நான் அவர்கள் போல் பேச பலமுறை முயற்சித்து தோற்றதும் உண்டு !
எனக்குத் தெரிந்த பல பேர் தங்கள் மகனையோ ! மகளையோ ! மழலை மாறும் முன்பே ! SPOKEN ENGLISH CLASS இல் சேர்த்து விடுவது உண்டு. அவர்கள் தன் மக்கள் " அம்மா என்று அழைப்பதை விட , " Hi Mom & Dad ... How are you ? " என்று அழைப்பதைத்தான் விரும்புகிறார்கள். பல சமயங்களில் அவர்களைப் பார்த்து,
" தரங்கெட்ட தாய்மொழியா நம் தமிழ்மொழி ? " என்று வினவத் தோன்றும்.
" தரங்கெட்ட தாய்மொழியா நம் தமிழ்மொழி ? " என்று வினவத் தோன்றும்.
ஆனால் இந்தக் காணொளியைக் காணும் பொது , என்னையும் மீறி என் தமிழ் நாவு " ALL THE BEST RAJ. YOU HAVE A BRIGHT FUTURE ! MAY THE GOD BE WITH YOU " என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
என் மனதைத் தைத்த ராஜின் வரிகள் ... " we don't have money what we do ... If we have money , we can buy Everything ! " .
வறுமை வரைந்த வார்த்தைகள் அவை - அதில்
வலியும் அதிகம் ; வலிமையையும் அதிகம்.
" ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று "
- புறநானூறு .
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100