Friday, May 3, 2013

பெர்பெக்ட் பெண்ணே !

© www.tumblr.com




 குறிப்பு : சில சமயம் என்ன தான் நாம் மாங்கு மாங்கு என்று யோசித்து வெண்பா, கலிப்பா , வஞ்சிப்பா என எல்லாம் கரைத்து எழுதினாலும் அது ஹிட் அடிப்பதில்லை. கொஞ்சம் லோக்கலாக 'ஒய் திஸ் கொலவெறி' போல் எழுதினால் தான் நம்மையும் கவிஞர் என இந்த தமிழ்ச்சமூகம் ஒப்புக்கொள்கிறது. மக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழியே ! இது குறித்த எனது அறிவுக்கண்ணை திறந்து வைத்த நண்பன் பிரவீன் அவர்களுக்கு இக் கவிதை(?) சமர்ப்பணம். இதனை ஒரு பாடலாக வடிவமைத்துத் தராமல் காலந்தாழ்த்தும் அன்பு நண்பர், இசை வித்தகர், 'கசப்பு இனிப்பு', 'தி லாஸ்ட் பாரடைஸ்' போன்ற ஹிட் அடித்த குறும்படங்களுக்கு இசை அமைத்த திரு.உமாசங்கர் அவர்களுக்கு எனது கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். மேலும் நீங்கள் , சூப்பர் சிங்கர் கனவின் முதல் கட்டமான பாத்ரூம் சிங்கர் பதவியில் தற்பொழுது இருந்தால், இப்பாடலை ஆண்ட்ரியா பாடிய  ' நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ' படத்தின் ப்ரோமோ பாடல், ' க்ரேசி மின்னல்' பாடலோடு பொருத்திப் பாடி மகிழலாம். இப்பாடல் கண்டு சமீப கால தனுஷ் போன்ற  கவிஞர்கள் கோபம் கொண்டால், என்னை மன்னித்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 


பெர்பெக்ட் பெண்ணே
பைத்தியம் நானே
உன்னாலே சுத்தி சுத்தி
காதல் கிறுக்கன் ஆனேன் !

ன் விழி ஓரம்
ஒரு துளி கண்டேன்
கண்ணீரா கவிதையா
குழம்பி நானும் நின்றேன்.

நீ செல்லும் ஸ்கூட்டி தனில்
நானும் சேர வேண்டும்
சொர்க்கங்கள் திருமணங்கள்
அங்கு நிச்சயம் ஆகும்

நீ போடும் சட்டை கலரில்
நானும் சட்டை போட்டேன்
சண்டைகள் போதும் அன்பே - நீ
காதல் செய்ய வேண்டும்

காபிஷாப்பில்  க்ரீடிங் கொடுத்தேன்
பஸ்ஸ்டாப்பில் தினமும் பட்ரோஸ் கொடுத்தேன்
பர்த்டே எல்லாம் பரிசுகள் கொடுத்தேன்
பாரின் சரக்கும் உனக்காக தவிர்த்தேன்.

பெர்பெக்ட்பெண்ணே
பைத்தியம் நானே
பாரடி! பேசடி!
பாவம் நானும் தானடி!
பிரெண்ட்ஷிப் எல்லாம் கட் பண்ணி விட்டேன் - உன்னோட
பிரெண்ட்சை நானும் மதிக்க கற்றேன்
ஜாக்கி தெரியும் பேண்டை வெறுத்தேன்
சாமியார் போல உன் சரணம் படித்தேன்.

ங்கேயோ கிடந்த என் கைபேசி எல்லாம்
பாக்கெட்டை விட்டு எங்கும் நகருவதில்லை
சாரி பலவும் லவ் யூ சிலவும
டெம்ப்லேட்டில் தினமும் உனக்காக சேர்த்தேன்

காதல் கலவும்
காயம் தரவும்
காதல் இதுவா - என
கண்கலங்கி நின்றேன்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...