Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts

Monday, April 4, 2011

மழையில் இரு மழலைகள்

Copyright : http://www.tastywallpapers.in


முத்தமிட்டுக்கொள்ளும்
மேகங்களின் எச்சில் துளிகளாய் ...
மண்ணில் விழுந்தது
மழைத்துளி.

ழையைக் கண்டு
மனதை மூடிக் கொள்ளும்
மனிதர்களுக்கு மத்தியில்….
மழைக்காக
மனிதர்களை மூடிக்கொள்ளும் – இந்த
மழலைகளை மதிப்போம்.

ழகான சோலை
அந்தி வேலை
ஆலமரத்தடி
ஆழிப்புதல்வர்கள்
அனைத்தையும் ரசிக்கும்
அழகான மழலைகள்
அங்கங்கள் மட்டும் அரவணைத்துக் கொள்ளாமல்.

ழையில் மழலைகள்
மனதில் ஆச்சரியமா?
ஆம்!
மழலைகளிடத்தில் பொய் வாழ்வதில்லை – இவர்கள்
மனங்களிடத்திலும் மெய் சாவதில்லை.

வர்கள்
மனங்களைப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு மழலைகள்:
மனங்களைப் புதைக்கத் தெரிந்தவர்களுக்கு காதலர்கள்.

ழியின் நீர்பட்டு
அங்கங்கள் அரைகுறையாய் தெரிந்தாலும்
கண்கள் மட்டுமே – பேசிக்கொள்ளும்
அற்புதக் கலையல்லவா காதல்.

ரசிப்பதற்கும் ருசிப்பதற்கும்
ஆயிரமாயிரம் உணவுகள்
இருந்தாலும்
அவள் இதழ்பட்ட சிறு
மழைத்துளிக்கு ஈடாகுமா!

யற்கையை ரசிக்க இரு கண்கள் போதாது
இவளை ரசிக்க எவன் கண்களும் போதாது.
மழைத்துளிகள் மரம் மேல் விழுந்து
இலைத்துளிகள் இவள் மேல் விழுந்து
இவள் துளிகள் அவன் மேல் விழுந்து
அவன் துளிகள் அவனியில் விழுந்தால்…
உனக்கும் காதல் வரும்
மழையின் மீது மோகம் வரும். 
 
த்தங்கள் கூட சங்கீதமாகும்
மழைத்துளி மண்ணில் விழும்போது.. 
மௌனங்கள்  கூட ராகங்களாகும்
இருவிழி அன்பில் இணையும் பொது.
மௌனங்களாலேயே
மனதைப் படித்துக்கொண்டிருந்தவர்களுக்கு
மழைத்துளி மறைந்தது
மனதில் பதியவில்லை.
மழை நின்றது.

வள் அவள் வீடு சென்றாள்
அவன் அவன் வீடு சென்றான்
மரம் மட்டும் அங்கேயே நின்றது
மற்றுமொறு  காதலர்களின் வரவுக்காக.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Related Posts Plugin for WordPress, Blogger...