Photo Courtesy : http://www.coloribus.com |
அண்மையில் தான் ஹேமா செல்வராஜின் இக்கவிதையைப் படித்தேன் ! ஒன்று சொல்வது போல் அமைத்து வேறொன்றில் முடிப்பது அழகு ! இது போன்று நானும் முன்பு "விடைபெறுகிறேன் !" என்ற கவிதையை எழுதினேன் . நேரமிருப்பின் வாசித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் .
நம்மை அறிமுகமே இல்லாத
இடமாய் தேட வேண்டும்
சுற்றி முகப் பரிச்சயம்
உள்ளவர்கள் கூடாது
பனிப் பெண்கள் இல்லாத
கூட்டம் மொய்க்காத
இடமாய் இருத்தல் நலம்
ஆண் பணியாளர்கள் எனில்
ஒருவருக்கு மேல் இருத்தல் கேடு
ஒரு கொலை செய்வதற்கான
அத்தனை நோட்டமிடலும்
ஜாக்கிரதை உணர்வும்
செயலில் வேண்டும்
வக்கிரப் பார்வையோ
சில்மிஷச் சிரிப்போ
இல்லாத விற்பனையாளனா
என்று உறுதிப்படுத்த வேண்டும்
முதலில் ஒரு
வீட்டு உபயோகப் பொருளை வாங்கி
தைரியம் கொள்ள வேண்டும்
இத்தனையும் வேண்டும்
கூச்சமின்றி கடையில்
ஆணுறை வாங்க.
- ஹேமா செல்வராஜ் @ ஆனந்த விகடன்
கருத்து: நம் பாதுகாப்பிற்கு ஆணுறையோ, நம் நலத்திற்கான ஸ்டேப்ரீயூ வாங்க கூனி குறுகி கூச்சப்பட்டுக் கடைகளில் வாங்கும் நாம் , லஞ்சம் வாங்கவோ , அடுத்தவர் மனங்களைக் காயப்படுத்தவோ தயங்குவது இல்லை என்பதே நிதர்சனம்.