Copyright : http://www.profimedia.com |
சந்தோசமாய் மலர்ந்தது காலை - அந்த
சூரியனின் உதயத்தில் ...
வழக்கமாய் செல்லும் வகுப்பறைகள்
தினசரி வாசிக்கும் அதே முகங்கள்
எல்லாம் சரிவர இருந்தன முகத்தில்
சந்தோசத்தைத் தவிர ...
அந்நியர் போல் நண்பர்கள்
ஆளுக்கொரு திசையில்
அவரவர் புத்தகத்தோடு.
முத்தமிட இதழ்களா தேவை?
அட! முத்தமிடுகின்றனவே
விரல்களும் விழிகளும்
புத்தகத்தின் பதிப்புகளோடு.
அச்சம், அடக்கம், அகங்காரம், அனுபவம்
அனைத்தும் காணலாம்
அவர்கள் விழிகளில்
அன்று மட்டும்.
புத்தகத்தை சிறுபதிப்பு எடுத்து
சின்ன சின்ன இடைவெளிகளில்
சிதறாமல் ஒழித்து வைக்கும்
சில மாணவர்கள்
மூளையை மட்டுமே நம்பி
முன்னுக்கு வரத் துடிக்கும்
முதல் மாணவர்கள்
எது நடந்தால்
எனக்கென்ன என இருக்கும்
ஏராளமான மாணவர்கள் !
விதங்கள் ஆயிரமிருந்தாலும்
விழிகளில் ஒரே பயம் தான் ..
அதிகாலை விழிப்பு
அரைகுறை சாப்பாடு
ஆண்டவநிடும் கோரிக்கை
அவசரமாய் புரட்டிய பக்கங்கள்
அனைவரின் ஆசீர்வாதம்
அன்று மட்டும் பேசாத அவர்கள்
எல்லாம் இந்நாளின் சிறப்பு நிகழ்சிகள் !
அத்தனை சிரமங்களுக்கு நடுவிலும்
அவர்களின் அவ(ள்/ன்)கள் சொல்லும்
ALL THE BEST ற்காக காத்திருந்த அவர்கள் !
அட ! இன்னுமா தெரியவில்லை
இன்று தான் அவர்களுக்கு பரீட்சை !!!
வகுப்பறை சார்ந்த கவிதை...
ReplyDeleteதேர்வுக்கு தயாராகும் ஒருவரின் இதய துடிப்பு..
கவிதை நன்றாகவே வந்திருக்கிறது...
வாழ்த்துக்கள்..
PARICHCHAI UNARVAI ARUMAIYAAKA VELIPPATUTHI ULLEERKAL..VAALTHHTUKKAL
ReplyDeleteசூப்பர் கவிதை அழகான நடை
ReplyDelete