரையாவது இறைவன் இல்லையென்றால் கணவன்
♥
கல்லூரிக்காலங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களில் மட்டுமே மகிழ்ச்சியைப் பார்க்க முடிகிறது ! நம்பவில்லையென்றால் உங்கள் திருமணப் புகைப்படங்களைப் பாருங்கள்.
♥
சொன்னான் பாரதி ... " அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம் " பாரதி உன் வார்த்தை பொய்த்து விட்டன. இன்றைய சூழலில் அச்சமும் நாணமும் பெண்களுக்கும் அவர்களைக் காதல் செய்யும் ஆண்களுக்கும் கட்டாயம் வேண்டும்.
♥
"ஒருவன் செய்தால் தவறு; அதனையே ஒரு ஒட்டு மொத்த சமுதாயமும் செய்தால் அதன் பெயர் நாகரீகம். "
♥
தவறுதலாக புரிந்து கொள்வது பெண்களுக்கே உரித்தான விஷயம் போல ...
♥
அது என்னவோ ! தெரியவில்லை ... தான் பார்க்கும் வேலையைத் தன் மகன் பார்க்கக்கூடாதென அப்பாக்கள் பிடிவாதமாகவே இருக்கிறார்கள்.
♥
இலங்கைத் தமிழனுக்கு உறுப்புடியாய் உதவுவதற்கு ஒருவனுக்கும் துப்பு இல்லை. ஆனால் ... ஆயிரமாயிரம் மேடைகள்; ஆக்ரோசமான பேச்சுகள்; புத்தகம் தோறும் கவிதைகள்; இன்னும் பல பல ... எல்லாம் வேசங்கள்! நம் வாழ்வு செழிக்க என் ஈழத்தமிழனின் கண்ணீரில் அல்லவா நாம் குளிர் காய்கிறோம்.
♥
போரின் காயங்களும்; மனித உரிமை மீறல்களும்; பெண்மைத் திருட்டுகளும் .. எனக்கு ஒன்றை மட்டும் நினைவுப் படுத்திக்கொண்டே இருக்கிறது. " கடவுள் இருக்கிறாரா ? ".
♥
எனக்கு ஒரு காதலி வேண்டும். என்னுடைய இலட்சியங்களையும் அதற்காக கொடுக்கப்படும் வலிகளையும்... முடிந்தால் என்னையும் நேசிக்கின்ற காதலி வேண்டும். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !
♥
காதலிப்பவர்கள் அழகாய் இல்லமால் இருக்கலாம். ஆனால் காதல் அழகானது. ஆதலில், காதல் செய்வீர் .
♥
எல்லா உறவுகளையும் பணம் தின்றுவிடுகிறது ; நட்பினைத் தவிர ...
♥
என் கையெழுத்து ஆட்டோகிராப் ஆகும் பகலுக்காக ...
தூங்காமல் விடிகின்றன இரவுகளும்; கலையாமல் விரட்டுகின்றன கனவுகளும் .
♥
ஆண்களின் அழுகைக்கு சொந்தக்காரிகள் பெண்கள் மட்டுமே !
♥
உன்னுடைய கடைசி நிமிட ஆசை வரை பூர்த்தி செய்ய வேண்டுமேன்பதற்காகவே ... நான் உன்னைக் காதல் செய்கிறேன் 
♥
உன்னை உலகம் அறியும் வரை ..
நீ எழுதும் கவிதைகளெல்லாம் கிறுக்கல்கள் ;
உன்னை உலகம் உணர்ந்த பின்பு ..
நீ கிறுக்கியவைகள் கூட கவிதைகள் .
♥
செய்த உதவிகள் சுட்டிக்காடுப்படும் பொழுது தான், உதவியதின் உண்மையும்... உதவியவர்களின் தன்மையும் .... உறுத்திக் கொல்கிறது.
♥
உலகிலயே !!!
மிகச் சிறந்த கேள்வி - மௌனம்;
மிகச் சிறந்த பதில் - புன்னகை.
♥
கொடுப்பவர்களாக இருங்கள் .... அன்பு உட்பட !!
♥
என்ன தான் தீவிரமாக முயற்சி செய்தாலும் ... சில விசயங்களில் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப் பட மட்டுமே முடிகின்றது .
♥
 
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
 

Sunday, July 3, 2011

எனது தத்துவங்கள்




பெற்றோர்களுடைய ஆசிர்வாதத்தோடு நடக்கும் காதல் திருமணங்களில் காதலர்களின் வைராக்கியத்தைக் காட்டிலும் பெற்றோர்களின் பெருந்தன்மையையே என்னால் உணர முடிகிறது !!!
♥
பெரிய வீட்டு பிள்ளைகளின் பத்திரிக்கை செலவிலே என் பல ஏழை நண்பர்களின் திருமணங்கள் சிறப்பாக நடைபெற்றுவிடுகின்றன !
♥
" ஏழ்மை " என்ற ஒரு அடையாளம் போதும் என்னைக் குற்றவாளி என்று சமுதாயம் ஒப்புக் கொள்ள !
  ♥
ஆடவர்கள் அறியாமால் உரசினால் கூட அதட்டிக் கேட்கும் ஆண்கள் சமூகம், பெண்கள் உரசினால் மட்டும் பெருந்தன்மையாக மன்னித்து விடுகிறது !
♥
தாய்மொழியில் பேசும், புனையும் ஆர்வத்துக்காக என்னை அவமானப்படுத்த முயல்கிறது இந்தச் சமூகம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  ♥
உறவுகளும் உணர்வுகளும் மென்மையானவை . உடைத்து விடாதீர்கள் !
  ♥
தவம் செய்யாமல் கிடைத்த வரம் காதல்
தவறு செய்யாமல் கிடைத்த சாபமும் காதல்.
  ♥
என்னை நானே உயர்த்திக் கொள்ள முயல்கிறேன் . அப்பொழுது தானே ! என்னை நாடும் நண்பர்களுக்கு என்னால் உதவ முடியும். பணத்தால் மட்டுமல்ல .... மனத்தால் கூடவும் .
♥
வறுமை வரைந்த வார்த்தைகளுக்கு மட்டும் தான் ....
வலியும் அதிகம்; வலிமையையும் அதிகம் .
  ♥
" தீவிரவாதத்திற்கு மத அடையாளம் பூசி மதத்தைக் கலங்கப்படுத்தாதீர்கள். "
♥
"அன்புக்கு மதம் கிடையாது - அவையெல்லாம்
அறிவுக்கு மட்டும்தான் "
♥
  - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
Related Posts Plugin for WordPress, Blogger...