Copyright : tamilwin.com |
குறிப்பு : நல்லதொரு முடிவை உலகம் எடுக்கட்டும் ; அதுவரை என் குருதி கொஞ்சம் கொதிக்கட்டும். போராடும் மாணவர்களுக்கு கிறுக்கல்கள்100 சார்பாக வணக்கங்கள்.
இவ்வளவு அழகானதா இலங்கை !
ஒற்றை மரம்.
அதனைக் கடந்து செல்லும் ஒரேயொரு பறவை.
பசுமை பொங்கும் புல்வெளி
பனித்துளி படர்ந்த சிலந்தி வீடு
செவ்வானத்தையும் செம்மண்ணையும் இணைக்கும் புளுதிப்போர்வை
என முதல் சில நிமிடங்கள் அனைத்தும் கேமரா கவிதைகள். வாழ்த்துக்கள்
அழகை ரசிக்கும் பொழுதே, அழுகை தொட்டுவிடுகிறது நிதர்சனக் காட்சிகளால்.
ஆற்றாமையை விழிகளில் தாங்கும் தமக்கையும் தமையனும்
விழி இழந்த பெரியவர்
மென்சோகம் கொள்ளும் நிறைமாத தமிழச்சி
போரின் வடுக்கள்
கனவுகளைத் தேடும் சிறார்கள்
முள்வேலி முகாம்கள்
என அடுத்து வரும் எல்லாம் மனதைப் பிழியும் நிதர்சனங்கள்.
" நாங்க இருந்து ஆண்ட பூமியெல்லாம் இல்லேன்டாங்க ! " எனும் முதுமையின் வார்த்தைகள் .... உள்ளத்தின் வலிகளின் வெளிப்பாடு.
பிளஸ் - ஒளிப்பதிவு, இசை .
மைனஸ் - கருத்து அமைப்பு, திரைக்கதை வீரியம்.
வாழ்த்துக்கள் ! SHELLY
Srilanka = ஒரு முறை பயணம் செய்யலாம்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100