தெரியாத முகங்களே !
தெரிகின்ற முகங்களே!
உண்மை தேடும் உணர்வில்லா விழிகளே !
இருக்கின்ற இறைவன் இருப்பது புரியுமோ ?
எரிக்கின்ற நாட்கள் எவனுக்கும் தெரியுமோ ?
பணங்கள் தேடும் மாமிசப்பட்சிகள்;
பிணங்கள் தின்னும் அதிசயப் பூச்சிகள்.
உயிரின் உறைவிடம் ஒருவனும் அறியா ;
உணர்ந்தவன் உலகினில் இருப்பது தெரியா.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100