Showing posts with label கல்லூரி. Show all posts
Showing posts with label கல்லூரி. Show all posts

Monday, December 19, 2011

விடைபெறுகிறேன் !



ன்று உனக்கும் எனக்கும் விவாகரத்து
நான் மட்டும் கண்ணீரோடு...
நீ என்றுமே பெருமிதத்தோடு.

ந்தேன். வசந்த நாளில் - உன்
வாசல் தேடி....
வாரி அணைத்து
வரவேற்பு செய்தாய்
விவாகரத்து விரைவில் என்று சொல்லாமலே !!

ன்னால் தானடி - என்
பெற்றோரை பிரிந்தேன்
உன்னால் தானடி - என்
உறவுகள் மறந்தேன்
உன்னால் தானடி - என்
கனவுகள் மலர்ந்தேன்
உன்னைத் தானடி
உண்மை சொல்லேன்?

திருமணத்தன்றே தப்பிக்கலாம் - என்று
நினைத்தேன்
உன் அழகால் என்னை
அடைத்து விட்டாயடி - என் நினைவை அன்றே
அழித்து விட்டாயடி

முதல் இரவு
உன்னுடன் உறங்காமலே ...
சில இரவு
உன்னோடு பேசாமலே...
பல இரவு
உன்னோட பாசத்திலே...

றவுகள் பல தந்தாய்
உணர்வுகள் பல தந்தாய்
உரிமைகள் பல தந்தாய் - இன்று
"உதறிவிட்டு செல்" என்கிறாய் .

நான் ஆணென்று உணர்ந்ததும்
உன்னை மணந்த பின்பு தான்;
நான் நானென்று உணர்ந்ததும்
உன்னை மணந்த பின்பு தான்.

காதலைக் கற்று தந்தாய்
கவிதைகள் கற்று தந்தாய்
கல்வியைக் கற்று தந்தாய்
கலையையும் கற்று தந்தாய்
கடைசியில் ஏனடி கழட்டிவிட்டு செல்கிறாய்?

ன்னைச் சேர்ந்த ஒவ்வொரு நாளும்
உதிரம் உலையாய் கொதித்ததடி - இனி
உன்னைப் பிரியும் ஒவ்வொரு நாளும்
உதிரம் பணியை உறையுமடி

ப்படி என்னடி செய்துவிட்டேன் - படித்தேன்
உன்னைப் படித்தேன்
படிப்புக்கு தண்டனை பிரிவா?

முதல் முத்தம் தந்து என்னை நீ அழைத்தாய் - இதோ
இறுதி முத்தம் தந்து உன்னை நான் அழைக்கிறேன்
வந்துவிடு என் வாசல்தேடி
வரமாட்டாய் - நீ நிச்சயம்
வரமாட்டாய்
ஈழத்தைக் காக்க இந்தியன் வருவானா?

வி
டைபெறுகிறேன்...
உன் குழந்தையோடு - இல்லை இல்லை
நம் குழந்தையோடு.

ய்! கல்நெஞ்சக்காரி , இப்பொழுதாவது கூறடி
யாரடி வைத்தது - உனக்கு
"கல்லூரி" என்ற பெயரை




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Related Posts Plugin for WordPress, Blogger...