©www.mos360.ru |
“ ஏன்டா! மச்சான் இப்படி தம் அடிச்சு உடம்ப கெடுத்துக்குற?” என்ற என்னுடைய கேள்விக்கு “Tension டா, Family problem, style மச்சி, love failure டா மாமு” என பல பதில்கள்.நண்பனுக்கான வரையறை மீறி என்னால் பல சமயங்களில் அவர்களைத் திருத்த முடிவதே இல்லை. என் கண் முன்னே என் தோழர்கள் தங்களுடைய ஆயுளைக் குறைத்துக்கொள்வதை நான் வெட்கமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.
அரசாங்கம் தன்னுடைய அத்தனை அஸ்திரங்களைப் பயன்படுத்தினாலும் இந்த சிகரட் எமனை மட்டும் ஒழிக்க முடியவில்லை. அனைத்து கல்லூரிகளிலும் புகைபிடித்தல் syllabus இல் இல்லாமலே கட்டயப்பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.இதின் உச்சகட்டம் , மருத்துவக்கல்லூரி என்பது மனதிற்கு வேதனையாக இருக்கிறது. “ ஊருக்கு தான் உபதேசம்” என்பது மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்குத் தான் நன்கு பொருந்தும்.
அண்மையில் நடந்த கருத்துக்கணிப்பு கூறுவது என்னவென்றால் உலகில் புகைபிடிப்பதில் 50% பேர் இளைஞர்கள். அதில் 20% பேர் இளைஞிகள். இது வளமான வாழ்க்கைக்கு வழி வகுக்காது என்பது நிதர்சனமான உண்மை.
புகைக்கிறாய் …. சாகிறாய் …..
உனது உரிமை. உரிமை என்பதை விட உனது திமிரு என்று கூறலாம். அனால் மற்றவர்கள். Passive Smoking, Public smoking மறைமுகமாக பலரின் வாழ்கையை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.பொது இடங்களில் யாரேனும் புகைப்பதைப் பார்த்தால் “பளார்” என்று அரைய வேண்டும் போல் தோன்றும். இருப்பினும் நாகரீகம் கருதி நான் செய்வதில்லை. நீங்களும் என்னைப் போல் இருக்காதீர்கள் . பொது இடங்களில் புகைப்பவர்களைக் கண்டால் புரியச் செய்யுங்கள் இல்லை புகார் செய்யுங்கள் .புகைப்பவர்களே! உங்களால் ஒரேயொரு நன்மை நாட்டின் மக்கள் தொகை குறையும் .
புகைக்காதீர்கள்! முடியவில்லை என்றால் பொது இடங்களில் புகைக்காதீர்கள்!
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
evlo sonnalum kekka maatanuka sir...
ReplyDelete