Copyright : Google |
முகங்கள் முகங்கள் மறந்தேன் ;
முகப்புத்தகத்தில் தினமும் திரிந்தேன்.
யுகங்கள் யுகங்கள் அளந்தேன்;
பிஞ்சு இதழ்மொழி அறியேன்.
உலகம் பெரிதாய் தெரிந்தது - என்
மகிழ்ச்சி அதுபோல் இருந்தது.
உலகம் சுருங்கிப் போனது - என்
மனமும் மழுங்கிப் போனது.
உண்மை சொன்னால் கசக்குது;
பொய்கள் எங்கும் சிரிக்குது.
காதல் கடையில் கிடைக்குது;
காசில் நட்பு பிறக்குது.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100