அன்னை வீடு செல்கிறேன் – என்னை
அவமதித்ததற்காக.
அப்படி என்னடி சொல்லிவிட்டேன்
“அரைவேக்காடு” என்று தானே!
அதுவும் உன்னைக் கூட இல்லை சாப்பாட்டைத்தான்
அதனால் உண்ணக் கூட இல்லை சாப்பாட்டைத்தான்.
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
உப்பில்லை உரைப்பில்லை
கசப்பில்லை காரமில்லை
வேண்டுமென்றா செய்வார்கள் சமையல்
இவையெல்லாம் வேண்டாமென்று.
அன்பே! நான் உன்னைக் காதலித்த போது…
கவிதையே! என்று அழைத்தேனே
அதன் அர்த்தத்தை அறியாயோ?
விளக்கில் விழுந்த விட்டில்பூச்சியல்லவா நான்
விடை தெரியவில்லை
கூறுங்கள் விடையை….
தாருங்கள் விடுதலையை .
புகுந்த எழுத்துக்கள்
பிறந்த இடம் நோக்கிச் செல்லா:
கவிதையே! நீ மட்டும் உன்
பிறந்த இடம் செல்லலாமா?
அத்தான் அவை
உயிரற்ற வார்த்தைகள் – நானோ
உயிருள்ள கவிதை.
பூவே! என்று உன்னை புகழ்ந்ததற்காக
வாடுகிறாயே வேண்டாதற்க்கெல்லாம்.
வார்த்தையால் உங்களை வெல்பவர் யாருமில்லை:
நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
விடைபெறுகிறேன்.
இறுதியாக இரு நிமிடம்.
முதல் நிமிடம் நம்
காதல் கல்லறையில் காகிதப்பூ நட்டுச்செல் – மறு நிமிடம்
அம்மலர்க் கொண்டு – என்
மரணத்திற்கு மலர்வளையம் வைத்துச்செல்.
என்னடி யோசிக்கிறாய்…
காகிதப்பூக்கள் எதற்காக என்றா?
வாசமுள்ள மலர்கள் – உன்
வாசமுள்ள மலர்கள் – உன்
வாசத்தை சுமந்து – என்
சுவாசத்தை உயிர்பிக்கும்
பிணமான நான்
பிரசவிக்க விரும்பவில்லை.
இவையெல்லாம் என்னால் செய்ய இயலா…
ஏன் ?
உங்கள் உயிர்பிரிந்த நொடியில்
பிரியும் என் உயிர்
பிறகெப்படி இவையெல்லாம்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100