Monday, April 15, 2013

இப்படியும் ஒரு புத்தாண்டு !

Copyright : Flickr

குறிப்பு : கிறுக்கல்களைப் படம் பிடித்துச் சென்றுள்ள பத்தாயிரம் கண்களுக்கும் மற்றும் தமிழை நேசிக்கும்  அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மிழ் வாழ்த்து சொல்ல ஆங்கில அட்டைகள்

ஜீன்ஸ் அணியும் தமிழன்னைகள் 

தமிழ் பேச மறந்த தமிழர்கள் 

மம்மி என்று சொல்லும் மழலைகள் 

தமிழே அறியாத நடிகையின் பேட்டி 

தமிழ் மணக்காத செம்மொழி மாநாடு 

காமக்காட்சிகள் அரங்கேறும் செம்மொழிப் பூங்கா

அறிவுப்புகளெல்லாம் ஆங்கிலத்தில் 

தமிழ்ப்படங்களுக்கு வரிவிலக்கு தமிழில் பெயர் வைத்தால் 

தமிழனைக் கொன்று குவித்தோம் ஈழத்தில்

தைக்கும் சித்திரைக்குமாய் தத்தளிக்கும் புத்தாண்டு 

இருந்தும் உணர்வற்றுக் கொண்டாடுகிறோம் ;
இனிய  தமிழ்ப் புத்தாண்டு !!!




-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Thursday, April 11, 2013

சிந்தி விடாதே !

Copyright : www.loverofsadness.net

டி என்னவளே ! -உன்
கருவிழி மேகங்கள்
கண்ணுக்குள் மோதிக்கொண்டு
கருங்குளத்து நீர்
கன்னங்களில் வழியும் பொது - என்

தயக் குளத்தின்
செந்நீர் சிதறி
சாலையில் ஓடுதடி- என்னை
சோகத்தில் வாட்டுதடி.

ழிகின்ற நீர் - உன்
வாய்க் கமலத்தில்
வடிந்து விட்டால் - நீ
மகிழ்ச்சியால் சற்று சிரித்து விட்டால் - என் 

தயத்தின் நீரெல்லாம் 
ஓட மறுத்து
ஒரு நிமிடம் உறைந்து
உன் அழகை ரசிக்குதடி
உன்னை முத்தமிட துடிக்குதடி

ண்கள் தான் காதலின் பிறப்பிடம்
கவிஞர்கள் சொல்கிறார்கள் - உன்
கண்ணீரல்லவா என் உயிரின் இருப்பிடம்
நான் சொல்கிறேன்.

சிந்தி விடாதே - என் செல்லமே !
கண்ணீரை மட்டுமல்ல - என்
காதலையும் தான்.                 



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Wednesday, April 10, 2013

நான் பெண்

Copyright : photo2000.blogspot.com


விளக்கு அணைக்கப்படுகிறது;
நான் புரட்டி எடுக்கப்படுகிறேன்.

விளக்கு பிரகாசிக்கிறது;
நான் புரட்டி எடுக்கப்படுகிறேன்.

விளக்கு முக்கியமில்லை;
நான் புரட்டி எடுக்கப்படுகிறேன்.

பரத்தை - நடிகை - மனைத்துணை.


*பரத்தை - விலைமகள்
*மனைத்துணை - மனைவி.

-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Thursday, April 4, 2013

நட்புக்காக ஒரு பெக்

Copyright : commons.wikimedia.org
தோ  அங்குதான் அவன் இருக்கிறான்.
கொஞ்சம் தொட்டுவிடும்  தான்.
என்று ஆரம்பித்தது எங்கள் உறவு என சரியாகத் தெரியவில்லை
கல்லூரிக் காலமாக இருக்கலாம்.
எவனோ ஒருவன்  அறிமுகம் செய்து வைத்தான் .
என்றாலும் இத்தனை நெருக்கம்
எனக்கே ஆச்சரியம் தான்.

வன் எனக்கு நண்பன்  - ஆம்
அவனிடம் மட்டும் தான் நான் உண்மையாக இருந்துள்ளேன்.
காதல் கசக்கும் போதும்
கண்ணீர்  பெருகும் போதும்
அவனுடன் தான் நான் இருப்பேன்.
சில சமயம்
பள்ளிகாலச் சொந்தங்களோ
கல்லூரிக்காலப் பந்தங்களோ  வந்தால்
இவனையும் அழைத்துச் செல்வதுண்டு.
பெரும்பாலும் இவனைத் தெரியாதவர்கள் இல்லை.
தெரியாதவர்களுக்கு இவனை அறிமுகம் செய்ய
நான் மறந்ததில்லை.

னைவி வந்த போதும்
மகள்கள்  பிறந்த போதும்  - எங்கள்
நட்பில் மட்டும் மாற்றமில்லை.
அவர்களுக்கு இவனைப் பிடிக்காது.
'என்னைக் கொலை செய்யத் திட்டமிடுகிறான்' எனக் கூறியுள்ளார்கள்.
'சீ ... போடி'
உன்னை  மணக்கும்   முன்பே
அவனை எனக்குத் தெரியும்.
நட்பில் விஷம் கலக்காதே - என
நா தெறிக்க வசை பாடியதுண்டு.

ப்படியாக எங்கள் நட்பு
காலங்காலமாக தொடர்ந்தது.
கண்ணதாசனும்  கவிதையும் போல.

தோ இன்று நான் இறந்து விட்டேன்.
' என்னை அவன் தான் கொன்றான்' என
என்னைச் சார்ந்த சமூகம் சொல்கிறது.
எனக்கும் சிறு சந்தேகம் தான்.
ஏனெனில் இன்று என் இறப்புக்கு அவன் வருந்தவில்லை.
ஓரத்தில் ஒரு புது நட்பு பிடித்திருக்கிறான்.
என்னை போலவே அவனும் இருக்கிறான்.
கையில் அவனைச் சுமந்தபடி.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Tuesday, March 26, 2013

சிறு கதையாய் சில கவிதைகள்

கண்ணதாசனின் கட்டில் குழந்தை

Copyright : Nilacharal.com

ண்ணதாசன் கட்டிலில்
கண்ணயர்ந்த கைக்குழந்தை
கண்விழித்தபின் கூறியது.
" அகரம் - எனக்கு அவள் கரம்." 
விஞர்கள் வீழ்வதுண்டு ;
கவிதைகள் வீழ்வதில்லை. 

 விலைமகள்
 
Copyright : Zedge.com


பூக்களை வட்டமிடும் பட்டுப்பூச்சியே ! - இந்த
பூவை வட்டமிடும் காரணமென்னவோ ? 
காலையில் சிரித்து மாலையில் மூடும் மலரும்
மாலையில் சிரித்து காலையில் மூடும் இவளும்
ஒன்றெனக் கண்டாயோ ! - அவள்
உள்ளம் தொட வந்தாயோ ? 


SMS

Copyright : Flickr


காலத்தின் உச்சம்
கடிதத்தின் எச்சம் 
குறுஞ்செய்திகள் !!

திருநங்கைகள்



குறிப்பு : இக் கவிதை நண்பர்களுடன் பெங்களூரில் இருந்து தொடர்வண்டியில் திரும்புகையில் ஏற்பட்ட அனுபவத்தைச் சார்ந்து எழுதப்பட்டது. இது யார்  மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. என் வார்த்தைகள் உங்கள் கண்ணாடி இதயங்களைக் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். 


ன்ன தான்
மதிப்பு, மரியாதை 
பரிதாபம், பாசம்
உங்கள்மேல் இருந்தாலும்....
அத்தனையையும் அழித்து விடுகிறீர்கள் !
டவர்களை* உரசி 
அதிகாரமாய்ப் பிச்சைக் கேட்கும்
அத்தனைத் தருணங்களிலும்.
திருநங்கைகளே !
தயவு செய்து வாங்கி விடாதீர்கள் ...
திருவோட்டு  நங்கைகள் என்ற பட்டத்தை ?? :-(


* குறிப்பாக கல்லூரி மற்றும் பதின்வயது இளைஞர்கள்.



 ஏன்? 

Copyright : The Hindu

குறிப்பு : இக்கவிதை ஹாக்கி இந்தியாவின் அதிகாரப்பூர்வமான தேசிய விளையாட்டு அல்ல என அறிவிப்பதற்கு முன்பு எழுதப்பட்டது


தாய்  தெருவில்
மனைவி மடியில் 
ஹாக்கி - கிரிக்கெட் !!! 


வரதட்சணை

Copyright : http://lipstickandpolitics.com


நாமும் ஊமைகள் தான்
திருமணத் திருவிழாக்களில்
வரதட்சணை.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



 
Related Posts Plugin for WordPress, Blogger...