Thursday, April 28, 2011

அன்புள்ள அம்மாவுக்கு ...

Photo Courtesy : http://www.mnn.com


குறிப்பு - இக்கவிதை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் வார விழாவையொட்டி நடைபெற்ற கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.

ன்புள்ள அம்மாவுக்கு
அன்பு (?) மகன் எழுதும்
அழகிய மடல் .
ச்சரியப்படாதே !
அம்மா
கடிதங்கள் ஆச்சரியம் தான்
கணினி உலகில்.
பாசங்கள் ஆச்சரியம் தான்
மனிதம் மடிந்த - இந்த மண்ணில்.

ன்றுமே! நீ எனக்கொரு
அதிசயம் அம்மா
அதிசயங்களே கண்டு வியக்கும்
அதிசயம் நீ அம்மா!

நான் கேள்விப்பட்டதுண்டு...
அம்மம்மா சொன்னார்கள்;
என்னை சுமப்பதற்கு முன்பு
"மலடி" என்ற பட்டத்தை 
மூன்றாண்டு சுமந்தயாமே !
அம்மம்மா சொன்னார்கள்.

ப்பத்தா சொன்னார்கள்;
மணம் முடிந்த முதல்
அரை வருடம் உனக்கு
அடுப்பங்கறை அத்துப்படி இல்லையாமே !
அப்பத்தா சொன்னார்கள்.

ப்பா சொன்னார்கள்;
அடுத்த வீட்டுடன் 
அடிக்கடி
அடிதடியில் நிற்பாயாமே !
அப்பா சொன்னார்கள்.

த்தனை முறை அழுதிருப்பாய் ..
இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு.
அத்தனைக்கும் மகுடமாய்
உன்னை நான் அழவைத்தேனே!
அன்றைய நாள்
என்னென்ன நினைத்திருப்பாய்?

த்தனையும் நான் அறிவேன்!
அம்மா! நான் அறிவேன்.
னைத்து குற்றங்களும்
மன்னிக்கப்படும் ஒரே நீதிமன்றம்
உன் உள்ளம் தான் அம்மா
குற்றவாளி நானாக இருக்கையில் மட்டும்.

ண்மையில் தான் படித்தேன்
தாய்ப்பால் ...
அறிவை வளர்க்குமென்று
அதிகமாய் வளர்ந்ததால் என்னவோ! - உன்னை 
அனுப்பி வைத்துவிட்டேன்.

ன்று ஒரு நாள் 
அநாதைச்  சிறுவன்...
அர்த்தநாரீஸ்வரர் சாலையில்
" அம்மா தேடி அலைகிறேன் " - என்றான்
அவனை அழைத்து
அவனைக் கேட்டேன் - அம்மா 
அவன் சொன்னான்.

" தாய் -  தெய்வம்     
அதனால் தான் என்னவோ ! - அவள்
காட்சி கிடைக்கிறது
தவமிருப்பவர்களுக்கு மட்டும்"
மேலும் சொன்னான்...
" பிறந்தவுடன் எறிந்து விட்டார்கள் ;
தப்பில்லை ... தாய்ப்பால் தந்தபின்பு எறிந்திருக்கலாம்
நானாவது நடந்திருப்பேன் - என்
தமிழ் போல் நொண்டாமல்.
 
தேடல் தான் வாழ்க்கை என்றான்  
தேடித் திரிகிறானாம் தினத்தோறும்
அவன் அன்னையை...
தேகத்தில் வலிமையில்லாமல்.
றுதியாக அவன் கேட்டுக் கொண்டான்
"தந்து விடுங்கள்
தைரியத்தை தூக்கி எரியும் முன்பே - இல்லை
கொன்று விடுங்கள்
எங்களை மண்ணில் மலரும் முன்பே "

வன் வார்த்தையில்
வந்து சென்றதம்மா - உன் முகம்.
மைகளுக்குள் சிறைபிடிக்க
முடியவில்லை...
சிதறிவிடுகிறது என் கண்ணீர் - அன்று 
நீ சிந்தியது போல.
தற்குள்  அவள் கேட்டு விடுவாள்; 
உன்னை மறக்காமல்...
" இன்னமும் உங்க அம்மா ஞாபகம் போகலையா?"        

ன்னமா! யோசிக்கிறாய்
கடிதம் எதற்காக என்று தானே ?
இதோ சொல்லி விடுகிறேன்
ன்னைவிட்டுச் சென்றவரிடம் கேட்டுச்சொல் ...
இரண்டு இடம் காலியாய் இருக்குமா? என்று.
ன் மகன் 
இரண்டு மாதமாய் தேடி அலைகிறான் - எங்களுக்கான
முதியோர் இல்லத்தை.



-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100




Monday, April 25, 2011

பனித்துளி சங்கர்



குறிப்பு : இக்கவிதை என் இணைய நண்பர் பனித்துளி  சங்கர் மற்றும் அவர் தமிழுக்காக  ...
அவரின் வலைப்பூ முகவரி -  http://www.panithulishankar.com/

னித்துளி
புனிதமானது ....
பனித்துளி
அழகானது...
பனித்துளி
உண்மையானது...
பனித்துளி
மென்மையானது...

ண்பா!!!
பனித்துளி மை  கொண்டு
ஆழ்கடல் அறிவு சேர்க்கும்
அற்புதம் யாரிடம் கற்றாய் ?

ரை நொடி உன் வலை படித்தால்
ஆழ் மனதில் பூ பூக்கும் !!
அடுத்த நொடி உன்னை வாழ்த்த
ஆயிரம் வார்த்தைகள் கை கோர்க்கும் !

ன் தமிழுக்கு மட்டும் தான்
தரம் உண்டு ..
தரணியில் உள்ள தவறுகளை தட்டிக் கேட்க !!

தொலைவில் நீ இருந்தாலும் - உன்
தமிழ் மட்டும் நான்
தொடும் தூரத்தில் ...

கட்டாய் பேசித்திரிபவர்களுக்கு மத்தியில்
பண்பாய்  பேசும்
பனித்துளி ...

ன் மைத்துளி
பிரபஞ்சத்தின் அறிவுத்துளி
காதலர்களின் கண்ணீர்த்துளி
தமிழின் தேன்த்துளி 
முகிலின் மழைத்துளி
காமத்தின் உயிர்த்துளி
கடவுளின் கவித்துளி

மொத்தத்தில் உன்னை
முத்தமிட மறந்தவர்களுக்கு  மத்தியில்
முத்தமிடுகின்றன என் தமிழ்  - உன்
தமிழை !!! 


-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Sunday, April 24, 2011

மலர் vs மங்கை

Copyright : Flickr


ன் அன்பே !
பூவிதழ்கள் சிந்தும் தேனும்
பூவை நின் இதழ்கள் சிந்தும் தமிழும்
ஒன்றோ! நன்றோ!

னதில் சத்தமிடும் உன் நினைவும்
மலரை சுற்றி வரும் மணமும்
ஒன்றோ! நன்றோ!
மலர்கள் பிரசவித்த கனியும் - உன்
நினைவுகள் பிரசவித்த கவிதையும்
ஒன்றோ! நன்றோ!

காசுக்காக கடத்தப்பட்ட கனியும் - உன்
கல்யாணத்திற்காக கடத்தப்பட்ட நம் காதலும்
ஒன்றோ! நன்றோ!

ன்பே ..
கனிகளின் கல்லறை தான்
மரங்களின் கருவறை - பலர்
காதலின் கல்லறை தான்
கவிதைகளின் கருவறை.

ன் மணவறையிலும்
என் பிணவறையிலும்
நாம் வேண்டுமானால் மறித்துப்  போகலாம் - ஆனால்
நம் நினைவுகள் !!! 
       


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100




Monday, April 18, 2011

ஏசுபிரான் அல்ல ....

Copyright : kmadisonmoore.blogspot.com

துன்பங்கள் உன்னைத் தொடும் போது ...
கண்ணை மூடு
கடவுளை நாடு
கவலைகள் விடு
கடமைகள் தொடு    
மனதின் வடு
என்னிடம் விடு 
மற்றவர்  துன்பங்களைத் தாங்கிக் கொள்ள 
நான் ஒன்றும் ஏசுபிரான் அல்ல ....
 
இருப்பினும் தாங்குகிறேன் ,
ஏனெனில் 
நீ எனக்கு மற்றவனல்ல !!!!




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


அட ! இன்னுமா தெரியவில்லை

Copyright : http://www.profimedia.com


ந்தோசமாய் மலர்ந்தது காலை - அந்த
சூரியனின் உதயத்தில் ...

ழக்கமாய் செல்லும் வகுப்பறைகள்
தினசரி வாசிக்கும் அதே முகங்கள்
எல்லாம் சரிவர இருந்தன முகத்தில் 
சந்தோசத்தைத் தவிர ...   

ந்நியர் போல் நண்பர்கள்
ஆளுக்கொரு திசையில்
அவரவர் புத்தகத்தோடு.  

முத்தமிட இதழ்களா தேவை?
அட! முத்தமிடுகின்றனவே  
விரல்களும் விழிகளும் 
புத்தகத்தின் பதிப்புகளோடு.

ச்சம், அடக்கம், அகங்காரம், அனுபவம்
அனைத்தும் காணலாம்
அவர்கள் விழிகளில் 
அன்று மட்டும்.

புத்தகத்தை சிறுபதிப்பு எடுத்து
சின்ன சின்ன இடைவெளிகளில்
சிதறாமல் ஒழித்து வைக்கும்
சில மாணவர்கள்    

மூளையை மட்டுமே நம்பி
முன்னுக்கு வரத் துடிக்கும்
முதல் மாணவர்கள்    

து நடந்தால் 
எனக்கென்ன என இருக்கும்
ஏராளமான மாணவர்கள் ! 

விதங்கள் ஆயிரமிருந்தாலும்
விழிகளில் ஒரே பயம் தான் .. 

திகாலை விழிப்பு
அரைகுறை சாப்பாடு
ஆண்டவநிடும் கோரிக்கை 
அவசரமாய் புரட்டிய பக்கங்கள்
அனைவரின் ஆசீர்வாதம்
அன்று மட்டும் பேசாத அவர்கள்
எல்லாம் இந்நாளின் சிறப்பு நிகழ்சிகள் !

 
த்தனை சிரமங்களுக்கு நடுவிலும்
அவர்களின் அவ(ள்/ன்)கள் சொல்லும்
ALL THE BEST ற்காக காத்திருந்த அவர்கள் !   

ட ! இன்னுமா தெரியவில்லை 
இன்று தான் அவர்களுக்கு பரீட்சை !!!




- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Related Posts Plugin for WordPress, Blogger...