Friday, January 31, 2014

சையத் என்னும் நண்பன் !!!




 சில மனிதர்களின் உணர்வுகள் நம்முள் மிகப்பெரிய ஆச்சரியங்களை விதைத்துச் செல்லும். சில முகங்கள் நம்முள் புதைந்துக் கிடக்கும் பரவசங்களை மீட்டுத் தரும். சில நிகழ்வுகள் ‘நட்பு’ என்னும் ஒரு சொல் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டும். இப்படி சில, இன்னும் பல, ரகசியங்களை, அதியசங்களை தன்னுள் பூட்டி வைத்துக்கொண்டிருக்கும் இந்த இளைஞனை இசையின் மடியில் கண்டத்தில் எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சி, கூடுதல் பொறாமை.

வன் ராகங்களைக் கரைத்துக் குடித்தவன் என நான் சொல்லவில்லை; ராகங்களின் இடையே புது ராகம் தேடி, உணர்வால் வருடி, நம்மை மனதால் சிரிக்கவும், அழவும் செய்ய வைக்கத் தெரிந்த, மதம் மாறிய குழல் ஊதும் கண்ணன். போராடி பெரும் வெற்றி தான் நிரந்தரம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்னும், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். காலம் காத்திருக்கிறது, இவன் சரித்திரத்தை கடல் நீர் கொண்டு வானில் எழுத! எனக்கு ஒரே ஒரு ஐயம் நீர் வற்றிப்போனால் என் செய்யும் இந்தக் காலம். கவலை வேண்டாம், என் உதிரம் ஒரு துளி போதும் வானம் தீர்ந்து போகும். இது நான் என் மேல் கொண்ட கர்வத்தின் கூப்பாடு அல்ல. இவன் இசையோசை என்னுள் மீட்டிய நட்பின் வெளிப்பாடு.

சையத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ?
(இவை யாவும் எனது சொந்த கருத்துக்களே; இது மற்ற போட்டியாளர்களின் மனங்களைக் காயப்படுத்தும் நோக்கில் கூறப்படுபவை அல்ல.)
·         தான் வெற்றி பெறாவிட்டாலும், தன் நண்பன் வெற்றிப்பெற்றிருக்க வேண்டும் என சிந்திய கண்ணீர்த்துளிகளுக்காக.
·         வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாகப் பாவிக்கும் சலனமற்ற உள்ளத்திற்காக.
·         இன்னும் இந்த குரல், பல மாற்றங்களை இந்த உலகில் உருவாக்க வேண்டும் என்பதற்காக.
·         தன்னுடைய சந்தோசத்தை பார்க்கும் மனிதர்கள் தோறும் அப்பிச்செல்லும் காரணத்திற்காக.
·         கடைசியாக, தனிமை விரும்பும் ஒரு மனிதனை, அவன் வட்டத்தில் இருந்து விடுவிப்பதற்காக !

சையத்திற்கு வாக்களிக்க www.supersinger.in என்ற இணையதளத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டுமென்று உங்கள் அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அல்லது SS04 என டைப் செய்து 57827 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பலாம். வருங்கால இசை உலகம் உங்கள் கையில். வாய்ப்பளியுங்கள் ; அவன் நம்மை மகிழ்விப்பான்.

பின் குறிப்பு : அன்பின் மிகுதியால், நட்பின் மொழி கொண்டு ‘அவன் இவன்’ என நான் பயன்படுத்திருக்கிறேன். யாரேனும் என் கூர் வார்த்தைகளால் காயப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

முகப்புத்தக முகவரி : Syed Subahan
யூடியூப் பதிவுகள்: SS04 Syed Singing Collections 

உங்கள் வாழ்த்துக்களையும் வாக்குகளையும் , என் நண்பன் திறமையானவன் என தாங்கள் கருதினால் வழங்குங்கள்.

அன்புடன்
சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...