Monday, April 25, 2011

பனித்துளி சங்கர்



குறிப்பு : இக்கவிதை என் இணைய நண்பர் பனித்துளி  சங்கர் மற்றும் அவர் தமிழுக்காக  ...
அவரின் வலைப்பூ முகவரி -  http://www.panithulishankar.com/

னித்துளி
புனிதமானது ....
பனித்துளி
அழகானது...
பனித்துளி
உண்மையானது...
பனித்துளி
மென்மையானது...

ண்பா!!!
பனித்துளி மை  கொண்டு
ஆழ்கடல் அறிவு சேர்க்கும்
அற்புதம் யாரிடம் கற்றாய் ?

ரை நொடி உன் வலை படித்தால்
ஆழ் மனதில் பூ பூக்கும் !!
அடுத்த நொடி உன்னை வாழ்த்த
ஆயிரம் வார்த்தைகள் கை கோர்க்கும் !

ன் தமிழுக்கு மட்டும் தான்
தரம் உண்டு ..
தரணியில் உள்ள தவறுகளை தட்டிக் கேட்க !!

தொலைவில் நீ இருந்தாலும் - உன்
தமிழ் மட்டும் நான்
தொடும் தூரத்தில் ...

கட்டாய் பேசித்திரிபவர்களுக்கு மத்தியில்
பண்பாய்  பேசும்
பனித்துளி ...

ன் மைத்துளி
பிரபஞ்சத்தின் அறிவுத்துளி
காதலர்களின் கண்ணீர்த்துளி
தமிழின் தேன்த்துளி 
முகிலின் மழைத்துளி
காமத்தின் உயிர்த்துளி
கடவுளின் கவித்துளி

மொத்தத்தில் உன்னை
முத்தமிட மறந்தவர்களுக்கு  மத்தியில்
முத்தமிடுகின்றன என் தமிழ்  - உன்
தமிழை !!! 


-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



3 comments:

  1. அருமையான கவிதை வரிகள்..!! துளித்துளியாய் இதயத்தை வருடும்.. வார்த்தை கோர்வைகள்..! பனித்துளி சங்கர் இக்கவிதைக்கு பொருத்தமானவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை..! வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் நண்பரே..!!

    ReplyDelete
  2. அனைத்து கவிதை வரிகளும் அருமை

    கற்றதும் பெற்றதும்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...