தேவதையே !
நட்புத் தாரகையே !
காதல் தேவையோ ? - பொய்க்
காதல் தேவையோ ?
வழியெங்கும் நட்பின் சருகுகள்
மனமெங்கும் மிதிக்கும் உணர்வுகள்.
விழியெங்கும் காதல் அரும்புகள்
தினந்தோறும் மலரும் கனவுகள்.
நட்பின் காகிதம் கொடுத்து
காதல் எழுதிக் கொண்டோம்.
நட்பின் விரல் பிடித்து
காதல் பழகிக் கொண்டோம்
நட்பின் மலர் கொடுத்து
காதல் தொடுத்துக் கொண்டோம்
நட்பின் கைக்குட்டை வாங்கி
காதல் துவட்டிக் கொண்டோம்.
நட்பைப் புதைத்து விட்டு
காதல் பெற்றுக் கொண்டோம்.
காதல் தோழியே !
நட்பு மழை தந்தது;
காதல் துளி தந்தது.
நட்பு வயல் தந்தது;
காதல் நெல் தந்தது.
நட்பு தாகம் தீர்த்தது;
காதல் தாகம் தந்தது.
நாம்
நட்பு கிழித்துக்
காதல் உடுத்திக் கொண்டோம்.
காதல் கிழித்துக்
காமம் உடுத்திக் கொள்வோம்.
நாம்
கண்ணீர் குடித்து
தாகம் தீர்த்துக் கொண்டோம்.
கண்ணை விற்று
காட்சி வாங்கி வருவோம்.
ஆம் தோழி !
நம்முள் காதல் பிறந்திருக்கிறது ;
காதல்
காமம்
காயம்
மூன்றும் முளைத்திருக்கிறது
நட்பின் புதைகுழியில் !!!
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100