Wednesday, May 29, 2013

மாடர்ன் தத்துவப் பாடல் !


குறிப்பு : இந்த பாடல் (?) 'இளையதலைமுறை' STUGAZINE இரண்டாவது செய்திமடலுக்காக எழுதிய தத்துவப்பாடல் !!! ??? செய்தி மடலைத் தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே அழுத்தவும். இளையதலைமுறை அரசு சாரா பொது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.பல்லவி:
ட இங்க பாரு ! அங்க பாரு !
இவன பாரு ! அவன பாரு !
சொல்லி சொல்லி போரடிச்சு போச்சு மாப்புள  - நீ
சொந்தமா சிந்திச்சிடு கொஞ்சம் கேப்புல.

சரணம்:1
காந்தி போல வாழ்ந்த காலம் போயே போச்சு  - நீ
கேட்ஸ் அ போல அழுத்தி பாரு கணினி மௌசு.
ஆமை முயல் காலமெல்லாம் மாறிப் போச்சு - இங்கே
பத்து முயல் ஓடுது பாரு - ஓடு பாஸு !

சரணம்:2
சிரிச்சு பேசும் மனசுக்குள்ள ஆயிரம் தூசு  - நீ
சிந்திக்காம பேசிட்டீனா போயிடும் மவுசு.
அம்மா அப்பா வாத்தியாரு கடவுளு தாண்டா - உனக்கு
கஷ்டம் வந்தா வந்து நின்னா நண்பேன் தாண்டா !

சரணம்:3
ண்ணு முழி பிதுங்க நீயும் படிப்ப புக்ஸு - அட
கண்ண நீயும் தொறந்து வச்சா உலகமே புக்கு !  - நீ
காசு பணம் வச்சிருந்தா கடவுளு இல்ல - மனுஷ பய
கண்ணீர தொடச்சு விட்டா மரணமே இல்ல !


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Friday, May 3, 2013

பெர்பெக்ட் பெண்ணே !

© www.tumblr.com
 குறிப்பு : சில சமயம் என்ன தான் நாம் மாங்கு மாங்கு என்று யோசித்து வெண்பா, கலிப்பா , வஞ்சிப்பா என எல்லாம் கரைத்து எழுதினாலும் அது ஹிட் அடிப்பதில்லை. கொஞ்சம் லோக்கலாக 'ஒய் திஸ் கொலவெறி' போல் எழுதினால் தான் நம்மையும் கவிஞர் என இந்த தமிழ்ச்சமூகம் ஒப்புக்கொள்கிறது. மக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழியே ! இது குறித்த எனது அறிவுக்கண்ணை திறந்து வைத்த நண்பன் பிரவீன் அவர்களுக்கு இக் கவிதை(?) சமர்ப்பணம். இதனை ஒரு பாடலாக வடிவமைத்துத் தராமல் காலந்தாழ்த்தும் அன்பு நண்பர், இசை வித்தகர், 'கசப்பு இனிப்பு', 'தி லாஸ்ட் பாரடைஸ்' போன்ற ஹிட் அடித்த குறும்படங்களுக்கு இசை அமைத்த திரு.உமாசங்கர் அவர்களுக்கு எனது கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். மேலும் நீங்கள் , சூப்பர் சிங்கர் கனவின் முதல் கட்டமான பாத்ரூம் சிங்கர் பதவியில் தற்பொழுது இருந்தால், இப்பாடலை ஆண்ட்ரியா பாடிய  ' நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ' படத்தின் ப்ரோமோ பாடல், ' க்ரேசி மின்னல்' பாடலோடு பொருத்திப் பாடி மகிழலாம். இப்பாடல் கண்டு சமீப கால தனுஷ் போன்ற  கவிஞர்கள் கோபம் கொண்டால், என்னை மன்னித்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 


பெர்பெக்ட் பெண்ணே
பைத்தியம் நானே
உன்னாலே சுத்தி சுத்தி
காதல் கிறுக்கன் ஆனேன் !

ன் விழி ஓரம்
ஒரு துளி கண்டேன்
கண்ணீரா கவிதையா
குழம்பி நானும் நின்றேன்.

நீ செல்லும் ஸ்கூட்டி தனில்
நானும் சேர வேண்டும்
சொர்க்கங்கள் திருமணங்கள்
அங்கு நிச்சயம் ஆகும்

நீ போடும் சட்டை கலரில்
நானும் சட்டை போட்டேன்
சண்டைகள் போதும் அன்பே - நீ
காதல் செய்ய வேண்டும்

காபிஷாப்பில்  க்ரீடிங் கொடுத்தேன்
பஸ்ஸ்டாப்பில் தினமும் பட்ரோஸ் கொடுத்தேன்
பர்த்டே எல்லாம் பரிசுகள் கொடுத்தேன்
பாரின் சரக்கும் உனக்காக தவிர்த்தேன்.

பெர்பெக்ட்பெண்ணே
பைத்தியம் நானே
பாரடி! பேசடி!
பாவம் நானும் தானடி!
பிரெண்ட்ஷிப் எல்லாம் கட் பண்ணி விட்டேன் - உன்னோட
பிரெண்ட்சை நானும் மதிக்க கற்றேன்
ஜாக்கி தெரியும் பேண்டை வெறுத்தேன்
சாமியார் போல உன் சரணம் படித்தேன்.

ங்கேயோ கிடந்த என் கைபேசி எல்லாம்
பாக்கெட்டை விட்டு எங்கும் நகருவதில்லை
சாரி பலவும் லவ் யூ சிலவும
டெம்ப்லேட்டில் தினமும் உனக்காக சேர்த்தேன்

காதல் கலவும்
காயம் தரவும்
காதல் இதுவா - என
கண்கலங்கி நின்றேன்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100Tuesday, April 16, 2013

நண்பனுக்காக !

Copyright : blog.hirschi.se

 குறிப்பு : இக்கவிதை என் பள்ளிகால தோழன் அருணனுக்காக எழுதப்பட்டது . இது தன் நண்பனைப் பற்றி கவிதை எழுத துடிக்கும் கவிஞனுக்கும் அவன் கைகளுக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அமைக்கப்பட்டது. அவனுடன் அதிகம் நேரம் செலவிட்டதில்லை; அதிகம் ஊர் சுற்றியதில்லை; அதிகம் பகிர்ந்ததில்லை; அதிகம் சண்டையிட்டதில்லை; இருப்பினும் ஏனென்று எனக்குத் தெரியவில்லை. அவனைப் போன்ற ஒரு நண்பன் இதுவரை எனக்குக் கிடைத்ததில்லை.

யாராருக்கோ
கவிதை எழுதிய என்
கைகள் 
உனக்காக எனும் போது ...
சுருங்கிக் கொண்டது.

கேட்டேன் கைகளை ...
கேள்விக் கணைகளால்.

என் கணை செல்லும் முன்னே
மறு கணை வந்தது.

முதலில் என் கேள்விக்கு பதில் ...
கேள்!

கவிஞனுக்கு தற்பெருமை அழகா?
அசிங்கம்.

நீ கவிஞனா?
காலம் பதில் சொல்லும்.

யாருக்காக இந்த கவிதை?
நண்பனுக்காக.

பெயர்?
அருணன்.

அர்த்தம்?
சூரியன்.

எதற்காக இக்கவிதை?
பார்க்காத நான்
பார்ப்பதே அவன் எழுத்துக்கள் மட்டும் தான்
அந்த எழுத்துக்கள் பிறப்பதற்காக
என் எழுத்துக்கள்.

நண்பனென்றால்?
உயிர்.

உனக்கு?
எனக்கும் அப்படித்தான்.

செய்வாயா உன் நண்பன் சொல்வதை?
வீணான கேள்வி.

காரணம்?
உயிர் சொல்வதைத் தானே உடல் செய்யும்.

பிடித்தது?
யாரிடம்.

அவனிடம்?
மரியாதை ...

மன்னிக்கவும். அவரிடம்?
எல்லாம்.

பிடிக்காதது?
எல்லாம்.

உயிரைத் தருவாயா உன் நண்பனுக்காக?
உயிரே அவன் என்கிறேன்.

நட்பைப் பற்றி ஒரு கவிதை ?
அன்பைத் தருவாள் அன்னை
அனுபவம் தருவார் தந்தை
அறிவைத் தருவார் ஆசான்
உள்ளம் தருவாள் மனைவி
புகழைத் தருவான் பிள்ளை
இவை அனைத்தும் தருவான்
"நண்பன்"

நண்பனுக்காக?
வாழ்வேன்.

நண்பனில்லாமல்?
வீழ்வேன்.

உலகில் உயர்ந்தது உங்கள் நட்பா?
உலகில் தாழ்ந்தது  உன் கேள்வி.            

உன் கேள்வி?

ஏன் கவிதை எழுதாமல் சுருங்கினாய்?
மடையா!
உன் மனதில் உன் நண்பன்
அவன் மனதில் நீ !
இருவரும் ஒருவரே ..

உடலால் வேறுபட்டாலும் 
உள்ளத்தால் ஒருவரே !

சுற்றி வளைக்காதே ...
பதில் கூறு .

கடைசியாக ஒரு கேள்வி?
கேள்.

கவிதை தோன்றுமிடம்?
உள்ளம்.

உள்ளம் ஒன்று எனும் போது
உன் நண்பனை பற்றிய கவிதை என்பது...
உன்னைப் பற்றியாகாதா?
தற்பெருமை ஆகாதா?
கவிஞனுக்கு அழகா?
போதுமா விளக்கம்.

புரிந்தது .
மன்னித்து விடு.

என் வாழ்த்துக்கள் உன் நண்பனுக்கு...
என் வணக்கங்கள் உங்கள் நட்பிற்கு.-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Monday, April 15, 2013

இப்படியும் ஒரு புத்தாண்டு !

Copyright : Flickr

குறிப்பு : கிறுக்கல்களைப் படம் பிடித்துச் சென்றுள்ள பத்தாயிரம் கண்களுக்கும் மற்றும் தமிழை நேசிக்கும்  அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மிழ் வாழ்த்து சொல்ல ஆங்கில அட்டைகள்

ஜீன்ஸ் அணியும் தமிழன்னைகள் 

தமிழ் பேச மறந்த தமிழர்கள் 

மம்மி என்று சொல்லும் மழலைகள் 

தமிழே அறியாத நடிகையின் பேட்டி 

தமிழ் மணக்காத செம்மொழி மாநாடு 

காமக்காட்சிகள் அரங்கேறும் செம்மொழிப் பூங்கா

அறிவுப்புகளெல்லாம் ஆங்கிலத்தில் 

தமிழ்ப்படங்களுக்கு வரிவிலக்கு தமிழில் பெயர் வைத்தால் 

தமிழனைக் கொன்று குவித்தோம் ஈழத்தில்

தைக்கும் சித்திரைக்குமாய் தத்தளிக்கும் புத்தாண்டு 

இருந்தும் உணர்வற்றுக் கொண்டாடுகிறோம் ;
இனிய  தமிழ்ப் புத்தாண்டு !!!
-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100Thursday, April 11, 2013

சிந்தி விடாதே !

Copyright : www.loverofsadness.net

டி என்னவளே ! -உன்
கருவிழி மேகங்கள்
கண்ணுக்குள் மோதிக்கொண்டு
கருங்குளத்து நீர்
கன்னங்களில் வழியும் பொது - என்

தயக் குளத்தின்
செந்நீர் சிதறி
சாலையில் ஓடுதடி- என்னை
சோகத்தில் வாட்டுதடி.

ழிகின்ற நீர் - உன்
வாய்க் கமலத்தில்
வடிந்து விட்டால் - நீ
மகிழ்ச்சியால் சற்று சிரித்து விட்டால் - என் 

தயத்தின் நீரெல்லாம் 
ஓட மறுத்து
ஒரு நிமிடம் உறைந்து
உன் அழகை ரசிக்குதடி
உன்னை முத்தமிட துடிக்குதடி

ண்கள் தான் காதலின் பிறப்பிடம்
கவிஞர்கள் சொல்கிறார்கள் - உன்
கண்ணீரல்லவா என் உயிரின் இருப்பிடம்
நான் சொல்கிறேன்.

சிந்தி விடாதே - என் செல்லமே !
கண்ணீரை மட்டுமல்ல - என்
காதலையும் தான்.                 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100Related Posts Plugin for WordPress, Blogger...