Tuesday, March 26, 2013

சிறு கதையாய் சில கவிதைகள்

கண்ணதாசனின் கட்டில் குழந்தை

Copyright : Nilacharal.com

ண்ணதாசன் கட்டிலில்
கண்ணயர்ந்த கைக்குழந்தை
கண்விழித்தபின் கூறியது.
" அகரம் - எனக்கு அவள் கரம்." 
விஞர்கள் வீழ்வதுண்டு ;
கவிதைகள் வீழ்வதில்லை. 

 விலைமகள்
 
Copyright : Zedge.com


பூக்களை வட்டமிடும் பட்டுப்பூச்சியே ! - இந்த
பூவை வட்டமிடும் காரணமென்னவோ ? 
காலையில் சிரித்து மாலையில் மூடும் மலரும்
மாலையில் சிரித்து காலையில் மூடும் இவளும்
ஒன்றெனக் கண்டாயோ ! - அவள்
உள்ளம் தொட வந்தாயோ ? 


SMS

Copyright : Flickr


காலத்தின் உச்சம்
கடிதத்தின் எச்சம் 
குறுஞ்செய்திகள் !!

திருநங்கைகள்



குறிப்பு : இக் கவிதை நண்பர்களுடன் பெங்களூரில் இருந்து தொடர்வண்டியில் திரும்புகையில் ஏற்பட்ட அனுபவத்தைச் சார்ந்து எழுதப்பட்டது. இது யார்  மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. என் வார்த்தைகள் உங்கள் கண்ணாடி இதயங்களைக் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். 


ன்ன தான்
மதிப்பு, மரியாதை 
பரிதாபம், பாசம்
உங்கள்மேல் இருந்தாலும்....
அத்தனையையும் அழித்து விடுகிறீர்கள் !
டவர்களை* உரசி 
அதிகாரமாய்ப் பிச்சைக் கேட்கும்
அத்தனைத் தருணங்களிலும்.
திருநங்கைகளே !
தயவு செய்து வாங்கி விடாதீர்கள் ...
திருவோட்டு  நங்கைகள் என்ற பட்டத்தை ?? :-(


* குறிப்பாக கல்லூரி மற்றும் பதின்வயது இளைஞர்கள்.



 ஏன்? 

Copyright : The Hindu

குறிப்பு : இக்கவிதை ஹாக்கி இந்தியாவின் அதிகாரப்பூர்வமான தேசிய விளையாட்டு அல்ல என அறிவிப்பதற்கு முன்பு எழுதப்பட்டது


தாய்  தெருவில்
மனைவி மடியில் 
ஹாக்கி - கிரிக்கெட் !!! 


வரதட்சணை

Copyright : http://lipstickandpolitics.com


நாமும் ஊமைகள் தான்
திருமணத் திருவிழாக்களில்
வரதட்சணை.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



 

4 comments:

  1. அனைத்தும் அருமை...

    முக்கியமாக குறிப்புகள் கொடுத்தது நல்லது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சத்யசீலன், நல்ல முயற்சி..
    இது ஹைக்கூ டைப்பா?
    அப்படியென்றால் இன்னும் refine செய்தால் நலம்:

    உதாரணம்:

    பூவை மொய்க்கும்
    பட்டாம் பூச்சி
    பூவையை மொய்த்தது..
    அவள் -
    இரவில் மலரும் மலர் என்று..


    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. சமுத்ரா சார் ! நன்றி . இது ஹைக்கூ முயற்சி அல்ல; இவையெல்லாம் எனது பள்ளிக்காலங்களில் கவிதை என்றால் என்ன என்று தெரிவதற்கு முன்பு எழுதியவை. இப்பொழுது அதனில் மாற்றம் கொண்டு வரலாம். எனக்குத் தெரிந்தே அதில் சிறு தவறுகளும் உண்டு. ஆனால், பள்ளிக்காலத்தின் குழந்தைமை எழுத்துக்கள் மாற வேண்டாம் என்பதால் அதனை நான் அப்படியே பதிவு செய்துள்ளேன் .

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...